தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Moles Formation : உங்கள் உடலில் இப்படியெல்லாம் மச்சம் உள்ளதா? அதனால் என்ன நடக்கும் தெரியுமா?

Moles Formation : உங்கள் உடலில் இப்படியெல்லாம் மச்சம் உள்ளதா? அதனால் என்ன நடக்கும் தெரியுமா?

Priyadarshini R HT Tamil
May 18, 2024 10:50 AM IST

Moles Formation : உங்கள் உடலில் இப்படியெல்லாம் மச்சம் உள்ளது என்றால், அதனால் என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Moles Formation : உங்கள் உடலில் இப்படியெல்லாம் மச்சம் உள்ளதா? அதனால் என்ன நடக்கும் தெரியுமா?
Moles Formation : உங்கள் உடலில் இப்படியெல்லாம் மச்சம் உள்ளதா? அதனால் என்ன நடக்கும் தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

சரும புற்றுநோய் என்பது உலகம் முழுவதும பலருக்கு ஏற்படக்கூடிய ஒன்றுதான். இந்தியாவிலும் அதிகளவில் சரும புற்றுநோயால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், இது சிகிச்சையளிக்கக்கூடியதும், சரியாககூடியதும் ஆகும்.

ஆனால் அதற்கு அதை நாம் முன்னதாகவே கண்டுபிடித்துவிடவேண்டும். அதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு தோன்றுகிறதா என்பதை பாருங்கள்.

சரும புற்றுநோய் என்றால் என்ன?

அதிக சூரிய ஒளி படுவதால், அல்ட்ரா வைலட் ரேடியேஷன் ஏற்படுத்தும் சேதத்தால், தோலில் உள்ள செல்களின் அபிரிமிதமான வளர்ச்சி ஒருவித தோல் புற்றுநோயை உண்டாக்கிறது. இதில் முக்கியமானவை மெலனோமா, பாசல் செல் கார்சினோமா மற்றும் ஸ்குவாமஸ் செல் கார்சினோமா ஆகியவை ஆகும்.

சரும புற்றுநோயின் அறிகுறிகள்

இதுபோல் புற்றுநோய் என்றால் உங்கள் உடலில் ஏற்படும் அதிர்ச்சிகள் என்னவென்று தெரியுமா? சருமம் புதிதாக வளரும். புதிய மச்சங்கள் ஏற்படும். எனவே, உங்கள் தோலில் புதிதாக வளர்ச்சி அல்லது மச்சங்களை பார்த்தீர்கள் என்றாலே உடனே மருத்துவர்களை அணுகுவது சிறந்தது.

புதிய மச்சங்கள், பல்வேறு வண்ணங்களில் தோன்றும் மச்சங்கள் மற்றும் சரியான வடிவங்களை கொண்டிராத மச்சங்கள் ஆகியவைதான் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. இவற்றை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உடனே பரிசோதித்துவிடவேண்டும்.

தொடர்ந்து இருக்கும் காயங்கள்

எந்த ஒரு காயமாக இருந்தாலும் எளிதில் குணமாகிவிடவேண்டும். அதில் இருந்து ரத்தம் அல்லது சலம் தொடர்ந்து வடிந்துகொண்டே இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. இதுவும் தோல் புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும்.

தோலின் தன்மையில் மாற்றம்

தோலின் தன்மையில் ஏற்படும் மாற்றம் ஒரு முக்கியமான அறிகுறியாகும். எங்கேனும் தேமல் போன்ற அறிகுறிகளோ, வறண்ட சருமமோ திடீரென ஓரு இடத்தில் ஏற்பட்டால், உடனடியாக நீங்கள் தோலை பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

மச்சங்கள்

திடீரென மச்சங்களின் அளவு அதிகரித்தாலோ அல்லது வடிவங்களில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது நிறத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது தோலில் சொரசொரப்பு ஏற்பட்டாலோ உடனடியாக பரிசோதிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக அளவிலும், நிறங்களிலும் மாற்றம் ஏற்படும் மச்சங்கள் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியவை.

ஏன் பரிசோதிக்க வேண்டும்?

உங்கள் உடல் அல்லது தோலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதை நீங்கள் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பெரிய மச்சங்கள் உருவாகினாலும் நீங்கள் அச்சப்படவேண்டும். உடனே சூரிய ஒளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு நீங்கள் தோலை மறைக்கும் உடைகள், சன்ஸ்கீரின் லோசன்கள் பயன்படுத்தலாம்.

சிசிக்சை முறைகள்

புற்றுநோயின் தீவிரம், இடம் மற்றும் வகை ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை அமையும். அறுவைசிகிச்சை, மருந்து, உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிப்பது என மூன்று வழிகளில் தோல் புற்றுநோயை எதிர்த்து போராட சிகிச்சையளிக்கப்படுகிறது.

தோலுக்கு கவசமான அதிக மெலனின் அளவுகளால் தோல் புற்றுநோய் கணக்கிடப்படுவதில்லை. எந்த வகை புற்றுநோய் என்றாலும் உடனடியாக அதன் அறிகுறிகளை ஆராய்ந்து மருத்துவர்களை அணுகுவது சிறந்தது. 

முன்னதாகவே கண்டுபிடிப்பது எந்தவொரு வியாதிக்கும் சிறந்த சிகிச்சை மேற்கொள்ள உதவும். அதுவே தோல் புற்றுநோய்க்கும் பொருந்தும். எனவே முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது.

சருமத்தில் எந்தவித மாற்றம் ஏற்பட்டாலும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது அவசியம்.

WhatsApp channel

டாபிக்ஸ்