Muringa Poori : பார்ப்பவர் கண்களைக் கவரும் பச்சை வண்ண பூரி! சாஃப்ட்டான, ஹெல்தியான காலை உணவு!
Muringa Poori : பார்ப்பவர் கண்களைக் கவரும் பச்சை வண்ண பூரி, சாஃப்ட்டான, ஹெல்தியான காலை உணவு. முருங்கைக்கீரை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்கீரை பூரி செய்வது எப்படி எனத்தெரிந்துகொள்ளுங்கள்.
முருங்கைக்கீரை உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது உங்கள் உடலின் ஆரோக்கியத்தை அதிகரித்து, நோய்களைத் தடுக்கிறது. இந்த முருங்கைக்கீரை இந்திய உணவு வகைகளில் பரவலாகப்பயன்படுத்தப்படுகிறது. இதை வதக்கி சாப்பிடுகிறார்கள் அல்லது சூப், ரசம் அல்லது பச்சையான அரைத்து எடுத்துக்கொள்கிறார்கள். முருங்கைக்கீரையில் உங்கள் உடலுக்கு தேவையான எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இது உங்கள் உடலில் எண்ணற்ற உறுப்புகள் நன்றாக இயங்க உதவுகிறது. முருங்கைகீரையில் வைட்டமின்கள் ஏ, பி1 (தியாமின்) பி2 (ரிபோஃப்ளாவின்) பி3 (நியாசின்), வைட்டமின் சி (ஆஸ்கார்பிக் அமிலம்) ஆகியவை உள்ளன. இதில் உள்ள மினரல்கள் தவிர மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்துக்கள், சிங்க், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. முருங்கைக்கீரையில் 18 வகை அமினோ அமிலங்கள் உள்ளன. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. செல் சேதத்தை குறைத்து, இதயநோய்கள் மற்றும் நீரிழிவு ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன.
எண்ணற்ற நன்மைகள் கொண்ட முருங்கைக்கீரையில் நாம் பூரி செய்ய முடியும். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
அரைக்க தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய் – 2
சீரகம் – அரை ஸ்பூன்
மாவு பிசைய தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – ஒரு கப்
உப்பு – சிறிதளவு
ஓமம் – கால் ஸ்பூன்
வெண்ணெய் – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஆய்ந்து கழுவிய முருங்கைக்கீரை, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கப் கோதுமை மாவில், அரைத்த முருங்கைக்கீரை விழுது, உப்பு மற்றும் ஓமம் கலந்து பிசைந்துகொள்ளவேண்டும்.
நன்றாக பிசைந்து அரை மணிநேரம் ஊறவிடவேண்டும். பின்னர் இதை சிறு உருண்டைகளாக உருட்டி, தேய்த்து, எண்ணெயில் பூரிகளாக பொரித்து எடுக்கவேண்டும்.
உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கும் இந்த முருங்கைக்கீரை பூரியை உங்கள் காலை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு மகிழுங்கள்.
இந்த பூரிக்கு தொட்டுக்கொள்ள சன்னா மசாலா இருந்தால் போதும். முருங்கைக்கீரையைப்பார்த்தால் தூர ஓடும் குழந்தைகளும் விரும்பி வந்து உண்பார்கள். மேலும் இந்த பூரி பச்சை நிறத்தில் பார்ப்பவர்களை கவரும் வகையில் இருக்கும். இந்த பூரியை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பீர்கள். அத்தனை சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்.
முருங்கைக்கீரையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. மற்ற கீரைகளைவிட முருங்கைக்கீரை எண்ணற்ற சத்துக்களை அள்ளி வழங்குகிறது. அதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
முருங்கைக்கீரையின் நன்மைகள்
சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
கல்லீரல் நோய்களை குணப்படுத்துகிறது.
நரம்பு மண்டல நோய்களைத் தடுக்கிறது.
ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கிறது.
மூட்டு வலியை குணப்படுத்துகிறது.
புற்றுநோயை சரியாக்குகிறது.
சிறுநீரகக் கற்களை கரைக்கிறது.
வீக்கத்தைப்போக்குறிது.
ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.
ரத்தம் தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்