Weight Loss Soup: உடல் எடை குறைப்புக்கு உதவும் சூப்..! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்
உடல் எடை குறைப்புக்கு உதவும் பாசிப்பருப்பு சூப், இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய சுவை மிகுந்த பாசிபருப்பு சூப் தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்

உடல் எடையை குறைக்க ஜிம்மில் வியர்வை சொட்ட உடற்பயிற்சி செய்வது முதல் ஆரோக்கியமான உணவு டயட்டை பின்பற்றுவது வரை பல்வேறு வழிகள் இருக்கின்றன. அதே போல் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் சில பானங்கள் இருக்கின்றன. இவை உடலில் இருக்கும் கழிவுகள், கெட்ட கொழுப்புகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவும் முக்கிய உணவு வகைகளில் பாசிப்பருப்பு சூப்பும் ஒன்றாக இருந்து வருகிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துகள், குறைவான கலோரிகள் எடை இழப்புக்கு உதவுவதோடு, உணவு பழக்கத்தில் சேர்க்ககூடிய ஆரோக்கியமான டயட்டாகவும் உள்ளது.
பாசிபருப்பில் இருக்கும் ஆரோக்கிய அளவுகள்
ஆசிய உணவுகளில் அதிகம் பயன்படுத்தும் பருப்பு வகைகளில் ஒன்றாக பாசிப்பயறு, பச்சை பயறு இருந்து வருகிறது. இதனை வேகவைத்து பருப்பாகவும், கிச்சடி, கூட்டு, பொறியல், இனிப்பு வகைகளில் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.