Morning Quotes : காலையில் எழுந்தவுடனே இதை செய்யவேண்டுமா? ஆதர்ஷ தம்பதிகளாகும் வழிகளுள் ஒன்று!
Morning Quotes : காலையில் எழுந்தவுடனே இதை செய்யவேண்டுமா? ஆதர்ஷ தம்பதிகளாகும் வழிகளுள் ஒன்றை தெரிந்துகொண்டால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்.
தொடர்புகொள்வது மற்றும் இணைந்திருப்பதில் ஏற்படும் இழப்புதான், தம்பதிகளை பிரிக்கிறது. இருவருமே பிஸியாக இருந்தால், இருவரும் சேர்ந்து செலவிடும் நேரம் குறையும்., எனினும் அத்தனை பிஸியான தம்பதிகள் சில வேலைகளை காலையில் சேர்ந்து செய்தால் போதும். அது உங்களுக்கு உதவும்.
ஒன்றாக நடைப்பயிற்சி,தேநீர் பருகுவது, நன்றி பகிர்வது, அந்த நாளை திட்டமிடுவது, இணைந்து காலை உணவை தயாரிப்பது என செய்வது தம்பதிகளின் உணர்வு ரீதியாக ஒன்றிணைந்திருப்பதை ஊக்கப்படுத்தும். இது உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த நலனுக்கும் பாதிக்கும்.
இருவரிடையே பேச்சு குறையும்போது தம்பதிகள் பிரிகிறார்கள். பிஸியான வேலைகள், இருவரும் சேர்ந்திருக்கும் நேரத்தை குறைக்கிறது. எனவே அதிகாலையில் எழுவதும், சில பழக்கங்களை நடைமுறைப்படுத்திக்கொள்வதும், இருவரும் சேர்ந்து தரமான நேரத்தை செலவிட அவர்களுக்கு உதவும்.
காலையில் உங்களுக்கு உள்ள வழக்கம் மனஅழுத்தத்தை குறைக்கும், உங்களின் ஆற்றலை அதிகரிக்கும், உங்களின் வேலையில் திறனை அதிகரிக்கும். காலையில் நீங்கள் நேரம் செலவிடும்போது உங்களுக்கு ஏற்படும் இந்த பிணைப்பு வாழ்வின் பிணைப்பாக மாறும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தேநீர்
ஒன்றாக அமர்ந்து தேநீர் பருகும்போது பேசுவது, நிறைய உரையாடல்களுக்கு வழிவகுக்கும். ஆனால் அப்போது பணி தொடர்பான எதையும் பேசாதீர்கள். உங்களின் சிந்தனைகள், நினைவுகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை மட்டும் பகிருங்கள். காலையில் ஒன்றாக சேர்ந்து பருகும் தேநீர்தான் உங்கள் உறவை வளர்க்கும்.
நடைப்பயிற்சி
கொஞ்சம் வீ நேரமும் அதாவது ஆங்கிலத்தில் வீ என்றால் நாம், உங்களுக்காக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அதையும் இயற்கையுடனும், பறவைகளின் ஒலியுடனும், பசுமை சூழ இருந்தால், உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரந்து உங்கள் உரையாடலை நேர்மைறையாக்கும்.
காலை நடை, உங்கள் ஒட்டுமொத்த நலன் மற்றும் தம்பதிகளிடையே உணர்வு நெருக்கத்தை அதிகரிக்கும். எனவே தினமும் நடப்பது உங்களுக்கு சில தரமான நேரத்தை ஒன்றாக கழித்த வாய்ப்பைத் தரும். உங்களை ஃபிட் மற்றும் ஆரோக்கியமாகவும் வைக்கும்.
இருவரின் துணைக்கு நன்றியுடன் இருங்கள்
உங்களிடம் நன்றியுரைக்கும் வழக்கம் இருந்தால்,ல அது உங்களுக்கு நிறைய பாரட்டுக்களைக் கொண்டுவரும். ஒவ்வொருவரின் இருப்பையும், வாழ்க்கைக்கு நீங்கள் கொடுத்த பங்களிபையும் பாராட்டுங்கள். உங்களின் பார்ட்னரின் கடும் பணிக்காக அவரை பாராட்டுங்கள். அவர்களுக்கு நேர்மையாக நன்றி கூறுங்கள். இது உங்கள் இருவரிடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். இந்த தொடர்பு உங்களை கடின காலங்களில் காக்கும்.
உங்கள் நாளை திட்டமிடுங்கள்
உங்களின் நாளை நீங்களாகவே திட்டமிடாமல் உங்கள் பார்ட்னருடன் சேர்ந்து திட்டமிடுங்கள். அவர்களின் ஃபீட்பேக்கை உங்கள் திட்டங்களுக்காக கேட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொருவரையும் பணியில் ஆதரிப்பது, உங்களுக்கு வேலையில் சிறக்க உதவும். இது தம்பதிகளுக்கு தொடர்பில் இருப்பதற்கு மற்றொரு வாய்ப்பை வழங்கும். எனவே எப்போதும் உங்கள் இணையருடன் சேர்ந்து திட்டமிடுங்கள்.
காலை உணவு
இருவரும் சேர்ந்து காலையில் உணவு தயாரியுங்கள். காலை உணவை பரபரப்பாக தயாரிக்காதீர்கள். உங்களுக்கு தேவையான அளவு நேரம் எடுத்து, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவை உங்களுக்காக தயாரித்து, ஒன்றாக சாப்பிட்டு மகிழுங்கள். சமையலறையில் இருவரும் உதவிக்கொள்ளலாம். இது வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்வதுடன், உங்களுக்கு சேர்ந்திருக்கும் நேரத்தையும் கொடுக்கும்.
உங்கள் வாழ்வில் சேர்ந்திருக்கவும், புரிந்துகொள்வது இப்படி நீங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது உதவும். உங்கள் வாழ்வை சிறக்கச் செய்யும். உங்களின் மனநிலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திருமண பந்தம் நீண்ட காலம் நிலைக்க உங்கள் இணையருடன் நீங்கள் நன்றாக பேசவேண்டும். எனவே இந்த காலை பழக்கவழக்கங்களை உங்கள் பார்ட்னருடன் சேர்ந்து செய்து பார்த்து பலன்பெறுங்கள்.
அது உங்கள் நாளை நேர்மறையானதாக்கும். ஒவ்வொருவரின் பலத்திலும் நீங்கள் கவனம் செலுத்த முடியும். உணர்வு ரீதியான பிணைப்பு மற்றும் ஆதரவான, நீண்ட உறவுக்குள் இருக்கலாம். இதுபோல் நீங்கள் காலையில் பகிர்ந்துகொள்ளும் விஷயங்கள் உங்கள் தொடர்பை ஆழமானதாக்கும். உங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும். உங்கள் சவால்களை சிறப்பாக எதிர்கொள்ள உதவும். இதை செய்துவிட்டு, உங்கள் உறவு வளர்வதை பாருங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்