Morning Motivations : நீங்கள் வெற்றியாளராக வேண்டுமா? உங்கள் மூளைக்கு இப்படித்தான் பயிற்சிகள் கொடுக்கவேண்டும்!
Morning Motivations : நீங்கள் வெற்றியாளராக வேண்டுமெனில் உங்கள் மூளைக்கு கொடுக்கவேண்டிய பயிற்சிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் வெற்றியாளராக வேண்டுமெனில் உங்கள் மூளைக்கு இப்படித்தான் பயிற்சிகள் கொடுக்கவேண்டும்.
ஒவ்வொருவருக்கும் தாங்கள் வெற்றியாளராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்யும். கூட்டத்தில் இருந்து தனித்து தெரிய வேண்டுமெனில் நீங்கள் வெற்றியாளராக இருக்கவேண்டும். நீங்க்ள தலைமை ஏற்கவேண்டும்.
இப்படி நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். உங்கள் மூளையை எப்போதும் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ளவேண்டுமெனில் நீங்கள் சில விஷயங்களை எப்போதும், தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும்.
வெற்றிக்காக உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுக்கும் சக்திவாய்ந்த வழிகள்!
நீங்கள் வெற்றியாளராக வேண்டுமெனில், உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுப்பது மிகவும் அவசியம். உங்கள் இலக்குகளை முறைப்படுத்தி வைப்பதும் அவசியம். குறிப்பிட்ட சில பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்வது, உங்கள் மன வலிமை மற்றும் செயல்திறனுக்கு மிகவும் அவசியம். நீங்கள் உங்கள் வேலைகளை துவக்குவதற்கான எளிய பழக்கங்கள் இவைதான்.
தெளிவான இலக்குகள்
உங்கள் இலக்குகள் தெளிவானதாகவும், குறிப்பிடும்படியானதாகவும் இருக்கவேண்டும். பின்னர் அவற்றை சிறு சிறு பகுதிகளாக பிரித்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு ஒவ்வொன்றாக எட்டுவதற்கு எளிதாக இருக்கும்.
நேர்மறையான சிந்தனை
உங்களின் சவால்கள் ஒவ்வொன்றையும் வாய்ப்புக்களாக பாருங்கள். கற்பதற்கும், வளர்வதற்குமான வாய்ப்புக்கள் அவை. தடைகளை கடந்து நீங்கள் செல்ல உதவுபவை. அவற்றை நீங்கள் வாய்ப்புக்களாக மாற்றவேண்டும். புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும். உங்களின் மீண்டெழும் திறனையும் வலுப்படுத்தவேண்டும். வாழ்வில் மிகவும் தேவையான ஒன்று நேர்மறை எண்ணங்கள். எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை.
வழக்கமான பணிகள்
தினசரி முறையான பழக்கவழக்கங்களை வகுத்துக்கொள்ளுங்கள். அவை உங்களை சரியான பாதையில் வைக்கும். உங்களை முழு கவனத்துடன் செயல்பட உதவும். இந்த பழக்கங்கள், உங்களுக்கு தொடர்ந்து இயங்க உதவும். வளர்ச்சியை கொண்டுவரும். எப்போதும் ஒரு வழக்கத்துக்குள் நீங்கள் இருந்துவிட்டீர்கள் என்றால், அது உங்களின் நேர விரயத்தை குறைக்கும்.
மனநிறைவு
உங்களின் மனதை அமைதிப்படுத்த ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்குங்கள். அது தியானமோ அல்லது ரிலாக்சேசன் பயிற்சிகளோ உங்கள் மனதுக்கு உதவும். மனஅழுத்தத்தை குறைக்கும். கவனம் மற்றும் ஒட்டுமொத்த நலனை அதிகரிக்கும். இது வெற்றிக்கான மதிப்புமிக்க படியாகும். மனநிறைவு இருந்தால்போதும் வெற்றிக்கான படிகட்டுகள் தானாகவே திறக்கும். மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பது பழமொழி, எனவே நீங்கள் யாராக வேண்டும் என்று தீர்மானிப்பது மனம்தான்.
தொடர்ந்து கற்றல்
எப்போதும் வாய்ப்புக்களை பெறுவதற்கு ஆவலாகக் காத்திருங்கள். புதிய விஷயங்களை முயற்சி செய்யுங்கள். இது உங்கள் மூளையை ஷார்ப்பாக வைத்திருக்கும். உங்களின் வளர்ச்சிக்கு எண்ணற்ற வாய்ப்புக்களை உருவாக்கும்.
வழக்கமான உடற்பயிற்சி
உங்கள் மூளையின் ஆரோக்கியத்தைப் பேண தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும். உங்களின் மனநிலையை நேர்மறையான வைத்திருங்கள். உங்கள் உடலின் ஆற்றலையும் உடற்பயிற்சி அதிகரிக்கும். உங்கள் மூளையின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் மேம்படுத்தும்.
மற்றவர்களுடன் தொடர்பில் இருங்கள்
உங்களுக்கு ஊக்கம் தரும் நபர்களுடன் உறவை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒன்றாக இணைந்து பணிபுரிந்து, புதிய யோசனைகளை உருவாக்குங்கள். இது உங்கள் மூளையை ஷார்ப்பாக்கி, உங்களை வெற்றியாளராக்கும்.
தொடர்புடையை செய்திகள்