Morning Quotes : இந்த 8 பழக்கங்கள் நம்மை எப்படிபெய்யலாம் மாற்றுகிறது பாருங்கள்!
Morning Quotes : சரிவிகித காலை உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை மட்டும் கொடுக்காது. மேலும் உங்களை ஆரோக்கிய தேர்வுகளை செய்யவும் ஊக்கப்படுத்தும். விரைவில் நீங்கள் சாப்பிடக்கூடிய, கிரீக் யோகர்ட், பாதாம் வெண்ணெய் தடவிய பிரட் துண்டுகள், உங்கள் நாளை துவக்க சிறந்ததாகும்.

காலை நேரத்தில் இந்தப்பழக்கங்களை நீங்கள் பழகும்போது, அது உங்கள் உடலுக்கு புது உற்சாகத்தைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. காலையில் நாம் உறங்கி எழுவது மிகவும் சவாலான ஒன்றாகும். இரவில் அதிக நேரம் விழித்திருந்தால் காலையில் விழிப்பு என்பதே வராது. மிகவும் கடினமாக இருக்கும். அதிகாலையில் கண் விழிப்பதுதான் உங்கள் நாளை சுறுசுறுப்பாக்கும் என்று கூறப்படுகிறது. இதை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது தெரியவரும். நீங்கள் அதிகாலையில் எழுந்துவிட்டால், உங்களுக்கு நிம்மதியாக சாப்பிட நேரம் இருக்கும். உங்களின் நாளையும் திட்டமிடலாம். சில எளிய விஷயங்கள், உங்களை நாள் முழுமையையும் சுறுசுறுப்பாக்கும். நீங்கள் சில காலை பழக்கங்களை கை கொள்ளும்போது, உங்களுக்கு மனஅழுத்தம் குறையும். உங்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். உங்களின் அன்றாட வாழ்க்கை சிறப்பாகும். உங்களின் காலையை சிறப்பாக்க இந்த 8 விஷயங்கள் உதவும்.
அதிகாலையில் எழவேண்டும்
அதிகாலை 5 மணிக்கெல்லாம் கண் விழிக்கவேண்டும். அது உங்கள் நாளை சுறுசுறுப்பாக்கும். அதற்காக உங்களின் அலாரத்தை நீங்கள் 10 நிமிடம் முன்னதாக வையுங்கள். இதனால் உங்களுக்கு கொஞ்சம் கூடுதல் நேரம் கிடைக்கும். அதில் நீங்கள் கொஞ்சம் ரிலாக்ஸாக காபி பருகலாம். செய்தித்தாள்களைப் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
தண்ணீர் பருகவேண்டும்
காலையில் நீங்கள் எழுந்தவுடன், இரவு முழுவதும் நீங்கள் நீண்ட நேரம் தண்ணீர் பருகாமல் இருந்திருப்பீர்கள். எனவே நீங்கள் காலையில் அதிக தண்ணீரை பருகவேண்டியது அவசியம். இதனால் உங்கள் உடலில் ஆற்றலை அளவுகளை அதிகரித்துக்கொள்ளலாம். எனவே காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது மிகவும் அவசியம். அது இளங்சூடான தண்ணீராக இருப்பது நல்லது என்று கூறப்படுகிறது.
காலை உணவு
காலை உணவை நீங்கள் கட்டாயம் சாப்பிடவேண்டும். அது மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. நீங்கள் காலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வதால் உங்கள் முழு நாளும் சிறப்பாகிறது. சரிவிகித காலை உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலுடன், உங்களுக்கு ஆரோக்கிய தேர்வுகளை செய்யவும் ஊக்கப்படுத்தும். விரைவில் நீங்கள் சாப்பிடக்கூடிய, கிரீக் யோகர்ட், பாதாம் வெண்ணெய் தடவிய பிரட் துண்டுகள், உங்கள் நாளை துவக்க சிறந்ததாகும். மேலும் உங்களின் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்துக்கும் அது உதவுகிறது.
எழுந்தவுடன் சிறிய பயிற்சிகள்
நீங்கள் காலையிலே ஜிம்முக்குச் சென்று, கடும் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. காலையில் எழுந்து நீங்கள் செய்யும் சில எளிய பயிற்சிகள் கூட உங்கள் உடலில் ரத்தம் நன்றாக ஓட உதவும். உங்களை விரைவில் சுறுசுறுப்பாக்கும் என்று கூறப்படுகிறது.
எளிய சில வீட்டு வேலைகள்
நீங்கள் காலையிலே படுக்கையை சுருட்டுவது, சமைத்த பாத்திரங்களை அலசி வைப்பது என செய்துகொண்டால், அது உங்களுக்கு மாலையில் நீங்கள் சோர்ந்துபோய் வீடு திரும்பும்போது பல பிரச்னைகளை ஏற்படுத்தாது. உங்களின் மாலையை இது மிகவும் அமைதியாக்கும். நாளின் முடிவில் நீங்கள் வீடு திரும்பும்போது, உங்களுக்கு ரிலாக்ஸாக வரலாம்.
தியானம்
காலையில் நீங்கள் செய்யும் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, உங்களின் மனதை அமைதிப்படுத்தும். மேலும் அது உங்களின் நாளை நீங்கள் சரியான முறையில் துவங்கும் மனநிலையை ஏற்படுத்தும். எனவே நீங்கள் தியானம் செய்ய முயற்சி செய்யுங்கள். நல்ல வழிகாட்டிகள் அறிவுறுத்தும் தியாக்தை செய்யவேண்டும். அது உங்கள் நாளின் நல்ல துவக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இசையை கவனியுங்கள்
நீங்கள் குளிக்கும்போது அல்லது வேலை செய்யும்போது இசையை ஓடவிடுங்கள். இது உங்கள் மனதை தூண்டவும், உங்களை உற்சாகப்படுத்தவும் உதவும். மேலும் நீங்கள் அதனுடன் சேர்ந்து சிறிது ஆடினால் உங்கள் தசைகளை அது ரிலாக்ஸ் செய்யும். அவற்றுக்கு இதமளித்து உங்கள் நாளை சிறப்பாக துவக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
திட்டமிடுங்கள்
நீங்கள் அன்றைய நாளில் என்ன செய்யபோகிறீர்கள் என்பதை திட்டமிடுங்கள். அது பெரிய திட்டமாக இருக்கவேண்டிய தேவையில்லை. சிறப்பான திட்டமாக இருந்தாலே போதும். அந்த நாளில் என்ன செய்யவேண்டும். எவற்றை செய்து முடிக்கவேண்டும். இது நீங்கள் தொடர்ந்து செல்ல உதவும். எனவே அந்த நாளுக்கான திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமாகுங்கள். உணவு, உடற்பயிற்சி என திட்டமிடுங்கள். ஒரு நாளில் உங்களுக்காக சிறிது நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ளுங்கள்.
இன்றைய நாள் சிறப்பாகட்டும். வாழ்த்துக்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

தொடர்புடையை செய்திகள்