Morning Quotes : எச்சரிக்கை மக்களே! இந்தப் பழக்கங்கள்தான் உங்களை மெல்லக் கொல்லும் விஷமாகும்!
Morning Quotes : எச்சரிக்கை மக்களே, இந்தப் பழக்கங்கள்தான் உங்களை மெல்லக் கொல்லும் விஷமாக மாறும். எனவே கவனமுடன் இருங்கள்.
நீங்கள் அன்றாடம் கடைபிடிக்கும் சில பழக்கவழக்கங்ளே உங்களை மெல்லக்கொல்லும் நஞ்சாக மாறும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்தப்பழக்கம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். உங்களை மெல்லக்கொல்லும் விஷங்கள், நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விஷயங்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒரு பரபரப்பான வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம். நாம் சந்திக்கும் சில பிரச்னைகள் உங்களுக்கு எவ்வித பிரச்னைகளையும் கொடுப்பது போல் இருக்காது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை சிதைக்கும் தன்மை வாய்ந்ததாக இருககும். அது உங்கள் உடல் மற்றும் மனஆரோக்கியத்தை கெடுக்கும். உங்களின் ஒட்டுமொத்த உடல் நலனையும், மெல்லக்கொல்லும் நஞ்சான பழக்கவழக்கங்கள் என்னவென்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். பின்னர் அவற்றை சரிசெய்ய முயன்றாலே உங்கள் வாழ்வு சிறக்கும்.
மனஅழுத்தத்துடன் வாழ்வது
நாள்பட்ட மனஅழுத்தம் உங்களை மெல்லக்கொள்ளும். உங்களின் உடல் மற்றும் மனதை அது கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும். மனஅழுத்தம் உங்களிடம் எப்போதும் இருக்கும் என்றால், அது உங்கள் உடலில் பல்வேறு வியாதிகளை ஏற்படுத்தும். இதய நோய்கள், ரத்த அழுத்தம் மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பாற்றல் வலுவிழப்பு என இவற்றையெல்லாம் கொண்டுவரும்.
பிடிக்காத வேலை
புரியாமல் படிக்கும்போது, பிடிக்காமல் வேலை செய்யும்போதும் தவறுகிறோம். உங்களின் வேலை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால், அது உங்களுக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தும் ஒன்றாகும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து உங்கள் வேலை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால், அது உங்களுக்கு உடல் ரீதியான பல்வேறு அறிகுறிகளை தோற்றுவிக்கிறது. அதில் தலைவலி, தூக்கமின்மை, செரிமான கோளாறுகள், இவையனைத்தும் உங்கள் உடலுக்கு மெதுவாக விஷமாக மாறும்.
நச்சு நபர்கள்
உங்களுடன் இருப்பவர் யார் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்களின் ஒட்டுமொத்த உடல் நலனிலுமே அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். உங்களைச்சுற்றி நச்சு நபர்கள் இருந்தால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவர்கள் உங்களின் ஆற்றலை குறைக்கிறார்கள். உங்களின் வெற்றிகளை குறைத்து எடைபோடுகிறார்கள். தேவையற்ற நாடகங்களை நிகழ்த்துகிறார்கள். இது உங்களின் மனநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
துரித உணவுகளை அன்றாடம் எடுத்துக்கொள்வது
உங்களுக்கு துரித உணவுகள் பிடிக்கும் என்றால், அவற்றை எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அன்றாடம் நீங்கள் அவற்றை எடுத்துக்கொண்டால், அது உங்கள் உடலுக்கு நல்லது. இந்த உணவுகளில் அதிகளவில் கொழுப்பு நிறைந்திருக்கும். சர்க்கரை, சோடியம் ஆகியவை உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இதய நோய்களை உருவாக்கும். நீரிழிவை ஏற்படுத்தும்.
உணர்வுகள்
உங்களின் உணர்வுகளை அழுத்துவது உங்களுக்கு பிரச்னைகளை தவிர்க்கும் ஒரு வழிதான். ஆனால் அது உங்கள் உடலில் கடுமையான உபாதைகளை ஏற்படுத்தும். நாட்கள் செல்லச்செல்ல உங்களின் உணர்வுகள் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். அது உங்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். இது உங்கள் உணர்வுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்த மிகவும் முக்கியம்.
காலை உணவை தவிர்த்தல்
காடில உணவுதான் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் மிகவும் முக்கியமான உணவுகளுள் ஒன்று. காலை உணவை தவிர்த்தால் அது உங்கள் உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. அது உடல் எடை அதிகரிப்பு, வளர்சிமை கோளாறுகள் மற்றும் நினைவாற்றல் திறன் இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
கவலையுடன் இருத்தல்
எப்போதும் கவலையுடனே இருத்தலம், நாள்பட்ட பயத்தை தரும். அது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் தொடர்ந்து கவலைப்பட்டால், அது உடலின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் உடலில் கார்டிசால் எனப்படும் ஹார்மோன்கள் அதிகரிக்கிறது. நாளாக ஆக, உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான ஹார்மோன்கள் உங்களின் நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கச்செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் உயர்கிறது.
உங்களை கவனித்துக்கொள்வதை தவிர்த்தல்
உங்களை நீங்கள் கவனித்துக்கொள்ளாமல் போவது, உங்களின் உடல் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். உலக சுகாதாரத்தை நிறுவனத்தின் கூற்றுப்படி, அது உங்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அதில் மனஅழுத்தம், நாள்பட்ட சோர்வு மற்றும் இதயநோய் கோளாறுகள் ஆகியவை ஏற்படுகிறது.
உங்களுக்கு பரிசு
உங்களுக்கு நீங்கள் பரிசு கொடுத்துக்கொள்வது உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யும்போது, அது உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளவும், உங்களின் மனஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. உங்களின் சாதனைகளை நீங்கள் கொண்டாடவில்லையென்றால், யார் கொண்டாடுவார்கள்? உங்கள் சாதனைகளை கொண்டாடாவிட்டால், அது உங்களின் தன்னம்பிக்கையை குலைக்கும், போதாமையை உருவாக்கும், கடைசியில் உங்களை எரிச்சலைடையச்செய்யும்.
தொடர்புடையை செய்திகள்