Mudavattukal Kizhangu Soup : மூட்டு வலியால் முடங்கியவர்களும் எழுந்து ஓட வேண்டுமா? 20 நாள் இந்த சூப் மட்டும் போதும்!
Mudavattukal Kizhangu Soup : ரத்த ஓட்டம் அதிகரிக்கும், புது ரத்தம் ஊற துவங்கும், ஹீமோகுளோபின் குறைபாட்டை சரிசெய்யும். முதுகெலும்புக்கும், எலும்பு மஞ்ஜைகளுக்கம் வலுவைக் கொடுக்கும். ஆட்டுக்கால் சூப் போன்ற சுவை நிறைந்தது.
எவ்வளவு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், கால் வலி, மூட்டு வலி, பாத வலி, பாத எரிச்சல், வெரிக்கோஸ் வெயின் என அனைத்தும் மீண்டும், மீண்டும் வந்து தொல்லை தருகிறது என்றால் அதற்கு ஒரு தீர்வு. இந்த ஒரு சூப்பை செய்து 20 நாள் பருகினால் போதும் அனைத்தும் பறந்தோடும். உடலில் நமக்கே தெரியாமல் இருக்கக்கூடிய வியாதிகளை குணப்படுத்துகிறது.
தேவையான பொருட்கள்
முடிவாட்டுக்கால் கிழங்கு அல்லது முடவன் ஆட்டுக்கால் கிழங்கு – கால் கிலோ
நீர்ச்சத்து நிறைந்தது. சுத்தம் செய்த பின் இஞ்சி போன்ற தோற்றத்தில் இருக்கும்.
(இது முடிநீக்கி கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இது ஆட்டுக்கால் போலவே இருப்பதால் அந்த பெயர் பெற்றுள்ளது. இது சைவ உணவுதான். மலை பிரதேசங்களில் விளையக்கூடிய கிழங்கு வகை. இதை ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம்.
இந்த கிழங்கை வாங்கி தோலையும் அதற்கு மேல் உள்ள ஆட்டுக்கால் ரோமம் போன்ற அமைப்பையும் நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கிழங்கை ஆன்லைனிலும் வாங்க முடியவில்லையென்றால், முடவாட்டுக்கால் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதையும் வாங்கி பயன்படுத்தலாம்)
ஒவ்வொரு மூட்டுக்களின் இடையில் உள்ள மஞ்ஜை உறுதியாகி, உடலில் கால்சியம் சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். ரத்த சர்க்கரை அளவை சமமாக்கும். சர்க்கரையால் வரக்கூடிய கால் வலி, மூட்டு வலி என அனைத்தையும் குணப்படுத்தும்.
நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை ஆகியவற்றை சரிசெய்யும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய இடுப்பு வலி, முதுகு வலி ஆகியவற்றையும் பயன்படுத்தும். நரம்புகளில் உள்ள அடைப்புகளை நீக்கும். இதனால் வெரிக்கோஸ் வெயின் குணமாகும்.
சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கிழங்கு – ஒரு கப்
இஞ்சி – ஒரு இன்ச்
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – 10
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
சோம்பு – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
மல்லித்தழை – ஒரு கைப்பிடி
புதினா – 10 இலைகள்
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடியளவு
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கிழங்கு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா, பட்டை, கிராம்பு என அனைத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதுதைப்போல் 4 மடங்கு தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் என அனைத்தும் சேர்த்து, நன்றாக கலந்துவிட்டு, மிதமான தீயில் நன்றாக கொதிக்கவிடவேண்டும். தண்ணீர் பாதியளவு குறைய வேண்டும்.
கடைசியாக முருங்கைக்கீரையை சேர்க்க வேண்டும். இது முற்றிலும் உங்களுக்கு தேவைப்பட்டால் சேர்க்கலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். முருங்கை கீரையும் மூட்டு வலிக்கு சிறந்தது. இதில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் உடலுக்கு நல்லது.
முருங்கை கீரை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிவிடவேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு, அரைமணி நேரம் மூடிவைத்துவிடவேண்டும். பின்னர் வடிகட்டி பருகவேண்டும்.
இதில் புளி, எலுமிச்சை, தக்காளி போன்ற புளிப்பு சுவை தரும் எதுவும் சேர்க்கக்கூடாது. சேர்த்தால் மருத்துவ குணங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். மாலையிலும் பருகலாம். இதை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது எடுத்து சூடாக்கி பருகலாம். இதை 5 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.
இதை தொடர்ந்து 20 நாட்கள் வரை பருகவேண்டும். மூட்டு வலியால் முடங்கிக்கிடந்தவர்கள் கூட எழுந்து ஓடத்துவங்குவார்கள்.
ரத்த ஓட்டம் அதிகரிக்கும், புது ரத்தம் ஊற துவங்கும், ஹீமோகுளோபின் குறைபாட்டை சரிசெய்யும். முதுகெலும்புக்கும், எலும்பு மஞ்ஜைகளுக்கம் வலுவைக் கொடுக்கும். ஆட்டுக்கால் சூப் போன்ற சுவை நிறைந்தது.
பவுடரை பயன்படுத்தும்போது, இதே உட்பொருட்களை அரைத்து எடுத்துக்கொண்டு ஒரு லிட்டர் தண்ணீரில் இவற்றை கலந்து அரை ஸ்பூன் முடவன் ஆட்டுக்கால் கிழங்கு பொடி சேர்த்துக்கொண்டால் போதும். இதேபோல் கொதிக்க வைத்து பருகவேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்