Morning Quotes : ‘வேணாம்’ இத மட்டும் உங்க குழந்தைங்க கிட்ட சொல்லிடாதீங்க! அதை நசூக்காக சொல்ல கத்துக்கங்க!
Morning Quotes : ‘வேணாம்’ இத மட்டும் உங்க குழந்தைகளிடம் கூறிவிடாதீர்கள். அதை நாசுக்காக சொல்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளின் நேரடியாக இல்லை மற்றும் கூடாது என்று சொல்லாமல் அதை மறைமுகமாகக் கூறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளவேண்டுமெனில், நீங்கள் இதை தொடர்ந்து படிக்கவேண்டும். இல்லை அல்லது கூடாது என்பதை அவர்களிடம் நாசூக்காக எடுத்துக் கூறுவதுதான் பேரன்டிங்கில் உள்ள பெரிய சவால். உங்கள் பெற்றோரிய பயணத்தில் சில நேரங்களில் நீங்கள் இல்லை என்பதை நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூறவேண்டிய நிலை ஏற்படும். எனவே நீங்கள் நேர்மறையாகவும், மரியாதை நிறைந்தும் இந்த வார்த்தைகளைக் கூறும்போது அவர்களுக்கு அது உதவுகிறது. அவர்களுக்கு எல்லை வகுப்பதிலும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் புதிய வழியை தெரிந்துகொள்ளுங்கள்.
மற்றொரு வழியை கண்டுபிடிக்கலாம் வாங்க
நேரடியாக ‘இல்லை அல்லது கூடாது’ என்று சொல்வதற்கு பதில் நாம் வேறு ஒரு வழியை கண்டுபிடித்து இந்தப்பிரச்னையை சமாளிக்கலாம். இதனால் உங்கள் குழந்தைக்கு மாற்று தீர்வும் கிடைக்கும், பிரச்னைகளை தீர்க்கும் தீர்வும் அதிகரிக்கும். இது முடிவெடுக்கும் நடவடிக்கைகளில் அவர்களையும் ஈடுபடுத்திய உணர்வைத்தரும்.
இது முக்கியம் என்று எனக்கு புரிகிறது, ஆனால்…..
அவர்களின் உணர்வுகளை ஏற்கும் விதமாக நீங்கள் ‘இது உனக்கு முக்கியம் என்று எனக்கு புரிகிறது’ ஆனால் நாம் தற்போது வேறு ஒன்றில் கவனம் செலுத்தவேண்டும்‘ இது அனுதாபம் மறறும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் கவனத்தை நீங்கள் வேறு திசைக்கு மாற்றிய உணர்வைத்தரும்.