Healthy Diet: இதோ உலகின் சிறந்த டயட்கள்! இதில் உங்களது பெஸ்ட் சாய்ஸ் எது?
உலகெங்கிலும் உள்ள டாப் 10 பிரபலமான உணவு முறைகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம். அதில் உங்களுடைய சாய்ஸ்ஸை தேர்ந்தெடுத்து ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்.
இன்றைய பரபரப்பான உலகில் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் என வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளால் பெரும்பாலான மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பிரச்னைகளுக்கு சரியான உணவு முறைகளைப் பின்பற்றுவதாலும் தீய பழக்கங்களைக் கைவிடுவதாலும் உடல் ஆரோக்கியம் மீண்டும் புத்துயிர் பெறும். இது பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலானவர்களுக்கு பரவலாகத் தெரியத் தொடங்கி விட்டது. இயற்கை சார்ந்த உணவு முறைக்கு அவர்கள் மீண்டுவரத் தொடங்கியுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இங்கு தரப்பட்டுள்ள டயட் முறைகளைப் புரிந்து கொண்டு முறையாகப் பின்பற்றி வந்தால் ஆரோக்கியம் உங்கள் பக்கம்.
மத்திய தரைக்கடல் உணவுமுறை எனப்படும் மெட்டரேனியன் டயட்- பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற முழு உணவுகளையும் உட்கொள்வதை இந்த உணவு வலியுறுத்துகிறது. மீன், முட்டை, பீன்ஸ், பருப்பு வகைகள், கொட்டைகள், வெண்ணெய் போன்ற உயர்தர ஆரோக்கியமான கொழுப்புகள், குறைந்த புரதம் அடங்கிய டயட் இது. இதய ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் போனது. இளமையைக் காக்கும் ஆற்றலும் இந்த உணவு முறைக்கு உள்ளது.
டேஷ் டயட்- டேஷ் உணவுமுறை (DASH- Dietary Approaches to Stop Hypertension) என்பது உயர் ரத்த அழுத்தத்தை போக்குவதற்கான உணவு வழிமுறையாகும். இந்த டயட்டில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், ஒல்லியான புரதங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி. முட்டை சாப்பிடலாம். இந்த உணவு முறை முழுக்க முழுக்க உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதையும் வலியுறுத்துகிறது
கீட்டோ டயட்- கீட்டோ உணவில் கொழுப்பு மற்றும் புரதம் நிறையவும், கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும் உள்ளது. இது உடலை கீட்டோசிஸ் நிலைக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது கொழுப்பையும் புரதத்தையும் சிறுநீரின் வழியாக வெளியேற்றும் முறையாகும். இது கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக கொழுப்பை ஆற்றலுக்காக எரிக்கிறது. இந்த உணவு எடை இழப்புக்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோயைத் தடுக்கிறது. நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
அட்கின்ஸ் டயட்- அட்கின்ஸ் டயட் என்பது எடை இழப்புக்கான குறைந்த கார்ப் உணவாகும். இது எடை இழப்பைத் தூண்டுவதற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் கார்போஹைட்ரேட்டுகளை கட்டுப்படுத்துகிறது. இந்த உணவின் பின்னணியில் உள்ள நோக்கம் என்னவென்றால், கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். நீங்கள் விரும்பும் அளவுக்கு புரதம், கொழுப்புகளை சாப்பிடலாம். இதன் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்கலாம்.
வீகன் டயட்- வீகன் உணவு முறையில் இறைச்சி, பால், முட்டை உட்பட அனைத்து விலங்கு பொருட்களையும் விலக்குகிறது. வீகன் டயட் என்பது முழுக்க முழுக்க சுத்தமான சைவ உணவுமுறை ஆகும். இதில் பால் மற்றும் பால் பொருட்களுக்கும் அனுமதியில்லை. வீகனைப் பொருத்தமட்டில் பாலும் அசைவம்தான். இது எடை இழப்பு மற்றும் மேம்பட்ட இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. அது மட்டுமல்லாமல், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
வெயிட் வாட்ச்சர்ஸ் டயட்- இந்த டயட் உணவில் உள்ள கலோரிகளைக் கணக்கிட்டு உட்கொள்ளப்படுகிறது. இதில் அவரவர் உடல் வாகுக்கு ஏற்ப அன்றாட சாப்பாட்டுத் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். இந்த உணவு, பகுதி கட்டுப்பாடு மற்றும் உணவுகளின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தின் அடிப்படையில் எடை இழப்பை அடைவதில் கவனம் செலுத்துகிறது.
முழு 30 டயட்- முழு 30 டயட் என்பது 30 நாள் உணவுத் திட்டமாகும், இது சர்க்கரை, தானியங்கள், பருப்பு வகைகள், பால் பொருட்கள் போன்ற சில உணவுகளை நீக்குகிறது. சமச்சீரான அளவுக்கு ஊட்டச்சத்துகளைச் சேர்த்துக் கொள்வது இதன் அடிப்படையாகும். இதன் மூலம் உடலை பருமனிலிருந்து மீட்டெடுக்கும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமைந்துள்ளது.
பேலியோ டயட்- பேலியோலிதிக் அல்லது பேலியோ டயட் என்பது பண்டைய கற்காலத்தில் நம் முன்னோர்கள் உண்ட உணவுகளையே மனிதர்களும் உண்ண வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பிட்ட பழங்கள், காய்கறிகள், கொழுப்பு குறைந்த இறைச்சி பாகங்கள், மீன், முட்டை, விதைகள், பாதாம், வால்நட், பிஸ்தா, நிலக்கடலை போன்ற கொட்டைகள் இதில் அடங்கும். இதில் மாவுச்சத்து மிகவும் குறைவாக இருக்கும். இதனால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை மிகவும் கட்டுக்குள் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஃப்ளெக்சிடேரியன் டயட்- வாயைக் கட்ட முடியாதவர்களுக்கான டயட் இது. ஃப்ளெக்சிடேரியன் டயட் என்பது சைவ உணவோடு கொஞ்சமே கொஞ்சம் கொழுப்பு கொண்ட அசைவ உணவை அளவுடன்அனுமதிக்கிறது. நிறைய தாவரங்கள், காய்கறி சேர்த்துக் கொள்ளலாம்.
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் டயட்- எல்லாவற்றிலும் மிகவும் பிரபலமான உணவுமுறைகளில் ஒன்று இடைவிடாத உண்ணாவிரத உணவுமுறை ஆகும். இது உடல் எடையை குறைக்கும் நோக்கத்துடன் நீண்ட நேரம் உண்ணாவிரதம், பின் சாப்பிடுவது என மாறி மாறி பின்பற்றுதல் ஆகும். இது உடல் எடையை குறைக்கும் நோக்கத்துடன் உண்ணாவிரத காலங்களுடன் மாறி மாறி சாப்பிடுவதை உள்ளடக்கியது. இருப்பினும், இந்த வகை உணவு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் அறியப்படுகிறது. உடல் எடை இழப்புக்கு மிகவும் உகந்த முறையாகும்.