தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Mixed Herbs And Ash Guard Juice Do You Want To Flush Out Toxins From The Body This One Drink Is Enough

Mixed herbs and ash Guard Juice : உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை அடித்து வெளியேற்ற வேண்டுமா? இந்த ஒரு பானம் போதும்!

Priyadarshini R HT Tamil
Feb 20, 2024 01:48 PM IST

Mixed herbs and ash Guard Juice : உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை அடித்து வெளியேற்ற வேண்டுமா? இந்த ஒரு பானம் போதும்!

Mixed herbs and ash Guard Juice : உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை அடித்து வெளியேற்ற வேண்டுமா? இந்த ஒரு பானம் போதும்!
Mixed herbs and ash Guard Juice : உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை அடித்து வெளியேற்ற வேண்டுமா? இந்த ஒரு பானம் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஃபிரிட்ஜில் வைத்ததை பயன்படுத்தக்கூடாது. ஃபிரஷ்ஷாக பயன்படுத்த வேண்டும்.

கறிவேப்பிலை – 10

மல்லித்தழை – சிறிதளவு

மிளகு – 10

செய்முறை

வெள்ளை பூசணியை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், கறிவேப்பிலை, மல்லித்தழை மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இதை அப்படியே பருகலாம். ஆனால் சிலருக்கு இதன் சுவை பிடிக்காது என்பதால், இதனுடன், தேன் அல்லது உப்பு சேர்த்து பருகலாம்.

உடலில் தங்கியிருக்கக்கூடிய நாள்பட்ட நச்சுக்கள், கொழுப்பு, கெட்ட நீர், கெட்ட கொழுப்பு என அனைத்தையும் வெளியேற்றி, உடலை சுறுசுறுப்புடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும். இதை தினமும் தொடர்ந்து 15 நாட்கள் வரை பருகினாலே உங்களுக்கு பலன் கிட்டும். ஆனால் நீங்கள் இதை தொடர்ந்து எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். 

இது உங்களுக்கு நன்மையைத்தான் தரும். எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. ஆஸ்துமா தொல்லை உள்ளவர்கள் கூட எடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கு சளி பிடிக்கும் என்ற அச்சம் தேவையில்லை. இது குறிப்பாக அல்சர் நோயை கட்டுக்குள் கொண்டுவரக்கூடியது. 

பூசணிக்காயின் நன்மைகள்

பூசணிக்காயில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. இதை உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் எடைகுறைக்க உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது. கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதால் இதை தினமும் எடுப்பது இதய இயக்கத்தை அதிகரிக்கிறது. பூசணிக்காய் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.

உடலில் தண்ணீர்ச்சத்தை அதிகரிக்கச்செய்து நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. உடலில் தேவையான அளவு நீர்ச்சத்தை பராமரிக்கிறது. பூசணிக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கல், வயிறு உப்புசம், வயிறு வலி ஆகியவற்றை போக்குகிறது.

இதன் மலமிலக்கும் தன்மை குடல் இயக்கத்தை அதிகரித்து வயிற்றில் தோன்றும் அசௌகரியங்களை சரிசெய்கிறது. சுவாச மண்டலத்தில் உள்ள சளியை போக்குகிறது. இது நுரையீரல் இயங்க உதவுகிறது. அழற்சி மற்றும் மூச்சு திணறலை குறைக்கிறது.

பூசணிக்காயில் உள்ள வைட்டமின் இ சத்துக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது சருமத்தை வெயில் பாதிப்புகள் மற்றும் தடிப்புகளில் இருந்து காக்கிறது. சரும தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.

பூசணிக்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தலைமுடிக்கு, ஊட்டமளிக்கிறது. இதன் ஜெல்லை தலைமுடியின் வேர்களில் தடவினால், அடர்த்தியாக முடிவளர உதவுகிறது. மேலும் தலையில் பேன், பொடுகை நீக்குகிறது.

100 கிராம் பூசணிக்காயில் 86.2 கலோரிகள் உள்ளன. இதில் 3.9 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. சாச்சுரேடட் கொழுப்பு 0.5 கிராம், கார்போஹைட்ரேட் 12.5 கிராம், நார்ச்சத்து 0.6 கிராம், புரதம் 2.0 கிராம், கொழுப்பு 0 மில்லிகிராம், சோடியம் 33.0 மில்லி கிராம், பொட்டாசியம் 359.1 மில்லி கிராம், வைட்டமின் ஏ 9.8 சதவீதம், வைட்டமின் பி6 11.3 சதவீதம், வைட்டமின் சி 30.5 சதவீதம், வைட்டமின் இ 1.1சதவீதம், கால்சியம் 5.1 சதவீதம், மெக்னீசியம் 6.7 சதவீதம், பாஸ்பரஸ் 5.0 சதவீதம், சிங்க் 7.2 சதவீதம், இரும்புச்சத்து 5.7 சதவீதம், மாங்கனீஸ் 12.5 சதவீதம், அயோடின் 5.9 சதவீதம் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்