அதிகாலை பானம் : குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் பானம் – மருத்துவர் விளக்கம்!
அதிகாலை பானம் : குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பானமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானம் இருக்கும் என்று மருத்துவர் உஷா நந்தினி கூறுகிறார்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய, குளுட்டமிக் ஆசிட் சிஸ்டைன் நிறைந்த அமினோ அமிலங்கள் இருக்கக்கூடிய ஒரு பானத்தை நம்மால் வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்று டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார். இந்த பானத்தை அதிகாலையில் பருகவேண்டும் என்றும், இதனால் குடல் ஆரோக்கியம் மட்டுமின்றி வீக்கமும் குறைவதாவும் மருத்துவர் கூறுகிறார்.
கோயமுத்தூரைச் சேர்ந்த மருத்துவர் உஷா நந்தினி புதுயுகம் டிவிக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ள தகவல்கள் என்னவென்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• கருப்பு பீன்ஸ் – கால் கப்
• மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
• ஏலக்காய் – 1
• பூண்டு – 2 பல்
• பட்டை – ஒரு இன்ச்
• ஆலிவ் ஆயில் – கால் ஸ்பூன்
செய்முறை
1. கருப்பு பீன்ஸை நன்றாக அலசி, ஓரிரவு ஊறவைத்துவிடவேண்டும். அதை எடுத்து அடுத்த நாள் காலையில் அதே நீரில் வேக வைக்கவேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், பட்டை, ஏலக்காய், பூண்டு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, அனைத்தும் நன்றாக வெந்த பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
அந்த நீருடன் ஆலிவ் ஆயில் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தினமும் பருகவேண்டும். இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஜிஎஸ்ஹெச் எனப்படும் அமினோ அமில கூட்டை உருவாக்கித் தரும். இது வீக்கத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரித்து, புற்றுநோய் போன்ற நோய்களை வராமல் தடுக்கக்கூடிய தன்மையை உருவாக்கிகொடுக்கும். எனவே இத்தனை ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கும் இந்த பானத்தைப் பருகி பலன்பெறுங்கள்.
இவ்வாறு மருத்துவர் உஷா நந்தினி தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்