தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Murungai Keerai Kootu: சத்தான முருங்கை கீரை கூட்டு.. வாரம் ஒருமுறையாவது சாப்பிடுங்க!

Murungai Keerai Kootu: சத்தான முருங்கை கீரை கூட்டு.. வாரம் ஒருமுறையாவது சாப்பிடுங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 09, 2024 11:45 AM IST

முருங்கை கீரை உடலுக்கு மிகவும் நல்லது. முருங்கை கீரையில் பெரும்பாலானோர்பொரியல் தான் செய்கின்றனர். இப்படி ஒரு முறை முருங்கீரை கூட்டு செய்து பாருங்கள். ருசி அட்டகாசமாக இருக்கும்

முருங்கை கீரை கூட்டு
முருங்கை கீரை கூட்டு

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

முருங்கை கீரை

பாசிப்பருப்பு

வெங்காயம்

தக்காளி

பூண்டு

சீரகம்

எண்ணெய்

கடலை பருப்பு

கடுகு

உளுந்தம்பருப்பு

உப்பு

பெருங்காயம்

கறிவேப்பிலை

செய்முறை

2 கப் முருங்கை கீரையை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 100 பாசிப் பருப்பை தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். பாசிப்பருப்பு 10 நிமிடம் வெந்த பிறகு அதில் முருங்கை கீரையை சேர்க்க வேண்டும். அதில் 15 சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு தக்காளி பழத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் 5 பல் பூண்டை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் ஒரு ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

கீரை நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். ஒரு தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் ஒரு ஸ்பூன் கடலை பருப்பை சேர்த்து கொள்ள வேண்டும். இரண்டு மிளகாய் வத்தலையும் சேர்த்து கொள்ள வேண்டும். கடுகு உளுந்தை சேர்த்து பொரிய விட வேண்டும். கடுகு வெடித்த பிறகு அதில் 10 சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் பெருங்காய தூளை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த தாளிப்பை வெந்த கீரையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ருசியான முருங்கை கீரை கூட்டு ரெடி தான்

இந்த கூட்டு சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

முருங்கை கீரையின் நன்மைகள்

இரும்புச்சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ளன. முருங்கையின் கீரை மட்டுமல்லாமல் அதன் பூவையும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல எலும்புகளும், பற்களும் வலிமை பெறும். கண் கோளாறுகள், பித்தம் தொடர்பான நோய்களில் இருந்து நிவாரணம் தரும். அதேபோல் முருங்கை கீரையில் ஏராளமான மருத்துவ மருத்துவ குணம் நிறைந்தது. இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கும்.

வாரத்தில் ஒருநாள் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் தீரும். முக்கியமாக வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது.  அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தால் சாதாரண தலைவலியில் தொடங்கி இருமல், சளித்தொல்லைகளில் இருந்து விடுபடலாம். காரணம் இந்தக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. உடல் வலி ஏற்பட்டால் முருங்கைக்கீரையில் ரசம் அல்லது சூப் வைத்துக் குடித்து வந்தாலே நிவாரணம் கிடைக்கும்.

குழந்தை பெற்ற தாய்மாருக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. முக்கியமாக தாய்ப்பால் ஊறுவதற்கு முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தாலே போதும். குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்க முருங்கைக்கீரை சமைத்துச் சாப்பிட வேண்டியது அவசியம். மேலும் முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் தாய்மாருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் நன்மை கிடைக்கும். 

WhatsApp channel