Mint Leaves Podi : சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது! இந்த ஒரு பொடி மட்டும் போதும்! ஆரோக்கியமும் அள்ளித்தரும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mint Leaves Podi : சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது! இந்த ஒரு பொடி மட்டும் போதும்! ஆரோக்கியமும் அள்ளித்தரும்!

Mint Leaves Podi : சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது! இந்த ஒரு பொடி மட்டும் போதும்! ஆரோக்கியமும் அள்ளித்தரும்!

Priyadarshini R HT Tamil
May 27, 2024 10:16 AM IST

Mint Leaves Podi : சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது புதினா பொடி. அதுமட்டுமின்றி உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் இந்தப்பொடி அள்ளித்தருகிறது.

Mint Leaves Podi : சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது! இந்த ஒரு பொடி மட்டும் போதும்! ஆரோக்கியமும் அள்ளித்தரும்!
Mint Leaves Podi : சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது! இந்த ஒரு பொடி மட்டும் போதும்! ஆரோக்கியமும் அள்ளித்தரும்!

தேவையான பொருட்கள்

புதினா – 2 கட்டு

பொட்டுக்கடலை – ஒரு கப்

பூண்டு – 10 பல் (உரலில் தட்டியது)

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கருப்பு உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

குறிப்புகள்

சாதத்துடன் சாப்பிடும்போது அன்னப்பொடியைவிட சுவை நிறைந்ததாக இருக்கும். ஏனெனில் இதில் உளுந்தைவிட அதிகளவில் பொட்டுக்கடலை பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்களுக்கு தேவைப்பட்டால் உளுந்தை இன்னும் அதிகரித்துக்கொள்ளலாம். இதனுடன் கடலைபருப்பு வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இவை சேர்க்கும்போது வித்யாசமாக சுவையில் இருக்கும். இதுபோல் செய்யும்போது அது சாதத்தைவிட டிபஃனுக்கு நன்றாக இருக்கும்.

இதை நீங்கள் பொடியாக்கும்போது கொரகொரப்பாக அல்லது நல்ல பொடியாக என எந்த பதத்தில் வேண்டுமானாலும் அரைத்துக்கொள்ளலாம். 

செய்முறை 

புதினாவை சுத்தம் செய்து நிழலில் வைத்து உலர்த்தி எடுத்துக்கொள்ளவேண்டும்.

பூண்டை நன்றாக உரலில் தட்டி எடுத்து வைத்துக்கொள்வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, அது சூடானவுடன் அதில் உளுந்து சேர்த்து சிவந்தவுடன், சீரகம் சேர்க்கவேண்டும்.

பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை, தட்டி வைத்த பூண்டு சேர்த்து அது லேசாக சிவந்தவுடன், மிளகாய்ப்பொடி சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் புதினாவையும் சேர்த்து நன்றாக சுருள வறுக்கவேண்டும். பின்னர் அனைத்தையும் நன்றாக ஆறவிடவேண்டும்.

பின்னர் ஒரு காய்ந்த மிக்ஸிஜாரில், பொட்டுக்கடலையை முதலில் சேர்த்து தனியாக பொடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்.

கல் உப்பு சேர்க்கிறீர்கள் என்றால் வறுக்கும்போது கடைசியாக சேர்த்து இரண்டு முறை பிரட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

சூப்பர் சுவையில் புதினா பொடி தயார். இது செரிமானத்துக்கு ஏற்றது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியது.

புதினாவில் உள்ள சத்துக்கள்

புதினாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபைட்டோநியூட்ரியன்ட்கள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், பாஸ்பரஸ், கால்சியம் ஆகிய அனைத்திலும் பாக்டீரியாவுக்கு எதிரான குணங்கள் உள்ளது.

இதில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள் உள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

புதினா இலைகளில் கலோரிகள் குறைவாக உள்ளது. புரதம் மற்றும் கொழுப்புச்சத்துக்கள் குறைவாக உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் அதற்கு புதினா இலைகளை பயன்படுத்தலாம்.

புதினாவின் நன்மைகள்

செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது.

குடலில் ஏற்படும் எரிச்சலைப் போக்குகிறது.

சுவாச பிரச்னைகளை மேம்படுத்துகிறது.

பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

மூளையின் ஆற்றலை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.

மனஅழுத்தத்தை குறைக்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும்போது ஏற்படும் வலியை போக்குகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

காலையில் எழுந்தவுடன் ஏற்படும் உடல் உபாதைகளைப் போக்குகிறது.

அலர்ஜியைப்போக்குகிறது.

ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

பக்கவிளைவுகள்

வாயுத்தொல்லை உள்ள நபர்கள் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். இது நுகர்வுக்கு ஏற்றதுதான் என்றாலும் அளவுக்கு மிஞ்சக்கூடாது. 

அல்சர் உள்ளவர்கள் இதை அதிகம் எடுக்கும்போது வயிற்றில் எரிச்சல் ஏற்படும். புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் மெந்தால் எண்ணெய் பயன்படுத்தும்போது குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். எனவே குழந்தைகள் கையில் படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.