Morning Quotes : யூரிக் ஆசிட் பிரச்னையால் அவதியா? இந்த உணவுகள் மட்டும் காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : யூரிக் ஆசிட் பிரச்னையால் அவதியா? இந்த உணவுகள் மட்டும் காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும்!

Morning Quotes : யூரிக் ஆசிட் பிரச்னையால் அவதியா? இந்த உணவுகள் மட்டும் காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும்!

Priyadarshini R HT Tamil
Published Aug 17, 2024 06:18 AM IST

Morning Quotes : யூரிக் ஆசிட் பிரச்னையால் அவதியெனில், இந்த உணவுகள் மட்டும் காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். அப்போது ஏற்படும் மாற்றத்தை கவனியுங்கள்.

Morning Quotes : யூரிக் ஆசிட் பிரச்னையால் அவதியா? இந்த உணவுகள் மட்டும் காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும்!
Morning Quotes : யூரிக் ஆசிட் பிரச்னையால் அவதியா? இந்த உணவுகள் மட்டும் காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும்!

செம்பருத்தி

காயவைத்த செம்பருத்தி அல்லது காயவைத்த செம்பருத்தி பூ அல்லது பூ பொடியில் இருந்த தயாரிக்கப்படும் தேநீர். இதை நீங்கள் காலையில் அருந்துவதை வழக்கமாகக்கொண்டால், உங்களுக்கு யூரிக் அமில பிரச்னைகள் ஏற்படாது.

டென்டெலியன்

டென்டெலியன் மலர்களை காயவைத்து அதில் தயாரிக்கப்படும் தேநீரை நீங்கள் காலையில் பருகினாலும், உங்களுக்கு யூரிக் அமில பிரச்னைகள் ஏற்படாது.

செலரி

செலரியில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள் மற்றும் வைரஸ்க்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. இதுவும் யூரிக் அமில பிரச்னைகளை கட்டுப்படுத்தும்.

இஞ்சி

இஞ்சி அல்லது இஞ்சி டீயும் உதவும். இஞ்சிக்கு வீக்கத்தை குறைக்கும் தன்மை உண்டு. எனவே, இஞ்சி டீயும் உங்களுக்கு வீக்கத்தை குறைத்து, கீல்வாதத்தை தடுக்கும்.

வாழைப்பழம்

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உங்களுக்கு உதவியாக இருக்கும். அதுவும் உங்கள் உடலில் யூரிக் அமில அளவுகளை குறைக்கும்.

மெக்னீசியம்

பாதாம், முந்திரி, கீரை, பரங்கிக்காய் போன்ற காய்கறிகள் என அனைத்தும், உங்கள் உடலுக்கு மெக்னீசியச் சத்தை வழங்கக்கூடியவை. எனவே இவற்றை எடுக்கும்போதும் உங்கள் உடலில் யூரிக் அமிலம் குறையும்.

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரை எடுப்பதும் உங்கள் உடலில் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தும்.

யூரிக் அமிலம்

உங்கள் உடலில் அதிகம் யூரிக் அமிலம் இருந்தால், அது ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படும். நீங்கள் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களில் உள்ள பியூரின்கள் என்ற வேதிப்பொருட்களை உடைக்கும்போது உங்கள் உடலில் உருவாகும் கழிவுப்பொருள் ஆகும்.

பொரும்பாலான யூரிக் அமிலத்தை உங்கள் ரத்தமே கரைத்துவிடும். அதை உங்கள் சிறுநீரத்திற்கு கொண்டு சென்று நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, வெளியேற்றிவிடும். ஆனால் உங்கள் உடலில் அதிகளவில் யூரிக் அமிலம் இருந்தால், அப்போது ஹைப்பர்யூரிசிமியா ஏற்படுகிறது.

இந்த அதிகப்படியாக யூரிக் அமிலம் உங்கள் உடலில் ஒன்றுசேர்ந்து கற்களாக மாறி, உங்கள் மூட்டுகளில் ஆரித்ரிட்டிஸ் நோயை ஏற்படுத்துகிறது. உங்கள் சிறுநீரகத்தில் சிறுநீரக கற்களையும் ஏற்படுத்துகிறது.

இந்நோயை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். இந்நோய் ஏற்பட்டால் நீங்கள் அதிகளவு தண்ணீர் குடிக்கவேண்டும். மருந்து மாத்திரைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். 5ல் ஒருவருக்கு இந்நோய் ஆபத்து உள்ளது.

அறிகுறிகள்

உங்கள் ஹைப்பர்சிமீயா உள்ளது எனில, அது உங்கள் வலிகளைக் கொடுத்து, உங்கள் உடல் முழுவதிலும் சேதத்தை ஏற்படுத்தும்.

உங்கள் எலும்புகள், மூட்டுகள், சவ்வுகளில் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும்.

சிறுநீரக நோய், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஃபேட்டி லிவர் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்கள் என அனைத்தை நோய்களையும் ஏற்படுத்தும்.

ஹைப்பர்யூரிசிமியா ஏற்பட்டால், பெரும்பாலும், அறிகுறிகள் தோன்றுவதில்லை. பெரும்பாலும், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாதவரை பெரும்பாலானோருக்கு இது தெரிவதில்லை.

மூட்டுகளில் கடும் வலி, சிவத்தல், இறுக்கம், வீக்கம், கொழகொழப்பு, நெருப்பு போன்ற சூரி ஆகியவை ஏற்படும்.

சிறுநீரகத்தில் கற்கள் தோன்றினால் ஏற்படும் அறிகுறிகள்

பின்புறத்தில் வலி

வாந்தி

காய்ச்சல்

சிறுநீரில் ரத்தம்

சிறுநீர் கழிக்கும்போது வலி

சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமம்

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

சிறுநீரில் துர்நாற்றம்

உடலில் அதிக யூரிக் அமிலத்தை கொண்டுவரும் உணவுகள்

சிவப்பு இறைச்சி

ஈரல்

குப்பை உணவுகள்

ஃப்ரூக்டோஸ் கார்ன் சிரப் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள்

மது

பாதிப்பு ஆபத்துக்கள்

உடல் பருமன்

ஆண் குழந்தைக்கு பிறக்கும்போதே ஏற்படும்

மதுவை வழக்கமாக எடுத்துக்கொள்ளும்போது

அதிக ப்யூரின்கள் நிறைந்த உணவு உட்கொள்ளும்போது

மரபணுக்கள்

ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்கு

ரத்த பரிசோதனை செய்யும்போது உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகம் உள்ளது என்று தெரிந்தால், நமது உணவில் நார்ச்சத்துக்குள் மற்றும் நீர்ச்சத்துக்கள் உள்ள உணவை அதிகளவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். புதிய செல்களை உருவாக்கக் கூடிய உணவுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

யூரிக் அமிலம் உடலில் அதிக அளவு உள்ளவர்கள் மாதுளை மற்றும் வெள்ளிரி பழத்தின் சாறை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளவேண்டும்.