பெண் குழந்தைகளுக்கு மார்டன் பெயர்கள்! வேதங்களில் இருந்து அர்த்தமுள்ள பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன!
பெண் குழந்தைகளுக்கு வேதங்களில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேடுவது பெரும் சவாலான ஒன்று. இன்று மார்டன் பெயர்களைத் தான் அனைவரும் அதிகம் விரும்பி வைக்கிறார்கள். அதுமட்டுமின்றி பெயர்கள் அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என்பதில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்கள். உங்கள் குட்டி குழந்தைக்கு, பெயரை தேர்ந்தெடுப்பது சவாலான ஒன்று. குறிப்பாக அந்தப்பெயர் தனித்துவமாக இருக்கவேண்டும். அதேநேரத்தில் அர்த்தமுள்ளதாகவும் இருக்கவேண்டும். அதற்கு நீங்கள் என்ன பெயரை தேர்வு செய்வது என்று யோசிக்கவேண்டாம். உங்கள் குழந்தைகளுக்கு வலுவானவர்கள் மற்றும் தைரியமானவர்கள் என்ற அர்த்தத்தில் வரும் பெயர்களை வைத்தால், அவர்களின் எதிர்காலம் வீரமிக்கதாக இருக்குமா? எனில் உங்களுக்கு இங்கு சில பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை மார்டன் பெயர்கள். இவற்றை தேர்ந்தெடுத்து உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு சிறக்க வழிவகுத்துக்கொடுங்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெண் குழந்தைகளின் பெயர்கள் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டாலும் இவையும் மார்டனாகத்தான் இருக்கும். பொதுவாக நீங்கள் பெயர்களை வேதங்களில் இருந்து தேர்ந்தெடுத்து வைக்கலாம். தமிழில் சங்க நூல்களில் இருந்து எடுக்கலாம். இங்கு வேதங்களில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அக்ஷயா
ஆழ்ந்த பலம் என்பது இந்தப்பெயரின் அர்த்தமாகும். அக்ஷயா என்றால், பலம் மற்றும் எல்லையற்ற ஆற்றல் என்று பொருள். இது நவீனமான, ஆற்றல்மிக்க மற்றும் காலத்தால் அழியாத பெயராகும்.
அன்வி
அன்வி குட்டியான, க்யூட்டான பெயராகும். அன்வி என்றால் வசிகரம் என்று பொருள். இது உங்கள் குழந்தைக்கு ஆற்றலைத்தரும். நீங்கள் உங்கள் பெண் குழந்தைக்கு மார்டனான மற்றும் அழகான பெயரை தேர்ந்தெடுக்க விரும்பினால் இது சரியான தேர்வு ஆகும்.
அர்ஹானா
அர்ஹானா என்றால் மரியாதைக்குரிய, பயபத்தியான என்று பொருள். இது தனித்தன்மையான மெலோடியான பெயர். இது இதமளிக்கும் தோற்றத்தை தரும். இன்றைய தலைமுறைக்கு ஏற்ற பெயர்.
அர்ஷேயா
அர்ஷேயா என்றால் மரியாதை மற்றும் தனித்தன்மை என்று பொருள். இந்தப்பெயர் தனித்தன்மையுடன், ஈர்க்கும் தன்மைகொண்டது. இதை அழைப்பதும் எளிது.
திரிதி
திரிதி என்றால், பொறுமையானவர் மற்றும் உள்புறம் வலுவானவர் என்று பொருள். இதுவும் குட்டியான, க்யூட்டான் மற்றும் அர்த்தமுள்ள பெயர். இது நல்ல ஆளுமையைக் குறிக்கிறது. உங்கள் குழந்தை நன்முறையில் வளர விரும்பினால் அவருக்கு நீங்கள் இந்தப்பெயரை கட்டாயம் சூட்டலாம்.
இரா
இரா என்றால் நவீனம் மற்றும் பழமை இரண்டையும் குறிக்கும் பெயராகும். இதன் வேர்கள் இந்து புராணங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். இதை நீங்கள் எளிதாக எழுதலாம் மற்றும் உச்சரிக்கலாம். இது அழகான பெயர். இதமான சத்தத்தைத் தரும்.
கியாதி
கியாதி என்றால், புகழ் மற்றும் அங்கீகாரம் என்று பொருள். இந்தப்பெயருக்கு தனி மவுசு உண்டு, இது டிரண்டியாக இருக்கும் பெயர். இது தனித்தன்மையை விரும்பும் பெற்றோருக்கு ஏற்ற பெயராகும். இது லட்சியத்தை நோக்கி பயணிக்கும் குணம் கொண்ட குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்.
சுவர்ணா
சுவர்ணா என்றால் புத்திசாலி என்று பொருள். இது இதமான என்ற மற்றொரு அர்தத்தையும் தரும். இது அழகான பெயர். இதற்கு ஒரு அரச பெருமிதம் உள்ளது. விலை மதிப்பற்ற என்ற மற்றொரு பொருளும் உள்ளது.
துஸ்தி
துஸ்தி என்றால், உட்புற அமைதி என்று பொருள். உட்புற அமைதி மற்றும் நிறைவு என்ற பொருளை இந்தப்பெயர் தரும். இது அரிதான பெயர் மற்றும் அழகான தேர்வு ஆகும். உங்கள் குழந்தையின் பெயர் நவீனமாகவும் இருக்கவேண்டும். அதே நேரத்தில் அர்த்தமுள்ளதாகவும் இருக்கவேண்டும் என்றுவிரும்பினால் இந்தப்பெயரை சூட்டலாம்.
நைமா
நைமா என்பது நவீனமான பெயர். இது வேத காலங்களில் அதிக புழக்கத்தில் இருந்தது. ஆனால் இந்தப்பெயர் உங்களுக்கு மார்டனாகவும் இருக்கும். ஆசிர்வாதம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி என்பதை இந்தப்பெயர் குறிக்கிறது. உங்கள் பெண் குழந்தைக்கு வசிகரிக்கும் அழகான தேர்வு இந்தப்பெயர்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்