Moong Dal Kesari : வாயில் வைத்தவுடன் கரையக்கூடிய பாசி பருப்பு கேசரி செய்வது எப்படி? இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Moong Dal Kesari : வாயில் வைத்தவுடன் கரையக்கூடிய பாசி பருப்பு கேசரி செய்வது எப்படி? இதோ ரெசிபி!

Moong Dal Kesari : வாயில் வைத்தவுடன் கரையக்கூடிய பாசி பருப்பு கேசரி செய்வது எப்படி? இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Jan 17, 2025 10:52 AM IST

பாசிபருப்பு கேசரி செய்வது எப்படி என்று பாருங்கள்.

Moong Dal Kesari : வாயில் வைத்தவுடன் கரையக்கூடிய பாசி பருப்பு கேசரி செய்வது எப்படி? இதோ ரெசிபி!
Moong Dal Kesari : வாயில் வைத்தவுடன் கரையக்கூடிய பாசி பருப்பு கேசரி செய்வது எப்படி? இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

பாசிபருப்பு – ஒரு கப்

வெல்லம் – 3 கப்

நெய் – 6 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடியளவு

திராட்சை – ஒரு கைப்பிடியளவு

ரவை – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை

தேங்காய் துருவல் – ஒரு கப்

செய்முறை

பாசிபருப்பை பச்சை வாசம் போகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். அதை தண்ணீர் ஊற்றி அலசிவிட்டு, நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு கடாயில் வெல்லத்தை பாகு காய்ச்சி வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவேண்டும். அதை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். அதே கடாயில் மேலும் சிறிது நெய் சேர்த்து ரவையைப் போட்டு வறுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். அடுத்து மசித்த பாசிப்பருப்பை சேர்த்து நன்றாகக் கிளறவேண்டும். அடுத்து வெல்லப்பாகையும் சேர்த்து கிளறி, சிறிது ஏலக்காய்ப்பொடி தூவி இறக்கினால், சூப்பர் சுவையான பாசிபருப்பு கேசரி தயார்.

இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்களே மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். சிறிய விஷேசங்கள் மற்றும் பண்டிகைக்காலங்களில் தெய்வங்களுக்கு நைவேத்யமாகவும் இதை படைக்கலாம்.

பாசிபருப்பில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் நன்மைகள்

பாசிப்பருப்பில் உள்ள நன்மைகள் மற்றும் அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்வது அவசியம். 100 கிராம் பாசிப்பருப்பில், 6 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் இ, சி, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது இந்திய சமையலில் அதிகளவில் இடம்பெறுகிறது. இது எளிதாக செரிக்கக் கூடியது. மற்ற பருப்புக்களுடன் ஒப்பிடும்போது, இந்த பாசிப்பருப்பில் கார்போஹைட்ரேட்கள் குறைவாக உள்ளது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று. இதை நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. நார்ச்சத்துக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது.

இதில் 70 கலோரிகள், கார்போஹைட்ரேட் 14 கிராம், புரதம் 3 கிராம், கொழுப்பு 1 கிராம், சாச்சுரேடட் கொழுப்பு 1 கிராம், சோடியம் 4 மில்லி கிராம், பொட்டாசியம் 19 மில்லி கிராம், நார்ச்சத்துக்கள் 1 கிராம், சர்க்கரை 1 கிராம், வைட்டமின் ஏ, கால்சியம் 4 மில்லி கிராம், இரும்புச்சத்து 1 மில்லி கிராம் உள்ளது. காலையில் இதை எடுத்துக்கொள்ளும்போது உங்கள் உடலுக்கு அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.