Morning Quotes : உங்கள் குழந்தைகள் படுப்பில் படுசுட்டியாக வேண்டுமா? எனில் அவர்கள் பின்பற்ற வேண்டியது என்ன?
Morning Quotes : உங்கள் குழந்தைகள் படுப்பில் படுசுட்டியாக வேண்டுமா? எனில் அவர்கள் பின்பற்ற வேண்டியது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் படிக்கும்போது சில பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். ஆனால் அது தேவையில்லாததுபோல் தெரியலாம். ஆனால் நீங்கள் படிப்பில் தேர்ச்சிபெறவேண்டுமெனில் அவை மிகவும் அவசியம். இதுபோன்ற சிறிய விஷயங்களை நீங்கள் பின்பற்றினாலே போதும், நீங்கள் படுப்பில் படுசுட்டியாகிவிடலாம். உங்கள் குழந்தைகளுக்கு உதவுவதற்கு பெற்றோர்கள் அவர்கள் இவற்றையெல்லாம் பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும். அவர்களுக்கென்று இலக்குகள் இருக்கவேண்டும். நினைவு கூறுவது, மீண்டும், மீண்டும் செய்யவேண்டியது. படிக்கும் நோட்ஸ்களை முறையாக வைத்திருப்பது. எழுதிய குறிப்புக்களில் இருந்து படிக்காமல் படித்ததை நினைவு கூறுவது. உறக்கம், நல்ல சத்தான உணவு, நீங்கள் படித்ததை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பது. மனதில் படம், வரைபடங்கள் என படிக்க உபயோகிப்பது, குழுவாக படிப்பது, படித்தவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும நினைவு கூறுவது, படிப்பு – இடைவெளி இரண்டுக்கும் சரியான நேரம் ஒதுக்குவது போன்ற விஷயங்களை நீங்கள் பின்பற்றினாலே போதும் படிப்பில் நீங்கள்தான் அல்லது உங்கள் குழந்தைதான் முதலிடம். அவற்றை எப்படி பின்பற்றுவது என்பதை விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.
படிக்கும் இடம் மற்றும் மெட்டீரியல்கள்
நீங்கள் அமர்ந்து படிக்கும் இடத்தை முறையாக வைத்திருங்கள். நீங்கள் படிக்க உபயோகிக்கும் அனைத்து பொருட்களையும் சரியாக வைத்திருங்கள். நீங்கள் படிக்கும்போது குறிப்பு எடுத்துக்கொள்வீர்கள் என்றால் அதற்கு தேவையான பொருட்களை வைத்திருங்கள். முறையான இடம், உங்களின் கவனச்சிதறலை குறைக்கும். உங்களின் ஆற்றலை அதிகரிக்கும்.
புத்தகத்தை புரட்டுவதைவிட நினைவாற்றலை புரட்டுங்கள்
நீங்கள் எடுத்து வைத்துள்ள குறிப்புகளை படிப்பதைவிட, உங்களில் நினைவில் இருந்து தேவையான தகவல்களை மீண்டும் நினைவுகூற முயற்சியுங்கள். இது அந்த தகவல்களுடன் உங்கள் நரம்பியல் தொடர்பை அதிகரிக்க உதவும்.
உறக்கத்துக்கு முக்கியத்துவம்
உங்களின் இரவு உறக்கம் ஆழ்ந்ததாக இருக்கவேண்டும். அது ஏற்படுத்தும் பாதிப்புக்களையும், இரவு உறக்கத்தையும் குறைத்து எடைபோடாதீர்கள். போதிய உறக்கம் உங்கள் நினைவுகள் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.
கற்றதை கற்பித்தல்
நீங்கள் படித்த விஷயங்களை மற்றவர்களிடம் விளக்க வேண்டும் அல்லது சத்தமாக உங்களிடம் நீங்களே விளக்கிக்கொள்ளவேண்டும். இது உங்களுக்கு தேவையான தகவல்களை புரிந்துகொள்ளவும், மூளை பதிவு செய்துகொள்ளவும் உதவும்.
விசுவல் எய்ட்ஸ்
படங்கள் வரைவது, மனதில் மேப் போடுவது, சார்ட்கள் என உங்களின் தகவல்களை காட்சிகளாக்குங்கள். இதனால் உங்களின் சிக்கலான பாடங்களும் உங்களுக்கு எளிதாக புரிந்துவிடும்.
குழுவாக படித்தல்
பள்ளியில் அல்லது கல்லூரியில் குழுவாக சேர்ந்து படிக்கும் முறைகள் இருக்கும். அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் குழுவாக சேர்ந்து கணக்குகளைப் போடுவது, படிப்பு குறித்து பேசுவதும் நீங்கள் படிப்பில் சிறந்து விளங்க உதவும். குழுவாக நீங்கள் படிக்கும்போது, அது உங்களுக்கு பல்வேறு கோணங்களைத்தரும். அது கற்றலை வலுவாக்கும்.
மீண்டும் படிக்கும் கால அவகாசம்
நீங்கள் படிக்கும் நேரத்தை சரியான அளவில் முறைப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் நீண்ட நேரம் படிக்கப்போகிறீர்கள் என்றால் அதற்கு ஏற்றாற்போல் படியுங்கள். மேலும் படித்தவற்றை அவ்வப்போது மீண்டும் நினைவுகூறுங்கள். இது உங்கள் நினைவாற்றல் திறனை மேம்படுத்தும்.
பொமொடொரோ முறை
இது படிப்பு – இடைவெளி என்பதற்கு சரியான கால அளவை நிர்ணயிக்கிறது. ஒரு மணி நேரம் படிப்பு 10 நிமிடம் இடைவெளி என்பதை உறுதிப்படுத்துகிறது. இது உங்களின் கவனத்தை அதிகரிக்க உதவும். நீங்கள் அதிக நேரம் அமர்ந்து படிப்பதால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கும். இந்த நேரத்தை நீங்கள் குறைத்துக்கொள்ளலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த 10 விஷயங்களை நீங்கள் பின்பற்றினாலே போதும் படிப்பில் படுசுட்டியாகலாம். எனவே கவனமுடன் படித்து முன்னேறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்