Morning Quotes : கண்ணாடியை தூக்கி தூற வீசுங்கள்! இந்த 8 பழங்கள், காய்கள் போதும்! உங்கள் கண்களின் ஆரோக்கியம் காக்கப்படும்-morning quotes throw away the glass these 8 fruits are enough your eye health will be protected - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : கண்ணாடியை தூக்கி தூற வீசுங்கள்! இந்த 8 பழங்கள், காய்கள் போதும்! உங்கள் கண்களின் ஆரோக்கியம் காக்கப்படும்

Morning Quotes : கண்ணாடியை தூக்கி தூற வீசுங்கள்! இந்த 8 பழங்கள், காய்கள் போதும்! உங்கள் கண்களின் ஆரோக்கியம் காக்கப்படும்

Priyadarshini R HT Tamil
Sep 29, 2024 06:31 AM IST

Morning Quotes : கண்ணாடியை தூக்கி தூற வீசுங்கள். இந்த 8 பழங்கள் மட்டும் போதும். உங்கள் கண்களின் ஆரோக்கியம் காக்கப்படும். கட்டாயம் எடுத்து பலன்பெறுங்கள்.

Morning Quotes : கண்ணாடியை தூக்கி தூற வீசுங்கள்! இந்த 8 பழங்கள் போதும்! உங்கள் கண்களின் ஆரோக்கியம் காக்கப்படும்!
Morning Quotes : கண்ணாடியை தூக்கி தூற வீசுங்கள்! இந்த 8 பழங்கள் போதும்! உங்கள் கண்களின் ஆரோக்கியம் காக்கப்படும்!

ப்ரோகோலி

ப்ரோகோலியில் அதிகளவில் வைட்டமின் சி, லுட்டின் மற்றும் சியாக்சாத்தின் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை உங்கள் கண்களின் ரெட்டினாவைக் காக்க உதவுகின்றன. ஒரு கப் வேகவைத்த ப்ரோகோலியை நீங்கள் ஒரு வாரம் தொடர்ந்து எடுத்து வந்தால், அது உங்கள் கண்களின் திறனை குறிப்பிட்ட அளவு மேம்படுத்தும்.

தக்காளி

தக்காளியில் அதிகளவில் லைக்கோபென்கள் உள்ளது. அது உங்கள் கண்களை பாதுகாக்க உதவும் முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இது உங்கள் கண்களுக்கு வெளிச்சம் மற்றும் ஒளியால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்கள் உங்கள் ஒட்டுமொத்த கண்களின் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.

கேரட்

கேரட்கள் கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்ட ஒரு காயாகும். அதற்கு அவற்றில் உள்ள பீட்டாகரோட்டின்கள் காரணமாகின்றன. அவற்றை நமது உடல் வைட்டமின் ஏவாக மாற்றுகிறது. வைட்டமின் ஏ ஆரோக்கியமான பார்வையைக் கொடுக்கிறது. குறிப்பாக குறைந்த ஒளியிலும் உங்களின் பார்வைத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. எனவே ஒரு கப் சமைத்த அல்லது சமைக்காத கேரட் எடுப்பதை உறுதிப்படுத்துங்கள்.

கீரை

கீரைகளில் முழுவதும் லுட்டின்கள் மற்றும் சியாங்த்தானின்கள் உள்ளது. இந்த இரண்டு சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களும், உங்களின் கண்களை கடுமையான விளக்கு ஒளியில் இருந்து காக்கின்றன. இவை உங்களுக்கு கண்புரை நோய் போன்ற ஆபத்துக்கள் ஏற்படுவதை குறைக்கின்றன. இது வயோதிகம் தொடர்பான கண் கோளாறுகளை சரிசெய்கின்றன. எனவே தினமும் ஒரு கப் கீரை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

ஆரஞ்சு

ஆரஞ்சு மறுறும் மற்ற சிட்ரஸ் அமிலத்தை சுரக்கச் செய்யும் பழங்கில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் கண் ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. வைட்டமின் சி ரத்த நாளங்களை வலுப்படுத்துகிறது. இது உங்கள் கண்களில் உள்ள ரத்த நாளங்களுக்கு வலு சேர்த்து உங்களுக்கு கண்புரை ஏற்படும் ஆபத்தை மெதுவாக்குகிறது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தின் சாறு அல்லது ஒரு பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

கேரட்டைப்போல் சர்க்கரை வள்ளிக்கிழங்கிலும் பீட்டா கரோட்டின்கள் உள்ளது. இது உங்கள் உடலில் சென்று வைட்டமின் ஏவாக மாறுகிறது. இந்த வைட்டமின்கள் உங்கள் கண் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பாதுகாக்கிறது. அதன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

குடைமிளகாய்

குடைமிளகாயில் குறிப்பாக சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளன. இவை உங்கள் கண்களில் உள்ள ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது உங்களுக்கு கண்புரை நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

ப்ளுபெரிகள்

ப்ளுபெரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இதில் வைட்டமின் சி மற்றும் இ சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்த்துக்கள் உங்கள் கண்களை ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தில் இருந்து காக்கின்றன. இதனால் உங்களின் கண் பார்வை அதிகரித்து, கண்களில் ஏற்படும் கோளாறுகள் தடுக்கப்படுகின்றன.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.