காலையில் பெற்றோர் பின்பற்றவேண்டிய பழக்கங்கள்! உங்கள் குழந்தைகளுக்கு வாழும் முன்னுதாரணம் நீங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  காலையில் பெற்றோர் பின்பற்றவேண்டிய பழக்கங்கள்! உங்கள் குழந்தைகளுக்கு வாழும் முன்னுதாரணம் நீங்கள்!

காலையில் பெற்றோர் பின்பற்றவேண்டிய பழக்கங்கள்! உங்கள் குழந்தைகளுக்கு வாழும் முன்னுதாரணம் நீங்கள்!

Priyadarshini R HT Tamil
Dec 30, 2024 06:00 AM IST

காலையில் பெற்றோர் பின்பற்றவேண்டிய பழக்கங்கள் என்னவென்று பாருங்கள்.

காலையில் பெற்றோர் பின்பற்றவேண்டிய பழக்கங்கள்! உங்கள் குழந்தைகளுக்கு வாழும் முன்னுதாரணம் நீங்கள்!
காலையில் பெற்றோர் பின்பற்றவேண்டிய பழக்கங்கள்! உங்கள் குழந்தைகளுக்கு வாழும் முன்னுதாரணம் நீங்கள்!

எப்போதும் அதிகாலையில் உங்கள் குழந்தைகள் எழும் முன் விழியுங்கள்

உங்கள் நாளை அதிகாலையிலே துவங்கிவிட்டீர்கள் என்றால், நீங்கள் பரபரப்பாக ஓட வேண்டிய அவசியம் இருக்காது. இது உங்கள் வீட்டில் அமைதியான சூழலை உருவாக்கும். காலையில் நீங்கள் எவ்வித பரபரப்பும் இன்றி செயல்படும்போது, அது உங்கள் வீட்டில் ஒரு நேர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும். நாள் முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இது குழந்தைகளுக்கு திட்டம் மற்றும் நேர மேலாண்மை என அனைத்தையும் கற்றுக்கொடுக்கும்.

உங்கள் குழந்தைகளுடன் நன்றி கூறப்பழக்குங்கள்

நீங்கள் உங்கள் நாளை எதற்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்பதில் இருந்து துவங்குங்கள். இந்தப்பழக்கத்தை உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். இதனால் உங்கள் குழந்தைகளுக்கு நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். இது வாழ்வின் ஆசிர்வாதங்களை பாராட்டுவதற்கு அவர்களுக்கு உதவும்.

காலையில் எழுந்தவுடன் எரிச்சலுடன் இருக்காதீர்கள், குழந்தைகளும் அதை கற்றுக்கொள்வார்கள்

காலையிலே உடற்பயிற்சிகளை நீங்கள் செய்யவேண்டும். காலையில் சில உடற்பயிற்சிகளை செய்யும்போது உங்களுக்கு எரிச்சல், கோவம் ஆகியவை நீங்குகிறது. உடலை நல்ல ஃபிட்டாக வைத்துக்கொள்வது குழந்தைகளுக்கு சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கிய பழக்கங்களை வளர்க்கிறது.

காலையில் வாசிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள்

புத்தங்களை படிக்க நேரம் ஒதுக்குங்கள். உங்கள் குழந்தைகளுடன் இலக்குகள் நிர்ணயித்து புத்தகம் மற்றும் காலையில் செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுங்கள். இந்தப்பழக்கம் அவர்களை அறிவாளிகளாக்கும். இது அவர்களுக்கு தனிப்பட்ட ஆளுமையை வளர்த்தெடுக்க உதவும். இது அவர்களுக்கு மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுக்கும்.

காலை நேரத்தில் உற்சாகத்துடன் இருங்கள்

காலையில் நேர்மறை எண்ணங்கள் மற்றும் உற்சாகமான மனநிலையையும் கொண்டிருங்கள். உங்களின் நேர்மறை எண்ணங்கள் உங்களுக்கு காலையில் உற்சாகமான சூழலை உருவாக்க உதவும். இது உங்களின் குழந்தைகள் சவால்களை எதிர்கொள்ள உதவும். அவர்களுக்கு தன்னம்பிக்கையைத் தரும்.

அன்றைய நாளின் திட்டம் குறித்து பேசுங்கள்

அந்த நாளின் திட்டம் என்ன என்பது குறித்து உங்கள் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுக்கு திட்டமிட கற்றுக்கொடுங்கள். அவர்களின் வேலைகளை அவர்கள் ஒன்றிணைத்து செய்யவும், அவர்களுக்கு பொறுப்புடன் நடந்து கொள்ளவும் அறிவுறுத்தும். இது அவர்களுக்கு நேர மேலாண்மை திறனை வளர்த்தெடுக்க உதவும்.

காலையிலே ஃபோனில் மூழ்காதீர்கள்

காலையில் ஃபோன் அல்லது டிவி என திரையில் மூழ்கிக்கிடக்காதீர்கள். மாறாக நீங்கள் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை செய்யுங்கள். இது அவர்களை அவற்றை செய்ய தூண்டும். இது அவர்களை மற்ற நாட்களுக்கு தயாராக்கும். அவர்களுக்கு நல்ல உதாரணமாவதற்கு இது உதவும்.

நேரமிருந்தால் தியானம் செய்யுங்கள்

காலையில் சில பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள், தியானம் என செய்து பழகுங்கள். இந்தப் பழக்கம் உங்களுக்கு மனஅழுத்தத்தை மேலாண்மை செய்ய உதவும். இது உங்களுக்கு அமைதியைக்கொடுக்கும். இது பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவருக்குமே அமைதியையும், நன்மையையும் கொடுக்கும்.

காலையில் ஆரோக்கியமான உணவு மற்றும் உங்கள் குழந்தைகளை சில வீட்டு வேலைகளை செய்ய அறிவுறுத்துங்கள்

காலையில் உங்கள் குழந்தைகளுக்கு சரிவிகித உணவைக் கொடுக்கவேண்டும். பழங்கள், முழு தானியங்கள் மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்த உணவுகள் ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும் என்பது உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்துகிறது. இது அனைவருக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது. இதனால் அந்த நாளே உங்களுக்கு மகிழ்ச்சியானதாகிறது.

காலையில் பொறுமையுடன் இருங்கள், அதிக வேலைகள் இருந்தாலும் பொறுமையாக இருத்தல் நலம்

உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையாகப் பேசுங்கள். அவர்களிடம் பொறுமையாகவும் நடந்துகொள்ளுங்கள். அன்பை அன்றாடம் கற்றுக்கொடுங்கள். உங்கள் குழந்தைகளுடன் பேசும்போது நீங்கள் நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுத்தால், அது அவர்களுக்கு வலுவான மற்றும் மரியாதையான உறவுகள் கட்டமைக்கவும், அனுதாபத்தை மதிக்கவும் உதவும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.