Moth Bean Benefits : தினம் ஒரு தானியம்! மனஅழுத்ததை குறைக்கும்! நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்! நரிப்பயிரின் நன்மைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Moth Bean Benefits : தினம் ஒரு தானியம்! மனஅழுத்ததை குறைக்கும்! நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்! நரிப்பயிரின் நன்மைகள்!

Moth Bean Benefits : தினம் ஒரு தானியம்! மனஅழுத்ததை குறைக்கும்! நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்! நரிப்பயிரின் நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
Feb 06, 2024 07:00 AM IST

Moth Bean Benefits : தினம் ஒரு தானியம்! மனஅழுத்ததை குறைக்கும்! நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்! நரிப்பயிரின் நன்மைகள்!

Moth Bean Benefits : தினம் ஒரு தானியம்!  மனஅழுத்ததை குறைக்கும்! நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்! நரிப்பயிரின் நன்மைகள்!
Moth Bean Benefits : தினம் ஒரு தானியம்! மனஅழுத்ததை குறைக்கும்! நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்! நரிப்பயிரின் நன்மைகள்!

100 கிராம் நரிப்பயிரில் 343 கலோரிகள் உள்ளது. 61.5 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பு 1.6 கிராம், புரதம் 22.9 கிராம், தியாமின் 0.6 மில்லி கிராம், ரிபோஃப்ளாவின் 0.1 மில்லி கிராம், நியாசின் 2.8 மில்லி கிராம், பேன்ட்டோதெனிக் ஆசிட் 0.5 மில்லி கிராம், வைட்டமின் பி6 0.4 மில்லி கிராம், கால்சியம் 150 மில்லி கிராம், இரும்புச்சத்து 10.8 மில்லி கிராம், ஃபோலேட் 649 மில்லி கிராம், மெக்னீசியம் 381 மில்லி கிராம், மாங்கனீஸ் 1.8 மில்லி கிராம், பாஸ்பரஸ் 489 மில்லி கிராம், பொட்டாசியம் 1,191 மில்லி கிராம், சோடியம் 30 மில்லி கிராம், சிங்க் 1.9 மில்லி கிராம் உள்ளது.

நரிப்பயிரின் நன்மைகள்

இதில் புரதம், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ளது. உங்கள் தினசரி உணவில் இதை சேர்க்கலாம். இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது எண்ணற்ற் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

எலும்புகளை வலுவாக்குகிறது

உங்கள் எலும்பு வலுவிழந்து வந்தால், இந்த நரிப்பயிரை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. அது எலும்பு தொடர்பான பிரச்னைகளை மட்டும் சரிசெய்யவில்லை, அவற்றுக்கு வலுகொடுக்கிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தி என்பது நமக்கு மிக முக்கியமான ஒன்று ஏனெனில், புதிய தொற்றுகளும், புதுப்புது நோய்களும் அன்றாடம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. 

எனவே அவற்றை எதிர்த்து போராட உங்கள் உடல் நோய் எதிர்ப்பு பெறவேண்டுமெனில், உங்கள் உணவில் கட்டாயம் வாரம் மூன்று முறை இந்த நரிப்பயிரை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தப்பயிரில் உள்ள சிங்க் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பை வலுப்படுத்துகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது

தாவர புரதங்கள் பிரபலமாகி வரும் காலத்தில் அதில் முதல் இடத்தில் உள்ளது நரிப்பயிறு, நரிப்பயிறில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது. இது தசைகளை சரிசெய்கிறது மற்றும் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. ஆரோக்கியமும், உடலுக்கு வலுவும் சேர்க்கிறது.

குடல் இயங்க உதவுகிறது

பாசிபயிரைப்போல், நரிப்பயிரிலும் செரிமானத்தை கொடுக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அது குடல் இயக்கத்தை முறைப்படுத்த உதவுகிறது. நரிப்பயிறு மலச்சிக்கலை போக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

மனஅழுத்தத்தை குறைக்கிறது

நரிப்பயிறை தினமும் உட்கொள்வது மனஅழுத்தத்தை குறைக்கிறது. திடீரென ஏற்படும் பதற்றத்தை குறைக்கிறது. இதில் உள்ள சிங்க் சத்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது.

வைட்டமின் பி நிறைந்தது

வைட்டமின் பி, உடல் சரியாக இயங்குவதற்கு உதவுகிறது. சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு போதிய வைட்டமின் பி சத்துக்கள் உணவில் வைட்டமின் பி சத்துக்கள் கிடைப்பது கடினம். நரிப்பயிரில் அது அதிகம் உள்ளது. இது நினைவாற்றலை அதிகரிக்கிறது. உடலின் சக்தியை அதிகரிக்கிறது. செல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

இதயத்தை பாதுகாக்கிறது

உடலுக்கு இதயம் ஒரு முக்கியமான பாகம். அது இயங்குவதற்கு நமது உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான கொழுப்பு எண்ணிலடங்கா இதய நோய்களை உருவாக்குகிறது. அவை உடனடியாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதற்கு மருந்து, வாழ்வியல் மாற்றங்கள் மறறும் உணவு ஆகியவை தேவை. 

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது இதய நோயாளிகளுக்கு நல்லது. எனவே உங்கள் உணவில் நரிப்பயிறையும் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. அது கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை இயற்கையாகவே முறைப்படுத்துகிறது.

சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

இந்த பயிர் அழகுசாதன பொருட்கள் சந்தையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ரெட்டினால் மிமிக்கிங் உட்பொருட்கள் அதற்கு உதவுகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.