Mudakathan Keerai Thuvayal : வாதநோயை விரட்டி ஓடச்செய்யும் முடக்கத்தான் கீரை! அதில் துவையல் செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mudakathan Keerai Thuvayal : வாதநோயை விரட்டி ஓடச்செய்யும் முடக்கத்தான் கீரை! அதில் துவையல் செய்வது எப்படி?

Mudakathan Keerai Thuvayal : வாதநோயை விரட்டி ஓடச்செய்யும் முடக்கத்தான் கீரை! அதில் துவையல் செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Apr 28, 2024 01:46 PM IST

Mudakathan Keerai Thuvayal : வாதநோயை விரட்டி ஓடச்செய்யும் முடக்கத்தான் கீரை! அதில் துவையல் செய்வது எப்படி?

Mudakathan Keerai Thuvayal : வாதநோயை விரட்டி ஓடச்செய்யும் முடக்கத்தான் கீரை! அதில் துவையல் செய்வது எப்படி?
Mudakathan Keerai Thuvayal : வாதநோயை விரட்டி ஓடச்செய்யும் முடக்கத்தான் கீரை! அதில் துவையல் செய்வது எப்படி?

இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

தேவையான பொருட்கள்

முடக்கத்தான் கீரை – அரை கப்

உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் – 3

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு

உப்பு – தேவையான அளவு

கடுகு – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை

அடிக்கணமான இரும்புக்கடாயில் எண்ணெயை சூடாக்கி, வரமிளகாயை வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் உளுந்து சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும். அதை கடாயில் இருந்து எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும்.

அதே கடாயில் முடக்கத்தான் கீரையை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய் துருவல், புளி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து தனியாக வைக்கவேண்டும்.

அனைத்தையும் ஆறவைத்து உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் சேர்க்க வேண்டும்.

துவையல் சாப்பிட தயார்.

இதை சூடான சாதத்தில் கொஞ்சம் நெய்விட்டு பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். இதை சாம்பார், ரசம், தயிர், வத்தக்குழம்பு மற்றும் அனைத்து வெரைட்டி ரைஸ்களுடனும் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

முடக்கத்தான் கீரையின் நன்மைகள்

முடக்கத்தான் கீரை வீக்கத்து எதிரான குணங்கள் கொண்டது.

இது மூட்டுவலி, மூட்டுவீக்கம் மற்றும் ருமட்டாய்ட் ஆர்த்ரட்டிஸ் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாகும்.

கால்களில் ஏற்படும் இறுக்கம் மற்றும் வாதநோய் ஆகியவற்றுக்கு இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

சளி, நரம்பு கோளாறுகள், இடுப்பு வலி நோய் ஆகியவற்றுக்கு சிறப்பாக சிகிச்சையளிக்கிறது.

ஆர்த்ரிட்டிஸ், மூட்டு வலி மற்றும் கீல்வாத நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அளவு நிவாரணம் கொடுக்கிறது.

இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் ருமட்டாய்ட் ஆர்த்ரிட்டிஸ் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கிறது.

காது வலி, சளி மற்றும் இருமலைப் போக்குவதற்கும் முடக்கத்தான் கீரை பயன்படுத்தப்படுகிறது.

இதில் உள்ள சிறப்பான வாயுத்தன்மை, மிதமான மலமிளக்கியாக செயல்படுகிறது.

முடக்கத்தான் கீரை இலை அல்லது பொடியை கொதிக்க வைத்து பருகினால், அது வயிற்றுவலி மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.

மாதவிடாய் வலிகளை போக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

முடக்கத்தான் கீரை உடலில் சோர்வைப் போக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

முடக்கத்தான் கீரை சரும வியாதிகளுக்கு தீர்வாகிறது. தலையில் உள்ள பொடுகைப் போக்குகிறது. தலையின் அரிப்பை குணப்படுத்துகிறது. இதை அரைத்து தலைமுடியின் கால்களில் தடவினால் கூந்தலுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கிறது.

இந்தக்கீரையை பயன்படுத்தி தோசை மட்டுமல்ல துவையல், ரசம், சூப் என அனைத்தும் செய்யலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.