Mundhiri Kothu : பாசிபயிறு முந்திரி கொத்து! பாரம்பரிய சிற்றுண்டி! இதோ ரெசிபி!
Mundhiri Kothu : பாசிபயிறு முந்திரி கொத்து. பாரம்பரிய சிற்றுண்டி, இதோ ரெசிபி!
தேவையான பொருட்கள்
பாசி பயிறு – 1 கப்
ட்ரெண்டிங் செய்திகள்
ஏலக்காய் – 2
வெல்லம் – முக்கால் கப்
சுக்குப்பொடி – கால் ஸ்பூன்
தேங்காய் – கால் கப்
வெள்ளை எள் – ஒரு ஸ்பூன்
அரிசி மாவு – ஒரு கப்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
எண்ணெய் – பொரித்து எடுக்க
மைதா அல்லது கார்ன் ஃப்ளோர் – 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு கப் பாசிப்பயிறை குறைவான தீயில் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பொன்னிறமானாதும், அடுப்பில் இருந்து எடுத்துவிடவேண்டும்.
ஆறவைத்து ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில், இரண்டு ஏலக்காய் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். பொடி பதத்தில் இருக்கும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து நன்றாக காய்ந்தவுடன், தேங்காய், வெள்ளை எள் சேர்த்து ட்ரையாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பொடித்து வைத்துள்ள மாவுடன் வறுத்த தேங்காய் மற்றும் எள், சுக்குப்பொடி என அனைத்தும் சேர்த்து கலந்துவைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்த்தை பாகு காய்ச்சி எடுக்க வேண்டும் (பாகுபதம் தேவையில்லை) வெல்லத்தில் உள்ள தூசிகளை நீக்குவதற்கு பாகு காய்ச்சி அதை வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
தயார் செய்து வைத்துள்ள பொடியில், இந்த பாகை சேர்த்து நல்ல உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு மைதா அல்லது கார்ன்ஃப்ளோர் சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து நன்றாக சூடானவுடன், உருட்டி வைத்துள்ள பூரணத்தை, கரைத்து வைத்துள்ள மாவில் நனைத்து, பொரித்து எடுத்தால், சுவையான முந்திரி கொத்து தயார்.
முந்திரிக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆனாலும் இந்த ரெசிபியின் பெயர் முந்திரி கொத்து. நீங்கள் இதில் வேண்டுமானாலும் முந்திரி சேர்த்துக்கொள்ளலாம். பூரணத்துடன் உடைத்து நெய்யில் வறுத்த முந்திரி பருப்புகளை சேர்த்துக்கொள்ளலாம்.
மாலை நேரத்தில் சூடான டீ அல்லது காபியுடன் சேர்த்து சாப்பிட இது ஒரு சிறந்த சிற்றுண்டி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்