12 Benefits of Murungai Keerai : ‘முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான்’ இதன் அர்த்தமே அதன் சிறப்புகளைக் கூறும்!-murungai keerai benefits the meaning of murungai planter will leave empty handed speaks of its benefits what is it - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  12 Benefits Of Murungai Keerai : ‘முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான்’ இதன் அர்த்தமே அதன் சிறப்புகளைக் கூறும்!

12 Benefits of Murungai Keerai : ‘முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான்’ இதன் அர்த்தமே அதன் சிறப்புகளைக் கூறும்!

Priyadarshini R HT Tamil
Aug 31, 2024 11:02 AM IST

Murungai Keerai Benefits : ‘முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான்’ இதன் அர்த்தமே அதன் சிறப்புகளைக் கூறும், முருங்கைக்கீரையில் உள்ள 12 நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

12 Benefits of Murungai Keerai  : ‘முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான்’ இதன் அர்த்தமே அதன் சிறப்புகளைக் கூறும்!
12 Benefits of Murungai Keerai : ‘முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான்’ இதன் அர்த்தமே அதன் சிறப்புகளைக் கூறும்!

‘முருங்கை வைத்தவன் வெறுங்கையோடு போவான்’

மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு பழமொழியாகும். முருங்கை இலை, உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள உதவும் ஒரு மூலிகை அல்லது கீரை. இதை உணவில் தினமும் பயன்படுத்தினால், அவர்கள் வயதானாலும் குச்சி ஊன்றி நடக்கவேண்டிய தேவையில்லை. அதைத்தான், முருங்கை வைத்தவன் வெறுங்கையோடு போவான், முருங்கையை இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அது பல்வேறு நன்மைகளைத்தரும். இதனால் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வயதானாலும் குச்சியூன்ற தேவையில்லை என்பதை குறிக்கிறது.

முருங்கைக்கீரையின் நன்மைகள்

சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

முருங்கைக்கீரையில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சருமம் மற்றும் தலைதுடி என அனைத்தையும் அதிகரிக்கிறது. ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைப் போக்கி, சருமத்திற்கு முருங்கை இலைகள் பளபளப்பைத்தருகிறது. சரும சுருக்கங்களைப் போக்குகிறது. இது தலையில் பொடுகைக் குறைக்கிறது. தலைமுடியை அடர்த்தியாக வளரச்செய்கிறது. தலைமுடியின் வேர்க்கால்களுக்கு வலுவைத்தருகிறது. இதனால் தலைமுடி வலுவாகிறது. முருங்கையிலை எண்ணெய் சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களை சரிசெய்ய உதவுகிறது. இதனால் அது முகப்பருவை கட்டுப்படுத்தும் அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. சருமத்துக்கு பளபளப்பைக் கொடுத்து, உங்கள் சருமத்தை சுத்தப்படுத்துகிறது.

கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

முருங்கையிலையில் முக்கிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அதில் பீட்டாகரோட்டின் கண் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது. இவை கண்ணில் மங்கலான பார்வை ஆரம்ப காலத்திலேயே ஏற்படாமல் தடுக்கிறது. மற்ற கண் தொடர்பான பிரச்னைகளையும் சரிசெய்கிறது.

கல்லீரல் நோய்களை குணப்படுத்துகிறது

கல்லீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு முருங்கை இலை மிகவும் நல்லது. கொழுப்பு கல்லீரல் டிபி ஆகியவற்றுக்கும் உதவுகிறது. முருங்கை இலை அதிகம் உணவில் சேர்க்கும்போது, அது காசநோய் மருந்துகள் ஏற்படும் பக்கவிளைவுகளைக் குறைக்கிறது. உங்கள் செல்களை விரைந்து சரிசெய்கிறது. முருங்கை இலையில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நுரையீரலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது.

நரம்பு மண்டல நோய்களைத் தடுக்கிறது

முருங்கை இலையில் உள்ள வைட்டமின் சி மற்றும் இ சத்துக்கள், நரம்பியல் சிதைவை எதிர்த்து போராடுகிறது. இது மூளை மற்றும் நரம்பியல் இயக்கங்களை அதிகரிக்கிறது. முருங்கையிலை அடிக்கடி ஏற்படும் தலைவலிக்கு மருந்தாகிறது. இது செரோட்டினின், டோப்பமைன் தற்றும் நோராடிரெனாலின் ஆகியவை சுரக்க காரணமாகிறது. இவையனைத்தும் உங்கள் மனநிலையை மாற்றும் ஹார்மோன்கள். ஆகும். இது உங்கள் உடலில் பதில்அளிக்கும் தூண்டுதலை அதிகப்படுத்துகிறது.

ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது

நீங்கள் உயர் ரத்த அழுத்த கோளாறுகளால் அவதியுற்றீர்கள் என்றால், முருங்கை இலைகள் அதற்கு உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தி இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உங்கள் உடலுக்கு இதயத்துக்கு எண்ணற்ற நன்மைகளைத்தருகிறது.

நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கிறது

உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அது நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் உடலின் உறுப்புகள் சேதமடைகிறது. இதனால் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகிறது. எனவே முருங்கை இலைகளை சாப்பிடுவது உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை முறையாக வைக்க உதவுகிறது.

மூட்டு வலியை குணப்படுத்துகிறது

முருங்கைக்கீரையில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், ஆர்த்ரிட்டிஸ் ஏற்படாமல் காக்கிறது. இதில் உள்ள எண்ணற்ற இரும்பு மற்றும் கால்சியச் சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் பற்களை வலுவாக்குகிறது.

புற்றுநோயை சரியாக்குகிறது

முருங்கையிலையில் உள்ள சில உட்பொருட்கள் புற்றுநோயைத் தடுக்கிறது. நியாசிமின்சின் என்ற உட்பொருள், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது. முருங்கை இலைகள் மட்டுமல்ல, மற்ற பாகங்களும் உதவுகிறது.

சிறுநீரகக் கற்களை கரைக்கிறது

சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரித்து, சிறுநீரகக் கற்களை கரைக்கிறது. இது உடலில் உள்ள மினரல்கள் கற்களாக உருவாகாமல் தடுக்கிறது.

வீக்கத்தைப்போக்குகிறது

திசுக்களில் நீர்சேர்ந்து ஒயிடெமா என்ற நோயை உருவாக்குகிறது. இதனால் உடலில் வீக்கம் ஏற்படுகிறது. ஒயிடெமா ஏற்பட்டால் காதைச் சுற்றி வீக்கம் ஏற்படும். முருங்கையிலை எண்ணெயை அதில் தடவினால், அது ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது

முருங்கைக்கீரை சுவாசக் கோளாறுகளை சரிசெய்கிறது. ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களை குணப்படுத்துகிறது. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், சுவாச உருப்புகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, நுரையீரலின் செயல்திறனையும், அதன் இயக்கத்தையும் அதிகரிக்கிறது.

ரத்தம் தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது

அனீமியா போன்ற ரத்தம் தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது. முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் அதிகப்படியான இரும்புச்சத்துக்கள் சேர்வதை தடுக்கிறது. இதனால் ரத்தம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.