Murungai Keerai Soup : இந்த ஒரு பானம் போதும்! மொத்த நரம்பு மண்டல பிரச்னைகளும் குணமாகும்! ரத்த ஓட்டத்தை சீராக்கும்!
Murungai Keerai Soup : இந்த ஒரு பானம் போதும். ஒட்டுமொத்த நரம்பு மண்டல பிரச்னைகளும் குணமாகும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். பிரச்னை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள் பலன் தெரியும்
இரவில் தூங்கும்போது பின்னங்கால் பிடித்து இழுப்பது. சியாடிக்கா நரம்பில் பிரச்னை ஏற்படுவது. முழங்கால் வலி, மூட்டு வலி, நரம்புகளில் அடைப்பு, நரம்பு வீக்கம், நரம்பு பலவீனம், நரம்பு கிள்ளி இழுப்பது, நரம்பு சுத்தமின்மை இவையனைத்தையும் இயற்கை முறையில் 100 சதவீதம் சரிசெய்யக்கூடிய அருமையான மருத்துவ குறிப்பு வேண்டுமா? இதோ தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த பானத்தை 5 நாட்கள் குடித்துக்கொண்டு வந்தாலேபோதும். இந்த பிரச்னைகள் அனைத்தும் குணமாகும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்படுவதுதான் இதுபோன்ற பிரச்னைக்கு காரணமாகிறது. குறிப்பாக வைட்டமின் பி 12, வைட்டமின் இ குறைபாடு ஏற்படுவது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களின் குறைபாடுகள் இருந்தாலும், இதுபோல் நரம்புகளில் பலவீனம் ஏற்படும். ரத்தம் சுத்தமின்மை இருந்தாலும் இந்தப்பிரச்னை ஏற்படும்.
முருங்கைக்கீரையில் உடலுக்கு தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மற்ற கீரை வகைகளைவிட முருங்கைக்கீரையில் 25 சதவீதம் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இந்த இரும்புச்சத்து நமது உடலில் உள்ள ரத்தத்ததை சுத்தம் செய்யும். புது ரத்தத்தை ஊறவைக்கும். உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். நரம்பு சம்மந்தமான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும்.
நரம்புகளில் அடைப்பு, வீக்கம், வலி என அனைத்தையும் சரிசெய்யும். கால்சியம், இரும்புச்சத்தை அதிகரிக்கச் செய்து, ஒவ்வொரு மூட்டுகளிலும் ஏற்படக்கூடிய வலியை சரிசெய்யும். இரவில் தூங்கும்போது சிலருக்கு நரம்பு பிடித்து இழுக்கும் அதை சரிசெய்யும்.
ஓமம், செரிமான சம்மந்தமான பிரச்னைகளை சரிசெய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கை-கால் வலி, வீக்கம், மூட்டு வலி என அனைத்தையும் குணப்படுத்தும். உடல்லி உள்ள கெட்ட வாயுக்களை வெளியேற்றும். ரத்தத்தை சுத்தம் செய்யும்.
பட்டை, நரம்பு வீக்கம், நரம்பு அடைப்பை சரிசெய்யும், மூட்டு வலியை குறைக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துக்கொள்வது நல்லது. வாயு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும்.
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி
ஓமம் – 1 ஸ்பூன்
பட்டை – அரை
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
ஒரு டம்ளர் தண்ணீரில் இது மூன்றையும் சேர்த்து தண்ணீர் நிறம் மாறி வரும் வரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி உப்பு சேர்த்து பருக வேண்டும்.
உப்பு சேர்க்காமலும் பருகலாம். இதை காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். மாலையில் அருந்தும் தேநீருக்கு பதிலாக அருந்தலாம். இளஞ்சூடான பதத்தில், கொஞ்சம் கொஞ்சமாக பருகவேண்டும். ஒரேடியாக குடிக்ககூடாது.
உடல் முழுவதும் ரத்தத்தை சீராக பாய வைக்கும். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பருகலாம். பக்க விளைவுகள் இருக்காது. தேவைப்பட்டால் இதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளலாம். மஞ்சள் தூளில் அழற்சிக்கு எதிராக பொருட்களும் உள்ளது. மேலும் அது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. நமது உடலை சுத்தம் செய்ய இந்த பானம் உதவுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்