தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Mushroom Pasta Recipe

Mushroom Pasta Recipe: ருசியான காளான் பாஸ்தா செய்முறை

I Jayachandran HT Tamil
Jan 28, 2023 05:37 PM IST

குழந்தைகளுக்குப் பிடித்தமான, சத்தான காளான் பாஸ்தா செய்முறை பற்றி இங்கு காணலாம்.

காளான் பாஸ்தா
காளான் பாஸ்தா

ட்ரெண்டிங் செய்திகள்

காளான் பாஸ்தா செய்யத் தேவையானவை :

பாஸ்தா – 150 கிராம்

வெங்காயம் – 1

பூண்டு – 5-6 பற்கள்

மொசரெல்லா சீஸ் – ¼ கப் (Mozzarella cheese)

கோதுமை / மைதா – 2 மேஜைக் கரண்டி

பால் – 1 கப்

காய்ந்த துளசி – 1 தேக்கரண்டி

காளான் – 200 கிராம்

காய்ந்த ஆர்கனோ – 1 தேக்கரண்டி

நல்ல மிளகு தூள் – தேவையான அளவு

பட்டர் – 2 மேஜைக் கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்பு வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும

ஒரு பெரிய பாத்திரத்தில் நீருடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் பாஸ்தாவை போட்டு வேக வைக்கவும்.

7-9 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி பாஸ்தாவை தனியே வைக்கவும்.

ஒரு சாஸ் பானில் பட்டரை விட்டு சூடாக்கவும்.வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும். தீயை குறைத்து விட்டு பால் சேர்த்து நன்கு கலக்கவும். சீஸ், நல்ல மிளகு தூள், காய்ந்த துளசி, காய்ந்த ஆர்கனோ மற்றும் உப்பு சேர்க்கவும்.

பின்பு வேக வைத்த பாஸ்தா சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும். காளான் பாஸ்தா ரெசிபி ரெடி! பரிமாறவும்

WhatsApp channel

டாபிக்ஸ்