Morning Drink : கை – கால் மறத்துப்போகும் பிரச்னையா? இந்த ஒரு தேநீர் போதும்! இரண்டு வாரத்தில் தீர்வு!
Morning Drink : தேவையற்ற புரதங்களை உடலில் இருந்து நீக்கும். உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைக்கொடுக்கும்.
தேவையான பொருட்கள்
வால் மிளகு – அரை ஸ்பூன்
தேவையற்ற புரதங்களை உடலில் இருந்து நீக்கும். உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைக்கொடுக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். நரம்புகளில் உள்ள அடைப்பை நீக்கி, நரம்புகளுக்கு வலுவைக்கொடுக்கும். வால் மிளகு காரம் மற்றும் துவர்ப்பு சுவை நிறைந்தது.
சீரகம் – அரை ஸ்பூன்
ஓமம் – அரை ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
செய்முறை
இவையனைத்தையும் சேர்த்து ஒன்றிரண்டாக நைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் சேர்த்துவிட்டு, அது ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் அதை வடிகட்டி, தேன் கலந்து பருகவேண்டும்.
கை – கால் மறத்துப்போவதற்கு 2 காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று உடல் நீர்சக்தியை இழப்பது. ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு வேலை செய்வதால், தண்ணீர் குடிக்க மறக்கிறோம். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் கை – கால் மறத்துப்போவது ஏற்படுகிறது.
இரண்டாவது துரித உணவுகள், தற்போது, காரம், புளிப்புச்சுவை நிறைந்த உணவை பெரும்பாலானோர் எடுத்துக்கொள்கிறார்கள். இதில் அதிகளவில் சேர்க்கப்படும் அஜினமோட்டோ நமது உடலில் தேவையற்ற புரதங்களையும், நச்சுக்களையும் சேர்க்கிறது. இதனாலும் கை – கால் மறத்துப்போகும் பிரச்னை ஏற்படுகிறது.
ஒரு கை, ஒரு கால் மட்டும் நீண்ட நாள் மறத்துப்போகும் பிரச்னை இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகவேண்டும்.
இந்த தேநீரை பெரும்பாலும் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இதை இரவு உறங்கச் செல்வதற்கு முன்னரும் பருகலாம். இதை வாரத்தில் மூன்று முதல் 4 நாட்கள், ஒரு நாள்விட்டு ஒரு நாள் என 2 வாரங்கள் பருகவேண்டும்.
இதை பருகும்போது, உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கத் துவங்கும். நரம்புகளில் உள்ள அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்கும். அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத்தொல்லை போன்ற பிரச்னைகளும் ஏற்படாது. உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் தேவையற்ற புரதங்களையும் வெளியேற்றும்.
இரண்டு வாரத்தில் உங்கள் பிரச்னைகள் தீரவில்லையென்றால், தொடர்ந்து வாரத்தில் 2 முறை பருகலாம். இதை பருகுவதால் எவ்வித பக்கவிளைவுகளும் வராது.
ஓமம், சீரகம் இரண்டும் செரிமானம் மற்றும் வாயுத்தொல்லைக்கு உதவக்கூடியவை. பட்டை நோய் எதிர்ப்பை உடலில் அதிகரிக்கும். வழக்கமாக எடுத்துக்கொள்ளும் டீ, காபிக்கு பதில் இதுபோன்ற தேநீர்கள் உங்களுக்கு உதவும். ஏற்கனவே இங்கு நிறைய தேநீர் ரெசிபிக்கள் பகிரப்பட்டுள்ளது. அவற்றை மாற்றி மாற்றி பருகி பலன்பெறுங்கள். பெரும்பாலான பொருட்கள் நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடியதை வைத்து செய்யக்கூடியவைதான். அவற்றின் விலையும் குறைவாகத்தான் இருக்கும். எனவே கட்டாயம் முயற்சி செய்து பலன்பெறுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்