Morning Quotes : வெற்றியாளராக மாற ஆசையா.. இதோ ரகசியம்.. டிஜிட்டல் டிடாக்ஸ் முதல் உடற்பயிற்சி வரை!
Morning Quotes : ‘எதுவும் தாமதமாகி விடவில்லை. இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்கு செல்லாம்’ வண்ணதாசன் வரிகள் இவை. இந்த வரிகளை ஒருவர் எத்தனை முறை வாசித்தாலும மனிதர்களுக்கு புத்துணர்ச்சியையும் நம்பிக்கையும் தரும். பகலில் சிறிது நேரம் டிஜிட்டல் மீடியாவிலிருந்து விலகி இருங்கள்.

Morning Quotes : ‘எதுவும் தாமதமாகிவிட வில்லை. இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்கு செல்லாம்’ வண்ணதாசன் வரிகள் இவை. இந்த வரிகளை ஒருவர் எத்தனை முறை வாசித்தாலும மனிதர்களுக்கு புத்துணர்ச்சியையும் நம்பிக்கையும் தரும். தினம் தினம் காலை விடியும் போதும் முந்தைய நாளின் கவலையின் தாக்கத்தை மறப்பதோடு, புதிய நாளின் உற்சாகத்தை பற்றிக்கொண்டு நமது வாழ்க்கையை அமைப்பது எப்போதும் நம்மை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள உதவும். இது நாள் வரை இல்லை என்றாலும் இன்றிலிருந்து இதை தொடங்குங்கள். அத்துடன் தினமும் நீங்கள் இந்த 6 விஷயங்களை முயற்சி செய்யுங்கள் இப்படி செய்வதன் மூலம் அடுத்த புத்தாண்டின் தொடக்கத்தில் உங்களை ஆற்றல் நிறைந்தவராகவும், வெற்றியாளராகவும் பார்க்க உதவும்
ஒவ்வொரு நாளும் புதியது
உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழி ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வதாகும். அதாவது, ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஆன்லைன் படிப்புகளைக் கற்றுக்கொள்ளுங்கள். புதிய புத்தகங்களைப் படியுங்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். பயிற்சிகள், பட்டறைகள் போன்றவற்றில் பங்கேற்கவும். உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி பெரிதும் பயனளிக்கும். உங்கள் தனிப்பட்ட வெற்றியை சிறப்பானதாக மாற்றும்.
டிஜிட்டல் டிடாக்ஸ்
சமூக ஊடக தளங்களின் வருகையால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிஜிட்டல் யுகத்திற்கு நெருக்கமாகிவிட்டனர். மேலும், நெட் ஃபிளிக்ஸ், ஹாட் ஸ்டார் போன்ற பொழுதுபோக்கு சேவைகள் நிறைந்த டிஜிட்டல் மீடியா நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பகலில் சிறிது நேரம் டிஜிட்டல் சாதனங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். டிஜிட்டல் நச்சு நீக்கம் என்று நினைத்துக்கொள்ளுங்கள். பகலில் சிறிது நேரம் டிஜிட்டல் மீடியாவிலிருந்து உங்களைத் துண்டித்துக் கொள்வது அவசியம். தினமும் ஒரு மணி நேரம் இப்படி செய்தால் மன அழுத்தம் வெகுவாக குறையும். அந்த நேரத்தில் அமைதியான புத்தகத்தைப் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.