Morning Quotes : பெண்களே கருத்தரிக்க முயற்சியா? உடலில் ப்ரொஜெஸ்ட்ரோன் அளவை அதிகரிக்கச் செய்வது எப்படி?
Morning Quotes : பெண்களே கருத்தரிக்க முயற்சியா? உடலில் ப்ரொஜெஸ்ட்ரோன் அளவை அதிகரிக்கச் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கருத்தரிக்க முயற்சிக்கு பெண்களின் உடலில் ப்ரொஜெஸ்ட்ரோனின் அளவை அதிகரிக்கும் 10 வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் ப்ரொஜெஸ்ட்ரோன் என்பது ஒரு முக்கிய ஹார்மோன் ஆகும். இது பெண்களின் மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன்தான் கர்ப்பம், ஒட்டுமொத்த ஹார்மோன் சமமின்மை ஆகியவற்றுக்கு உதவுகிறது. உணவில் இருந்து ப்ரொஜெஸ்ட்ரோனை நேரடியாகப் பெற முடியாது. சில ஊட்டச்சத்துக்கள், உடலில் இந்த ஹார்மோனை தூண்டும். உங்கள் உடலில் இயற்கையாக இந்த ஹார்மோனை சுரக்கச் செய்யும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் கருத்தரிக்க விரும்பினால், அது உங்களுக்கு விரைவில் நிறைவேற உதவும்.
கீரை
கீரைகளில் மெக்னீசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது அட்ரினல் சுரப்பிகளுக்கு உதவுகிறது. இந்த அட்ரினல் சுரப்பிகள்தான் ப்ரொஜெஸ்ட்ரோன் சுரப்புக்கு தேவையானவையாகும். மெக்னீசியம் உடலில் ஹார்மோன்களை சமப்படுத்த உதவுகிறது.
பரங்கிக்காய் விதைகள்
பரங்கிக்காய் விதைகளில் அதிகளவில் சிங்க் சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் பிட்யூட்ரி சுரப்பிகளை தூண்டுகிறது. இதனால் உடலில் உள்ள ஃபாலிக்கிள்கள் என்ற ஹார்மோன்கள் தூண்டப்படுகிறது. இது உடலில் ப்ரொஜெஸ்ட்ரோன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
கொண்டக்கடலை (சன்னா)
கொண்டக்கடலையில் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. இது உடலில் ப்ரொஜெஸ்ட்ரோன் அதிகம் சுரக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான மாதவிடாயின் இரண்டாம் பாதியை நிர்வகிக்க உதவுகிறது.
பாதாம்
பாதாமில் ஆரோக்கிய கொழுப்புகள் மறறும் வைட்டமின் இ சத்துக்கள் உள்ளது. இது ஹார்மோன்கள் உற்பத்தி மறறும் உடலில் ப்ரொஜெஸ்ட்ரோன் அளவை முறையாகப் பராமரிக்க உதவுகிறது.
அவோகேடோ
அவோகேடோக்களில் ஆரோக்கிய கொழுப்பு, பொட்டாசியம் ஆகியவை அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் அட்ரினல் இயக்கத்தை அதிகரித்து உடலில் ப்ரொஜெஸ்ட்ரோன் உற்பத்திக்கு அடிகோலுகிறது. இதனால் உடலில் ஹார்மோன் சமம் ஏற்படுகிறது.
ஃபேட்டி ஃபிஷ்
ஃபேட்டி ஃபிஷ் என்றால் அதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் நிறைந்தது. இது உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஹார்மோன்களை முறைப்படுத்துகிறது. ப்ரொஜெஸ்ட்ரோன் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்கும் வழிவகுக்கிறது.
முட்டையின் மஞ்சள் கரு
முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி சத்துக்கள், கொழுப்பு, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளது. இவை உடலில் ப்ரொஜெஸ்ட்ரோன்கள் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
வால்நட்
வால்நட்களில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது உங்கள் உடலில் ஹார்மோன்களின் அளவை முறைப்படுத்த உதவுகிறது. வீக்கத்தைக் குறைத்து ப்ரொஜெஸ்ட்ரோன்கள் உற்பத்திக்கு உதவுகிறது.
குயினோவா
குயினோவாவில் அதிகளவில் மெக்னீசியச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் பி 6 மற்றும் புரதச்சத்துக்கள்மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்த உதவுகிறது. இது உடலில் இயற்கையாகவே ப்ரொஜெஸ்ட்ரோன் உற்பத்திக்கு உதவுகிறது.
ப்ரோகோலி
ப்ரோகோலியில் இன்டோல் 3 கார்பினால் அதிகம் உள்ளது. இது ஈஸ்ட்ரோஜெனை வெளியேற்ற உதவும் ஒரு உட்பொருள் ஆகும். ப்ரோகோலி ஈஸ்ட்ரோஜென் அளவை சமப்படுத்த உதவும். இது உடலில் ப்ரொஜெஸ்ட்ரோன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
தொடர்புடையை செய்திகள்