Mosquito : கொசுக்களால்ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த புதிய தீர்வு; புனே நிறுவனம் அசத்தல்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mosquito : கொசுக்களால்ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த புதிய தீர்வு; புனே நிறுவனம் அசத்தல்!

Mosquito : கொசுக்களால்ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த புதிய தீர்வு; புனே நிறுவனம் அசத்தல்!

Priyadarshini R HT Tamil
Feb 27, 2024 02:05 PM IST

Mosquito : கொசுக்களால்ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த புதிய தீர்வு; புனே நிறுவனம் அசத்தல்!

Mosquito : கொசுக்களால்ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த புதிய தீர்வு; புனே நிறுவனம் அசத்தல்!
Mosquito : கொசுக்களால்ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த புதிய தீர்வு; புனே நிறுவனம் அசத்தல்!

2021ம் ஆண்டில் இந்தியாவில் 1,93,245 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பூனேவைச் சேர்ந்த நிறுவனம், கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த Eco Bio Trap எனும் விலை மலிவான, மின்சாரத்தின் தேவையின்றி, சுறுச்சூழலுக்கு பாதிப்பின்றி, எளிதில் கொசுக்களின் இனப்பெருக்கத்தை பெருமளவு கட்டுப்படுத்தி, கொசுக்களால் ஏற்படும் நோய்களை 92 சதவீதம் திறனுடன் கட்டுப்படுத்தவல்ல பொருளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.

Eco Bio Trap எவ்வாறு தயாரிக்கப்பட்டு செயல்படுகிறது-

கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு நீர் மிகவும் அவசியம். நீரில் தான் கொசுக்கள் முட்டையிட்டு, அவை வளர்ந்து பின்னர் கொசுவாக மாறுகிறது.

எளிதில் மக்கக்கூடிய ஒரு சிறு தொட்டியில் (அட்டையைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது) நீர் Eco Bio Trapல் சேமிக்கப்படுகிறது. கொசுக்களும் அதில் முட்டையை இடுகிறது. கொசுக்களை ஈர்க்கும் இயற்கை நறுமண பொருட்கள் அதில் சேர்க்கப்படுகிறது. IGR-Insect Growth Regulator கொசுக்களின் முட்டையின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் பொருட்களும், இந்திய அரசு மற்றும் உலக சுகாதார நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை பூச்சிக்கொல்லிமருந்து (Pyriproxyfen Granules) அத்தொட்டிகளில் இருப்பதால், பெண் கொசுக்கள் இடும் முட்டைகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுவதால், வளர்ந்த கொசுக்களின் உருவாக்கம் தடுக்கப்படுகிறது.

இதனால் கொசுக்களின் எண்ணிக்கை சில வாரங்களிலேயே கணிசமாக குறைகிறது.

இந்தியாவில் மும்பையின் மிகப் பெரிய சேரியான தாரவியில் 2022ம் ஆண்டு ஜூலையில் 3,000 Eco Bio Trap பயன்படுத்தப்பட்டு அது 92 சதவீதம் செயல்திறனுடன் செயல்படுவது கண்டறியப்பட்டதுடன், கொசுக்களை அந்த Eco Bio Trapல் உள்ள இயற்கை நறுமணம் 2 மடங்கு அதிக அளவில் ஈர்ப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

400 சதுர அடிகளுக்கு ஒரு தொட்டி என ஒரு மாதம் வரை அதை பயன்படுத்த முடியும். 30 நாட்கள் கழித்து அதை எளிதில் பாதுகாப்பாக அகற்றி சூழலுக்கு பாதிப்பின்றி Dispose செய்ய முடியும்.

மற்ற கொசுக்கொல்லிகள் அல்லது அகற்றிகளை விட இவை 70 சதவீதம் விலை மலிவாக இருப்பதுடன், மின்சாரத்தின் தேவை இதற்கு முற்றிலும் இல்லை.

இத்தொட்டிகளை முனிசிபல் நிறுவனங்கள், வாழ்விடங்கள், பொது இடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற பல இடங்களிலும், சூரிய வெளிச்சம் நேரில் படாத இடங்களில் பயன்படுத்த முடியும்.

கர்நாடகாவில் பாதுகாப்பு படையினர் இருந்த ஒரு இடத்தில், டெங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், Eco Bio Trap பயன்பாட்டிற்குப் பின் ஒரே மாதத்தில் 50 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டது. 5 பேருக்கு மட்டுமே பாதிப்பு என கணிசமாகக் குறைந்தது. 2 மாதங்களுக்குப் பின் மொத்தமே 200 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, அதன்பின்னர் யாருக்கும் நோய் பாதிப்பு இல்லை எனும் சூழல் உருவானது.

நோயைப் பரப்பும் பெண்கொசுக்களின் வாழ்நாள் 15 முதல் 30 நாட்கள் மட்டுமே. ஒருமுறை பெண் கொசுக்கள் 50 முதல் 200 முட்டைகளை இடுகின்றன.

கொசுக்களின் முட்டைகள் வளர்ந்து முழு கொசுவாக வளர்வதைத் தடுப்பதே கொசுக்களால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நமக்கிருக்கும் சிறந்த வழி.

சாலைகள், பிற இடங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளும் வண்ணம் அரசின் செயல்பாடுகள் இருந்து நீர் வழிந்தோடுவதை உறுதிசெய்வதுடன், இருக்கும் நீரை பாதுகாப்பாக மூடிவைக்கவும் மக்கள் அல்லது அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது கூடுதல் பலன்களை அளிக்கும்.

கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு உதவும் புவிவெப்பமடைதலைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் தேவை.

அரசும் அல்லது மக்களும் விழித்துக்கொண்டு, Bio Eco Trapஐ பயன்படுத்த முன்வர வேண்டும்.

நன்றி – மருத்துவர் புகழேந்தி.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.