தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Murungai Fish Kulambu Try This Broth With Murungai Fish Gravy Its Taste Is Unique

Murungai Fish Kulambu: முருங்கைகாய் மீன் சேர்த்து இப்படி ஒரு குழம்பு செஞ்சு பாருங்க.. அதன் ருசியே தனிதான்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 25, 2024 09:53 AM IST

முருங்கைகாய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மீன் சூப்புக்கும் ரசிகர்கள் அதிகம். இந்த நிலையில் முருங்கைகாயும் மீனும் சேர்த்து செய்யும் இந்த ரெசிபி அட்டகாசமான சுவை தரும்.

முருங்கை மீன் குழம்பு
முருங்கை மீன் குழம்பு

ட்ரெண்டிங் செய்திகள்

மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

மீன் - அரக்கிலோ

முருங்கை காய் - ஒன்று

தக்காளி - ஒன்று

புளி - எலுமிச்சை அளவு

வெங்காயம் - ஒன்று

வெந்தயம் - கால் ஸ்பூன்

பூண்டு பல் - நான்கு

கறிவேப்பிலை - குப்பேடு

மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்

மிளகாய் - ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி தூள் - ஒரு ஸ்பூன்

தண்ணீர் - போதுமானது

கடுகு - ஒரு ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

செய்முறை

1. மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தனியாக வைக்க வேண்டும்.

2. பிறகு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் வெந்தயத்தை சேர்க்க வேண்டும்.

சேர்க்க வேண்டும். கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

4. பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

5. அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

6. பின் முருங்கைக்காய் துண்டுகளை சிறிய துண்டுகளாக வெட்டி கலக்கவும்.

7. தக்காளி விழுது சேர்த்து மூடி வைக்கவும். இப்படி மூடி வைப்பதால் தக்காளி விரைவில் மென்மையாகும்.

8. தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் மிளகாய் மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

9. மீண்டும் மூடி ஐந்து நிமிடங்கள் சமைக்க வேண்டும்.

10. அதனுடன் புளி சாறு சேர்த்து கலக்கவும்.

11. குழம்பு கொதிக்கும் போது, ​​ மீன் சேர்த்து கொள்ள வேண்டும்.

12. குறைந்த தீயில் சிறிது நேரம் சமைக்க வேண்டும். எண்ணெய் மேலே மிதக்கும் வரை சமைக்கவும்.

13. மேலே கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவுதான், சுவையான முருங்கைக்காய் மீன் குழம்புரெடி

14. சூடான சாதத்துடன் சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

15. காலையில் சமைத்ததை இரவிலும் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

16. மீன் நன்றாக சாறு உறிஞ்சி இருக்கும் என்பதால் துண்டுகள் சுவையாக இருக்கும்.

முருங்கைகாய் மற்றும் மீன் இரண்டும் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மீன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்பு சேருகிறது. எவ்வளவு மீன் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது. 

இந்த மீன் குழம்பு சாதம் மட்டும் அல்ல இட்லி தோசைக்கும் அருமையான காமினேஷன்.

குறிப்பு: குழம்பு அதிகமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் அதில் கொஞ்சமாக தேங்காய் மிளகாய் வத்தல் சோம்பு சின்ன வெங்காயம் அரைத்து சேர்த்து கொள்ளலாம். அதுவும் ருசியை அதிகரித்து கொடுக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்