Moong Dal Idly : அரிசியே இல்லாம பருப்புல இட்லி செய்ய முடியுமா? அது எப்படி என்று பார்க்கலாமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Moong Dal Idly : அரிசியே இல்லாம பருப்புல இட்லி செய்ய முடியுமா? அது எப்படி என்று பார்க்கலாமா?

Moong Dal Idly : அரிசியே இல்லாம பருப்புல இட்லி செய்ய முடியுமா? அது எப்படி என்று பார்க்கலாமா?

Priyadarshini R HT Tamil
Apr 16, 2024 11:09 PM IST

Moong Dal Idly : அரிசியே இல்லாமல் பருப்பிலும் இட்லி செய்யலாம். அதற்கு பாசிபருப்பு தேவை. அதை வைத்து எப்படி இட்லி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Moong Dal Idly : அரிசியே இல்லாம பருப்புல இட்லி செய்ய முடியுமா? அது எப்படி என்று பார்க்கலாமா?
Moong Dal Idly : அரிசியே இல்லாம பருப்புல இட்லி செய்ய முடியுமா? அது எப்படி என்று பார்க்கலாமா?

உளுந்து – ஒரு கப்

வெந்தயம் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

பாசிபருப்பு மற்றும் உளுந்து இரண்டையும் அலசிவிட்டு ஓரிரவு நன்றாக ஊறவைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை ஊறவைக்கும்போது வெந்தயத்தையும் அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

(வெந்தயத்தை சேர்த்தும் ஊறவைக்கலாம் அல்லது தனியாகவும் ஊறவைத்து, அரைக்கும்போதும் சேர்த்துக்கொள்ளலாம்.

பின்னர் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இதை 8 மணி நேரம் அல்லது ஓரிரவு புளிக்க வைத்துக்கொள்ள வேண்டும். புளித்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி தட்டில் இட்லிகளாக வார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரிசியே சேர்க்கவில்லை. ஆனாலும் இந்த பருப்பு இட்லி ருசியாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி, தேங்காய் சட்னிகள், சாம்பார் அல்லது வெஜ் மற்றும் நான்வெஜ் குருமாக்கள் போதுமானது.

வித்யாசமான சுவையில் அசத்தும் இந்த இட்லிகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அடிக்கடி இதுபோல் ஆரோக்கியமான இட்லிகளை செய்து அசத்துங்கள்.

பாசிபருப்பின் நன்மைகள்

100 கிராம் பாசிப்பருப்பில், 6 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் இ, சி, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது இந்திய சமையலில் அதிகளவில் இடம்பெறுகிறது. இது எளிதாக செரிக்கக் கூடியது.

மற்ற பருப்புக்களுடன் ஒப்பிடும்போது, இந்த பாசிப்பருப்பில் கார்போஹைட்ரேட்கள் குறைவாக உள்ளது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று.

இதை நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது

பாசிபருப்பு, கோலேசிஸ்டோகினின் என்ற ஹார்மோன் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் நீங்கள் இதை சாப்பிட்ட பின்னர், உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கும்.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

இது இரும்பு மற்றும் பொட்டாசிய சத்துக்கள் நிறைந்தது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தசைப்பிடிப்புக்கு எதிரான பாதுகாப்பை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது

பாசிப்பருப்பில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் காப்பர் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் ஃபோலேட், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்தது.

இது கார்போஹைட்ரேட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. அது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதில் உள்ள ஃபோலிக் ஆசிட் ஆரோக்கியமான மூளை இயக்கத்துக்கு உதவுகிறது. டிஎன்ஏவுக்கும் உதவுகிறது.

நார்ச்சத்துக்கள் நிறைந்தது

இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஒரு கப் பாசிப்பருப்பில், 40.5 முதல் 71 சதவீதம் அளவு தினசரி ஊட்டச்சத்து அளவை பூர்த்தி செய்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்துக்கள், ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவை குறைக்கிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்துக்கள், சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்களுக்கு போதிய புரதத்தைக் கொடுக்கிறது.

நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது

இது உடலின் இன்சுலின், குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவை குறைக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை குறைத்து, நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவுகிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது

ஃபேட்டி ஆசிட் தொடரை உருவாக்குகிறது. இது வயிற்றுப்பகுதிகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.