தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Moong Dal Paniyaram : பாசிப்பருப்பில் கூட செய்ய முடியுமா? குண்டு, குண்டு இனிப்பு பணியாரம்! இதோ ரெசிபி!

Moong Dal Paniyaram : பாசிப்பருப்பில் கூட செய்ய முடியுமா? குண்டு, குண்டு இனிப்பு பணியாரம்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Apr 15, 2024 11:15 AM IST

MoongDal Paniyaram : இதில் உள்ள நார்ச்சத்துக்கள், ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவை குறைக்கிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்துக்கள், சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்களுக்கு போதிய புரதத்தைக் கொடுக்கிறது.

Moong Dal Paniyaram : பாசிப்பருப்பில் கூட செய்ய முடியுமா? குண்டு, குண்டு இனிப்பு பணியாரம்! இதோ ரெசிபி!
Moong Dal Paniyaram : பாசிப்பருப்பில் கூட செய்ய முடியுமா? குண்டு, குண்டு இனிப்பு பணியாரம்! இதோ ரெசிபி!

ட்ரெண்டிங் செய்திகள்

பச்சரிசி – 2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

வெல்லம் – அரை கப்

ஏலக்காய் – 2

துருவிய தேங்காய் – ஒரு கப்

எள் – 2 ஸ்பூன்

நெய் – தேவையான அளவு

உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

பாசிபருப்பு, அரிசி, வெந்தயம் மூன்றையும் நன்றாக அலசிவிட்டு, 2 மணி நேரம் நன்றாக ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

ஊறிய பின்னர், அதை எடுத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதில் வெல்லம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெல்லத்தை மாவு அரைக்கும்போதே அதனுடன் சேர்த்து மாவை தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவேண்டும். தேங்காய் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் நெய்யை சூடாக்கில் அதில் எள்ளை பொரித்து மாவுடன் சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் முந்திரியையும் வறுத்து சேர்த்துக்கொள்ளலாம். இது உங்களுக்கு விருப்பம் இருந்தால் சேர்க்கலாம்.

தேங்காயையும் நெய்யில் வதக்கி சேர்க்கலாம் அல்லது அப்படியே சேர்க்கலாம் அல்லது அரைக்கும்போது, கடைசியாக சேர்த்து ஒரே ஒருமுறை மட்டும் அரைத்துக்கொள்ளலாம். இப்படியெல்லாம் செய்தால் பணியாரத்தின் சுவை அதிகரிக்கும்.

இதை இனிப்பாக செய்தால் மட்டும்தான் நன்றாக இருக்கும். வழக்கமான பணியாரத்தைவிட சுவை மிகுந்ததாக இருக்கும்.

பாசிபருப்பின் நன்மைகள்

100 கிராம் பாசிப்பருப்பில், 6 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் இ, சி, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது இந்திய சமையலில் அதிகளவில் இடம்பெறுகிறது. இது எளிதாக செரிக்கக் கூடியது.

மற்ற பருப்புக்களுடன் ஒப்பிடும்போது, இந்த பாசிப்பருப்பில் கார்போஹைட்ரேட்கள் குறைவாக உள்ளது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று.

இதை நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது

பாசிபருப்பு, கோலேசிஸ்டோகினின் என்ற ஹார்மோன் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் நீங்கள் இதை சாப்பிட்ட பின்னர், உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கும்.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

இது இரும்பு மற்றும் பொட்டாசிய சத்துக்கள் நிறைந்தது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தசைப்பிடிப்புக்கு எதிரான பாதுகாப்பை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது

பாசிப்பருப்பில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் காப்பர் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் ஃபோலேட், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்தது.

இது கார்போஹைட்ரேட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. அது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதில் உள்ள ஃபோலிக் ஆசிட் ஆரோக்கியமான மூளை இயக்கத்துக்கு உதவுகிறது. டிஎன்ஏவுக்கும் உதவுகிறது.

நார்ச்சத்துக்கள் நிறைந்தது

இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஒரு கப் பாசிப்பருப்பில், 40.5 முதல் 71 சதவீதம் அளவு தினசரி ஊட்டச்சத்து அளவை பூர்த்தி செய்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்துக்கள், ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவை குறைக்கிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்துக்கள், சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்களுக்கு போதிய புரதத்தைக் கொடுக்கிறது.

நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது

இது உடலின் இன்சுலின், குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவை குறைக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை குறைத்து, நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவுகிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது

ஃபேட்டி ஆசிட் தொடரை உருவாக்குகிறது. இது வயிற்றுப்பகுதிகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது.

உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்