Muringa Leaves Benefits : முருங்கைக்கீரை ஏன் சூப்பர் ஃபுட்; ஆரோக்கியத்தை அதிகரிக்க இயற்கை தந்த வரம்; 8 காரணங்கள் தான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Muringa Leaves Benefits : முருங்கைக்கீரை ஏன் சூப்பர் ஃபுட்; ஆரோக்கியத்தை அதிகரிக்க இயற்கை தந்த வரம்; 8 காரணங்கள் தான்!

Muringa Leaves Benefits : முருங்கைக்கீரை ஏன் சூப்பர் ஃபுட்; ஆரோக்கியத்தை அதிகரிக்க இயற்கை தந்த வரம்; 8 காரணங்கள் தான்!

Priyadarshini R HT Tamil
Jan 12, 2025 06:00 AM IST

முருங்கைக்கீரையில் உள்ள நன்மைகள் என்ன?

Muringa Leaves Benefits : முருங்கைக்கீரை ஏன் சூப்பர் ஃபுட்; ஆரோக்கியத்தை அதிகரிக்க  இயற்கை தந்த வரம்; 8 காரணங்கள் தான்!
Muringa Leaves Benefits : முருங்கைக்கீரை ஏன் சூப்பர் ஃபுட்; ஆரோக்கியத்தை அதிகரிக்க இயற்கை தந்த வரம்; 8 காரணங்கள் தான்!

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்தது

முருங்கைக்கீரையில் குயிர்சிட்டின் மற்றும் குளோரோஜெனிக் ஆசிட் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. இது உங்கள் உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைப் போக்குகிறது. வயது அதிகரிக்கும்போது, ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.

இதய ஆரோக்கிய மேம்பாடு

முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. இது இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. வைட்டமின் ஈ, இரும்புச்சத்துக்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ஒரு முழுமையான ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்.

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

முருங்கைக்கீரையில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

முருங்கைகீரை உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள உட்பொருட்கள் இன்சுலின் சென்சிட்டிவிட்யை அதிகரிக்கிறது.

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

இதில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. அமினோ அமிலங்களும் கொண்டது. இது மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது மூளையின் இயக்கத்தை அதிகரிக்கிறது. நினைவாற்றலை மேம்படுத்துகிறது. மூளையின் திறன்களை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உதவுகிறது

இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்துக்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது. உடலில் உள்ள தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது.

வீக்கத்துக்கு ஏதிரான குணங்கள்

முருங்கைக்கீரையில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இது நாள்பட்ட பிரச்னைகளான ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.