Mor Kulambu Podi : 2 வாரங்கள் கெடாது! இந்த ஒரு பொடி கிச்சன்ல இருந்தா போதும்! நிமிஷத்துல மணமணக்கும் மோர் குழம்பு தயார்!
Mor Kulambu Podi : 2 வாரங்கள் கெடாது! இந்த ஒரு பொடி கிச்சன்ல இருந்தா போதும்! அருமையான மோர் குழம்பு தயார்!
இந்த ஒரு பொடி மட்டும் உங்க கிச்சனில் இருந்தால்போதும், அருமையான மோர் குழம்பு தயார் செய்துவிடலாம். 2 வாரம் வரை கெடாமல் இருக்கும். அவ்வப்போது மோர் குழம்பு வீட்டில் செய்து அசத்தலாம். எனவே இதை செய்து வீட்டில் வைத்துக்கொண்டு பயன்பெறுங்கள்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 5
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி விதைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
(கட்டிப்பெருங்காயமாக வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அதை நீங்கள் வறுத்து பொடித்துக்கொள்ள வேண்டும். ட்ரையாகவோ அல்லது எண்ணெய் சேர்த்தோ வறுத்துக்கொள்ளலாம்)
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் வர மிளகாய், வெந்தயம், மிளகு, சீரகம், கொத்தமல்லி விதைகள், துவரம் பருப்பு, கடலை பருப்பு, பொட்டுக்கடலை என அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன், கறிவேப்பிலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆறவைத்து ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதை எடுத்து ஆறவிட்டு, அதை ஒரு காய்ந்த பாட்டில் அல்லது டப்பாவில் அடைத்து வைத்துவிடவேண்டும்.
இதை ஃபிரிட்ஜில் வைத்தால் 2 வாரங்கள் வரை வைத்துக்கொள்ளலாம். ஆனால் வெளியே வைத்தால் ஒரு வாரம் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.
மோர் குழம்பு பொடி வைத்து மோர் குழம்பு தயாரிக்கும் முறை
மோர் குழம்பு பொடி – 2 டேபிள் ஸ்பூன்
மோர் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – 2 கொத்து
செய்முறை
தயிருடன், மோர்குழம்பு பொடி 2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன், கடுகு, வர மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடித்து வைத்துள்ள மோர் கலவையை சேர்த்து 2 நிமிடங்கள் மட்டும் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மோர் குழம்பு தயார்.
இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
இதனுடன் நீங்கள் காய்கறிகள் சேர்த்துக்கொள்ள விரும்பினால், தாளித்தவுடன் பூசணிக்காய் அல்லது வெண்டைக்காய் சேர்த்து வதக்கி சிறிது நீர் தெளித்து வேக விடவேண்டும்.
காய் நன்றாக வெந்த பின்னர் அடித்து வைத்துள்ள மோர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவேண்டும். பின்னர் மல்லித்தழை தூவி இறக்கினால் சுவை அள்ளும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்