மோத்தி பாக் : மோத்தி பாக்; சூப்பர் சுவையான இனிப்பு ரெசிபி! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மோத்தி பாக் : மோத்தி பாக்; சூப்பர் சுவையான இனிப்பு ரெசிபி! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள்!

மோத்தி பாக் : மோத்தி பாக்; சூப்பர் சுவையான இனிப்பு ரெசிபி! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள்!

Priyadarshini R HT Tamil
Updated May 24, 2025 03:18 PM IST

மோத்தி பாக் : இதை உங்கள் வீட்டில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். இதை பண்டிகை காலங்களில் செய்யலாம். வீட்டில் நடைபெறும் விழாக்களில் பரிமாறவும் செய்யலாம். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று எண்ணுவீர்கள்.

மோத்தி பாக் : மோத்தி பாக்; சூப்பர் சுவையான இனிப்பு ரெசிபி! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள்!
மோத்தி பாக் : மோத்தி பாக்; சூப்பர் சுவையான இனிப்பு ரெசிபி! ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள்!

தேவையான பொருட்கள்

• கடலை மாவு – 2 கப்

• சர்க்கரை – 2 கப்

• (இரண்டுக்கும் தண்ணீர் தேவையான அளவு எடுத்துக்கொள்ளவேண்டும்)

• இனிப்பில்லாத கோவா – ஒரு கப்

• ஏலக்காய்ப் பொடி – ஒரு ஸ்பூன்

• குங்குமப்பூ – இரண்டு சிட்டிகை

• நெய் – கால் கப்

• முந்திரி – 4 ஸ்பூன் (பொடித்தது)

• உலர்ந்த திராட்சை – 4 ஸ்பூன்

• எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

1. கடலை மாவில் தண்ணீர் சேர்த்து மிதமான கெட்டியான அளவு கரைத்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் பூந்தி கரண்டி அல்லது ஐல்லி கரண்டியை வைத்து கடலை மாவுக்க கலவையை எடுத்து ஊற்றி கார பூந்திகளை பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். பூந்திகளை அரித்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். அதிகம் வறுத்துவிடக்கூடாது. கவனமாக கருகிவிடாமல் பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

3. ஒரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரைக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவேண்டும். பாகு ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்கவிடவேண்டும். இரு விரல்களுக்கு இடையில் எடுத்து பிரிக்கும்போது, கம்பிபோல் வந்தால், பாகு ஒரு கம்பி பதம் வந்துள்ளது என்று பொருள்.

4. ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் பொடித்த முந்திரிகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவேண்டும்.

5. பாகில் கோவாவை சேர்த்து கிளறவேண்டும். அடுத்து வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவேண்டும். அடுத்து ஏலக்காய்ப் பொடி, குங்குமப்பூ என அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.

6. அடுத்து வறுத்து வைத்துள்ள பூந்தியையும் சேர்த்து நன்றாகக் கிளறவேண்டும்.

7. அடுத்து கொஞ்சம், கொஞ்சமாக நெய் சேர்த்து அனைத்தும் கெட்டியாகும் வரை கிளறவேண்டும். பாத்திரத்தில் இருந்து பிரிந்து வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். இந்த பதம் வந்தவுடன் இறக்கிவிடலாம்.

8. ஒரு ட்ரே அல்லது தட்டில் நெய் தடவி இதை அப்படியே அதில் சேர்த்து பரப்பிவிடவேண்டும். மேல் புறத்தில் ஒரே சீராக தடவிவிடவேண்டும். இதை சில மணி நேரங்கள் ஆறவிடவேண்டும்.

9. பின்னர் சிறிய சதுர துண்டுகளாக வெட்டி பரிமாறினால் சூப்பர் சுவையான மோத்தி பாக் தயார்.

இதை உங்கள் வீட்டில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். இதை பண்டிகை காலங்களில் செய்யலாம். வீட்டில் நடைபெறும் விழாக்களில் பரிமாறவும் செய்யலாம். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று எண்ணுவீர்கள். இதற்கு பாகு பதம் முக்கியம், பூந்தியை வறுத்து எடுப்பதும் முக்கியம். இரண்டையும் சரியான செய்துவிட்டால் சூப்பர் சுவையான மோத்தி பாக் தயார். இதை ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.