Morning Quotes : உங்கள் குடல் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமா? இதோ இந்த காலை உணவை ட்ரை செய்யுங்கள்!
Morning Quotes : உங்கள் குடல் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமா? இதோ இந்த காலை உணவுகளை ட்ரை செய்து பாருங்கள். உங்களுக்கு கட்டாயம் பலன்தரும்.
முட்டையும், கீரையும் சேர்த்து செய்யும் பொரியல், அதை ஒரு பிரட் துண்டுடன் வைத்து சாப்பிட சுவை அள்ளும். இது புரதம் நிறைந்த முட்டைகளுடன், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரை மற்றும் தானியங்கள் நிறைந்த பிரட், இதனுடன் ராஸ்பெரிகள் சேர்த்து சாப்பிடும்போது, உடல் எடை குறைக்க உதவும் உணவாகவும் இருக்கும். அதே நேரத்தில் குடல் ஆரோக்கியமும் மேம்படும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உங்களின் காலையை சிறப்பாக்கி, நாள் முழுவதையும் சுறுசுறுப்பாக மாற்றுகிறது. காலை உணவு எப்போதும் ஆற்றலை அளிப்பதாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கவேண்டும். அதுதான் உங்கள் முழுநாளையும் சிறப்பானதாக்குகிறது. எப்போதும் காலையில் சிறப்பான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, ஆரோக்கியமான உணவுகள் உண்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மதியம் மற்றும் இரவு கூட நீங்கள் மிதமான அளவு உணவு எடுத்துக்கொண்டால் போதும். ஆனால் காலை உணவு மட்டும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கவேண்டும். அதுபோன்ற உணவுகளை உங்களுக்கு தேர்ந்தெடுத்து வழங்கிவருகிறோம். அவை குடல் மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தையும் பேணுபவையாக இருக்கட்டும்.
பாலக்கீரை சிறியது – ஒரு கப் (கழுவி, ஆய்ந்து சுத்தம் செய்தது)
முட்டை – 2 (லேசாக மட்டும் அடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
உப்பு – சிறிதளவு
மிளகுத்தூள் – சிறிதளவு
முழுதானிய பிரட் – 1 ஸ்லைஸ்
ராஸ் பெரிகள் – ஒரு கப்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் கீரைகளை சேர்த்து அவற்றை நன்றாக வதக்கவேண்டும். தொடர்ந்து 2 நிமிடங்கள் வதக்கிவிட்டு, கீரையை ஒரு தட்டுக்கு மாற்றவேண்டும். பின்னர் அதே கடாயை அடுப்பில் வைத்து, ஏற்கனவே லேசாக அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்றாக கலந்து, அதில் உப்பு, மிளகுத்தூள் மற்றும் வதக்கிய கீரையை சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்தால், சூப்பர் சுவையில் முட்டை கீரை பிரட்டல் தயார்.
இதை முழுதானிய பிரட் மற்றும் ராஸ் பெரிகளுடன் பரிமாற, சூப்பர் சுவையான காலை உணவு தயார். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றும் உங்கள் வயிற்றை நிரப்பக்கூடிய சிறந்த உணவாகும். இதில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள் என்னவென்றும் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த காலை உணவில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள்
இதில் 296 கலோரிகள், 16 கிராம் கொழுப்பு, 21 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 18 கிராம் புரதச்சத்தும், நார்ச்சத்து 7 கிராமும், சர்க்கரை 5 கிராமும், சாச்சுரேடட் கொழுப்பு 4 கிராமும், கொலஸ்ட்ரால் 372 மில்லி கிராமும் உள்ளது. உங்கள் அன்றாட தேவையில் வைட்டமின் ஏ வை 66 சதவீதம் பூர்த்தி செய்கிறது. வைட்டமின் சி 28 மில்லி கிராமும், ஃபோலேட் 79 மைக்ரோ கிராமும், சோடியம் 394 மில்லி கிராமும், கால்சியம் 139 மில்லிகிராமும், இரும்புச்சத்து 4 மில்லி கிராமும், மெக்னீசியச்சத்து 76 மில்லி கிராமும் , பொட்டாசியம் 293 மில்லி கிராமும் உள்ளது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
தொடர்புடையை செய்திகள்