தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mushroom Kothu Curry : மணமணக்கும் மஷ்ரூம் கொத்து கறி! சுவையில் ஆளை அசத்தும்! மசாலாப் பொடியுடன் 2 ரெசிபி!

Mushroom Kothu Curry : மணமணக்கும் மஷ்ரூம் கொத்து கறி! சுவையில் ஆளை அசத்தும்! மசாலாப் பொடியுடன் 2 ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Jun 15, 2024 04:47 PM IST

Mushroom Kothu Curry : மணமணக்கும் மஷ்ரூம் கொத்து கறி செய்வ எப்படி? சுவையில் ஆளை அசத்தும் இதை செய்ய ட்ரை மசாலாப் பொடி தேவை. அதனுடன் இங்கு 2 ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

Mushroom Kothu Curry : மணமணக்கும் மஷ்ரூம் கொத்து கறி! சுவையில் ஆளை அசத்தும்! மசாலாப் பொடியுடன் 2 ரெசிபி!
Mushroom Kothu Curry : மணமணக்கும் மஷ்ரூம் கொத்து கறி! சுவையில் ஆளை அசத்தும்! மசாலாப் பொடியுடன் 2 ரெசிபி!

மஸ்ரூம் கொத்துக்கறி ட்ரை மசாலாப் பொடி செய்வதற்கு

தேவையான பொருட்கள்

வரமல்லி – ஒரு ஸ்பூன்

கிராம்பு – 4

ட்ரெண்டிங் செய்திகள்

சோம்பு – ஒரு ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

ஸ்டார் சோம்பு – 1

வர மிளகாய் – 4

கறிவேப்பிலை – ஒரு கொத்து

முந்திரி – 10

கசகசா – ஒரு ஸ்பூன்

செய்முறை

பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமல்லி, ஸ்டார் சோம்பு, மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய், முந்திரி, கறிவேப்பிலை என அனைத்தையும் கடாயில் ஒன்றாக சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும்.

வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை மட்டும் கடைசியாக சேர்க்கவேண்டும். கசகசாவை அடுப்பை அணைத்துவிட்டு சேர்க்கவேண்டும்.

அது அந்த சூட்டிலே வறுபட்டால் போதும். அடுப்பு எரியும்பபோது சேர்த்தால், சிறிய விதைகளாக இருப்பதால், அது கருகிவிடும்.

மஸ்ரூம் கொத்துக்கறி செய்ய

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

சோம்பு – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கஷ்மீரி மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

மஸ்ரூம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை

கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் சோம்பு தாளிக்கவேண்டும். வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவேண்டும்.

அனைத்தும் பச்சை வாசம் போனவுடன் இந்த பொடிகளை சேர்க்கவேண்டும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, அரைத்து வைத்துள்ள மசாலாப்பொடி என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் மல்லித்தழை தூவி இறக்கினால், சூப்பர் சுவையில் நன்றாக இருக்கும்.

இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, ரொட்டி, பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

சூப்பர் சுவையானதாக இருக்கும். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும் மீண்டும் ருசிக்க வேண்டும் என எண்ணுவீர்கள். அத்தனை சுவை நிறைந்ததாக இருக்கும். காளான் பிரியர்களுக்கு இது மேலும் மகிழ்ச்சியைத்தரும் உணவாகும்.

காளானின் நன்மைகள்

வயிற்று பிரச்னை தீரும் காளானில் வயிற்று புண்ணை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. எலும்புகளை பலமாக்கும் காளானில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

பசியை குறைக்கிறது காளானை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள பசியும் அடிக்கடி எடுக்காது. காளான் நம் சருமத்திற்கும் நன்மை தரும். காளானை ஃபிரஷ்ஷாக சமைக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்து சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.