Moong Bean Porridge : பித்தத்தை குறைக்கக்கூடிய பாசிப்பயறு கஞ்சி; மன ஆரோக்கியத்துக்கும் சிறந்ததது!
Moong Bean Porridge : பித்தத்தை குறைக்கக்கூடிய பாசிப்பயறு கஞ்சி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் மன ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்
பாசிப்பயறு – அரை கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு குக்கரில் அரிசி மற்றும் பாசிபருப்பு இரண்டையும் கலந்து கொஞ்சம் தாராளமாக தண்ணீர் சேர்த்து 6 விசில் விட்டு இறக்கவேண்டும். இறக்கியவுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.
அதில் வேண்டுமானால் சிறிது தேங்காய் துருவல், நீங்கள் விருப்பப்பட்டால் தூவி கெட்டியாக எடுத்து சாப்பிடலாம் அல்லது கூடுதலாக கொஞ்சம் சூடான தண்ணீர் சேர்த்து பருகலாம்.
குக்கரை பயன்படுத்தாமல் நேரடியாக பாத்திரத்தில் வேகவைத்தும் எடுக்கலாம். கூடுதல் பலன்கள் உறுதி ஆனால் எளிதாக குக்கரிலே செய்து விடவும் முடியும்.
பாசிப்பருப்பில் உள்ள சத்துக்களும், நன்மைகளும்
200 கிராம் பாசிப்பருப்பில், 212 கலோரிகள் உள்ளது. கொழுப்பு 0.8 கிராம், புரதம் 14.2 கிராம் கார்போஹைட்ரேட் 38.7 கிராம், நார்ச்சத்துக்கள் 15.4 கிராம், ஃபோலேட் 80 சதவீதம், மேங்கனீஸ் 30 சதவீதம், மெக்னீசியம் 24 சதவீதம், வைட்டமின் பி1 22 சதவீதம், பாஸ்பரஸ் 20 சதவீதம், இரும்புச்சத்து 16 சதவீதம், காப்பர் 16 சதவீதம், பொட்டாசியம் 15 சதவீதம், சிங்க் 11 சதவீதம், வைட்டமின் பி2, 3, 5, 6 மற்றும் செலினியம் ஆகிய அனைத்தும் நிறைந்தது.
பாசிபயிறில் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதி ஃபினைலாலானைன், ஐசோலிசியூன், வாலைன், லைசைன், அர்ஜினைன் உள்ளிட்ட பல முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. இந்த முக்கிய அமிலங்களை உங்கள் உடல் தானாக சுரக்காது. இந்த பயிறை முளைக்கட்டி சாப்பிடும்போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாறிவிடும்.
இதில் கலோரிகளும், அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் முளை கட்டாததைவிட அதிகம். ஃபைடிக் அமில அளவு முளைகட்டும்போது குறைகிறது. அது உடலுக்கு தேவையற்றது. இது உடலில் சிங்க், கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை குறைக்கிறது.
அதிக ஆன்டிஆக்ஸிடன்ட் அளவுகள் நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை குறைக்கிறது
வெயில் காலத்தில் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கிறது.
உடலில் சேரும் கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்தை காக்கிறது.
பொட்டாசிய, மெக்னீசிய, நார்ச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
செரிமான உறுப்புக்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
பசியை கட்டுப்படுத்தி, எடை குறைப்புக்கு உதவுகிறது.
ஆரோக்கியமான கர்ப்ப காலத்துக்கு உதவுகிறது.
உடலில் தேவைக்கு அதிகமாக சுரக்கும் பித்தத்தை குறைக்கக்கூடியது
மனஅழுத்தத்தை குறைக்கக்கூடியது.
எளிதாக உங்கள் உணவில் சேர்க்கலாம்.
இதை சாலட், சூப், குழம்பு என எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது கொஞ்சம் இனிப்பாக இருக்கும். இதில் இனிப்பு கஞ்சி கூட வெல்லம் சேர்த்து செய்யலாம். இதை ஊறவைத்து வேகவைத்து சமைக்க வேண்டும். இதை முளைக்கட்டி பச்சையாகவும் சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.