Mouth Ulcer : மவுத் அல்சர் வரக்காரணம் என்ன? அதை வராமல் தடுப்பது எப்படி? பல் மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள்!
உங்களுக்கு வாயில் புண் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுப்பது எப்படி என்று பல் மருத்துவர் விளக்கியுள்ளார். அது என்னவென்று பாருங்கள்.

மவுத் அல்சர் எனப்படும் சிறிய புண்கள் வாயில், பற்களின் ஈறுகள், உதடுகள், நாக்கு, கன்னத்தின் உள்புறம், வாயின் மேற்பகுதி என எங்கு வேண்டுமானாலும் வரும். இவை ஆபத்தானவை அல்ல. ஆனால் அவை உங்களுக்கு பெரும் அசவுகர்யங்களைக் கொடுக்கும். உங்களுக்கு அவை அடிக்கடி எற்பட்டால் கவலைகொள்ள வேண்டாம். ஆனால் இவையிருந்தால் சாப்பிடுவது, தண்ணீர் பருகுவது, சூடான பானங்கள் பருகுவது என அனைத்தும் சிரமமாகத்தான் இருக்கும். இதுகுறித்து குழந்தைகள் பல் மருத்துவர் காட்டை என்பவர், அவற்றில் இருந்து விடுபடும் எளிய வழிகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள விவரம்
வாயில் அல்சர் வரக்காரணம் என்ன?
- டூத் பிரஷ்கள் உங்களுக்கு அவற்றை ஏற்படுத்தியிருக்கலாம். நீங்கள் ஏதாவது விளையாடும்போது அல்லது விழும்போது அடிபட்டிருக்கலாம்.
2. வைரஸ் தொற்றுகள், மன அழுத்தம் (உணர்வு ரீதியான மனஅழுத்தம், இரவு தாமதமாக உறங்கச் செல்வது, பயணம் போன்றவற்றால் ஏற்படும் அழுத்தம்) காரணமாவும் இந்த பிரச்னைகள் ஏற்படலாம்.
3. உணவு ஒவ்வாமை, மிகவும் சென்சிட்டிவான வாய்ப்பகுதி இருப்பது போன்றவற்றாலும் அல்சர் வரலாம்.
4. மரபணு காரணமாகவும் வாயில் அல்சர் வரலாம்.
எவ்வாறு தடுப்பது?
உங்கள் வாயில் அல்சர் வரத்துவங்கிவிட்டால் அதை படரவிடாமல் தடுப்பது எப்படி என்றும், வாயில் முதல் இடத்தில் வரும்போதே அதை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து நீங்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று டாக்டர் காட்டை கூறுகிறார்.
அதன் விவரம்
- அவை பொதுவானதுதான் என்றால், அதற்கான காரணத்தை முதலில் ஆராய்ந்து பாருங்கள்.
2. பேஸ்ட் கூட மாற்றிப்பார்க்கலாம். குறிப்பாக மிருதுவான பேஸ்ட்களை பயன்படுத்தலாம். இதை செய்வது மிகவும் எளிதுதான். சோடியம் லாரில் சல்ஃபேட் என்பது நிறைய பேருக்கு பிரச்னைகளைக் கொண்டுவரும். அவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ, பாடி வாஷ் மற்றும் பேஸ்ட் போன்றவற்றில் இருக்கும்.
3. உப்பு மற்றும் சர்க்கரை உட்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
4. அதிக அளவு வைட்டமின் பி 12 எடுத்துக்கொள்ளவேண்டும். இவையெல்லாம் செய்யும்போது உங்களுக்கு மவுத் அல்சர் வருவது குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்