Murungai Pisin: வயகரா மாத்திரைகளுக்கு சமமான ஆற்றல் தரும் இந்த ஒன்னு போதுமே.. ஒரே வாரத்தில் ஆண்கள் ஆனந்தத்தில் துள்ளலாம்!-murungai pisin this one is as powerful as viagra pills men can jump in bliss in one week - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Murungai Pisin: வயகரா மாத்திரைகளுக்கு சமமான ஆற்றல் தரும் இந்த ஒன்னு போதுமே.. ஒரே வாரத்தில் ஆண்கள் ஆனந்தத்தில் துள்ளலாம்!

Murungai Pisin: வயகரா மாத்திரைகளுக்கு சமமான ஆற்றல் தரும் இந்த ஒன்னு போதுமே.. ஒரே வாரத்தில் ஆண்கள் ஆனந்தத்தில் துள்ளலாம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 23, 2024 12:31 PM IST

Murungai Pisin :டெஸ்டோஸ்டிரோன் குறைய ஆரம்பிக்கும் போது ஆண்கள் எப்போதும் வலிமை இழந்துபோல் சோர்வாக காணப்படுவார்கள். தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதோடு விறைப்பு தன்மையும்குறைய ஆரம்பிக்கும். விந்து குறைவாக வெளியோறும். இதற்கு வயகரா மாத்திரைகளுக்கு சமமான ஆற்றல் தரும் முருங்கை பிசின் பற்றி பார்க்கலாம்

வயகரா மாத்திரைகளுக்கு சமமான ஆற்றல் தரும் இந்த ஒன்னு போதுமே.. ஒரே வாரத்தில் ஆண்கள் ஆனந்தத்தில் துள்ளலாம்
வயகரா மாத்திரைகளுக்கு சமமான ஆற்றல் தரும் இந்த ஒன்னு போதுமே.. ஒரே வாரத்தில் ஆண்கள் ஆனந்தத்தில் துள்ளலாம்

ஆர்வமின்மை

இது போன்ற பிரச்சனைகளால் பாலியல் செயல்பாடுகளில் ஆண்களுக்கு ஆர்வம் குறைய தொடங்குகிறது. இது ஆண்மை குறைவிற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

விந்து வெளியேற்றம்

இப்படி ஆண்மை குறைபாடு பிரச்சனை இருப்பதால் முழுமையாக தம்பதிகள் திருப்தி அடையும் முன்னரே விந்து வெளியேறுகிறது. இது ஆண்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் மேலும் அவர்களுக்குள் ஒரு நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

காரணம்

ஆண்களின் இந்த நிலைக்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு ஆகும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் என்பது விந்தணுக்களை உற்பத்தி செய்யும். டெக்ஸ்டோஸ்டிரோன் தான் ஆண்களின் பாலியல் உணர்ச்சியை தூண்டி அதன் செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

டெஸ்டோஸ்டிரோன் குறைவின் பக்கவிளைவுகள்

டெஸ்டோஸ்டிரோன் குறைய ஆரம்பிக்கும் போது ஆண்கள் எப்போதும் வலிமை இழந்துபோல் சோர்வாக காணப்படுவார்கள். தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதோடு விறைப்பு தன்மையும் அவர்களுக்கு குறைய ஆரம்பிக்கும். விந்து குறைவாக வெளியோறும்.

டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டிற்கான காரணம்

இளம் வயதில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆண்களின் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஒரு அருமையான உணவு குறித்து இங்கு பார்க்கலாம். வயகரா மாத்திரைகளுக்கு சமமான ஆற்றல் தரும் முருங்கை பிசின்தான் அது.

முருங்கை பிசினை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்

நாட்டு மருந்து கடைகளில் முறுங்கை பிசின் கிடைக்கும். அதை வாங்கி நன்றாக கழுவி 3 நாட்கள் வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் இருந்து ஒரு 3 பீஸ் முருங்கை பிசினை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு போதுமான அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும். இரவில் ஊறவைத்தால் காலையில் அது நன்றாக ஊறி உப்பி இருக்கும். அதில் இருந்து ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து காலையில் குடிக்க வேண்டும். இந்த தண்ணீரை உடனே குடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரை மணி நேரம் குடிக்க வேண்டும். பின்னர் அதே பாத்திரத்தில் மீண்டும் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும். அந்த தண்ணீரை இரவில் குடிக்க வேண்டும்.

அடுத்த நாளுக்கு புதிதாக மீண்டும் முறுங்கை பிசினை ஊற வைத்து குடிக்க வேண்டும்.

முறுங்கை பிசினின் நன்மைகள்

இப்படி ஒரு வாரம் முருங்கை பிசின் ஊற வைத்த தண்ணீரை குடித்தால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மைகளை அதிகரிக்க உதவும். ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். உடலுறவுக்கான ஆற்றலை அதிகரித்து நீண்ட நேரம் இன்பம் பெற உதவும். ஆண்களுக்கு தானாக விந்து வெறியேறுவது தடையாகும். முக்கியமாக இந்த முருங்கை பிசின் வயகரா மாத்திரிகள் தரும் ஆற்றலை ஆண்களுக்கு தரும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.