புலாவ் : மின்ட் சோயா பன்னீர் புலாவ்; குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் சுவையான ரெசிபி; இதோ செய்முறை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  புலாவ் : மின்ட் சோயா பன்னீர் புலாவ்; குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் சுவையான ரெசிபி; இதோ செய்முறை!

புலாவ் : மின்ட் சோயா பன்னீர் புலாவ்; குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் சுவையான ரெசிபி; இதோ செய்முறை!

Priyadarshini R HT Tamil
Published Jun 03, 2025 09:00 AM IST

புலாவ் : ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். விசில் அடங்கிய பின்னர் குக்கரை திறந்து புவாவை எடுக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். உதிரிஉதிரியாக எடுக்கவேண்டும். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

புலாவ் : மின்ட் சோயா பன்னீர் புலாவ்; குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் சுவையான ரெசிபி; இதோ செய்முறை!
புலாவ் : மின்ட் சோயா பன்னீர் புலாவ்; குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் சுவையான ரெசிபி; இதோ செய்முறை!

தேவையான பொருட்கள்

புதினா மசாலா அரைக்க

• புதினா – சிறிதளவு

• மல்லித்தழை – சிறிதளவு

• பச்சை மிளகாய் – 2

(புதினா, மல்லித்தழை மற்றும் பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்)

பிரியாணி செய்ய

• பாஸ்மதி அரிசி – ஒரு கப் (நன்றாக அலசிவிட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

• பன்னீர் – 100 கிராம் (ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து, சிறிய துண்டுகளாக நறுக்கிய பன்னீரை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

• சோயா – கால் கப் (சூடான தண்ணீரில் ஊறவைத்து பிழிந்தது)

• எண்ணெய் – 2 ஸ்பூன்

• நெய் – 2 ஸ்பூன்

• பட்டை – 1

• கிராம்பு – 2

• பிரியாணி இலை – 1

• ஏலக்காய் – 1

• ஸ்டார் சோம்பு – 1

• முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடியளவு

• பெரிய வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)

• தக்காளி – 1 (நீளவாக்கில் நறுக்கியது)

• இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• பட்டாணி – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

1. ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானவுடன், முந்திரி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஸ்டார் சோம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவேண்டும்.

2. அடுத்து பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும். தக்காளி சேர்த்து நல்ல குழைய மசித்துக்கொள்ளவேண்டும்.

3. பின்னர் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். அடுத்து உப்பு சேர்த்து கலந்துவிடவேண்டும்.

4. அடுத்து பட்டாணி, ஊறவைத்து பிழிந்த சோயா சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

5. அடுத்து அரைத்த புதினா விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும்.

6. அடுத்து ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். பின்னர் பாஸ்மதி அரிசியை சேர்த்து கலந்துவிட்டு, வறுத்த பன்னீரை மேலே சேர்த்து மூடியிட்டு, குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கினால் சூப்பர் சுவையான மின்ட், பன்னீர், சோயா புலாவ் தயார்.

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள வெறும் தயிர் பச்சடி இருந்தாலே போதும். ஏனெனில், புலாவிலே எண்ணற்றவற்றை நாம் சேர்க்கிறோம். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். விசில் அடங்கிய பின்னர் குக்கரை திறந்து புவாவை எடுக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். உதிரிஉதிரியாக எடுக்கவேண்டும். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.