தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Mint Chutney Mint Chutney How To Make It With Peanuts In A Different Taste Healthy To Eat Every Day

Mint Chutney : புதினா கார சட்னி– வேர்கடலை சேர்த்து வித்யாசமான சுவையில் செய்வது எப்படி? தினமும் சாப்பிட ஆரோக்கியம் உறுதி!

Priyadarshini R HT Tamil
Mar 11, 2024 10:47 AM IST

Mint Chutney : புதினா ரத்த கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இதில் பொட்டசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற எண்ணற்ற மினரல்கள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் கே எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இது அல்சைமர் நோயை குணப்படுத்த உதவுகிறது.

Mint Chutney : புதினா கார சட்னி– வேர்கடலை சேர்த்து வித்யாசமான சுவையில் செய்வது எப்படி? தினமும் சாப்பிட ஆரோக்கியம் உறுதி!
Mint Chutney : புதினா கார சட்னி– வேர்கடலை சேர்த்து வித்யாசமான சுவையில் செய்வது எப்படி? தினமும் சாப்பிட ஆரோக்கியம் உறுதி!

ட்ரெண்டிங் செய்திகள்

தக்காளி - 4

பச்சை மிளகாய் - 4

மிளகாய் வற்றல் - 3

புதினா - 1 கப்

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு பற்கள் - 4

புளி - சிறிது

கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு உளுந்து - 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அவை நிறம் மாறி பொரிந்து வரும்போது நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் லேசாக வதங்கியதும், மிளகாய் வற்றல் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவேண்டும். பின் பூண்டு பற்கள் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவேண்டும்.

இவை லேசாக வதங்கியதும், புதினா இலைகள் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். பின் புளி சேர்த்து வதக்கி அதோடு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.

பின் மூடி வைத்து, மிதமான சூட்டில் 7 நிமிடங்கள் வேகவிடவேண்டும். இடையில் திறந்து கலந்துவிடவேண்டும்.

இவையெல்லாம் லேசாக வெந்ததும் வறுத்த வேர்க்கடலை சேர்த்து அடுப்பை அணைக்கவேண்டும். பின் ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.

பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான உப்புடன் வதக்கியவற்றை இரண்டு பாகங்களாக சேர்த்து லேசாக அரைத்து பின் அரை கப் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த சட்னியை பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கலந்து கொள்ளவேண்டும்.

இந்த சட்னிக்கு வேர்க்கடலை சேர்க்காமலும் செய்யலாம்.

பஜ்ஜி, பணியாரத்துக்கு இந்த சட்னி கொஞ்சம் தண்ணியாக இருந்தால் நன்றாக இருக்கும்.

வதக்கும்போது சிறிது கொத்தமல்லித்தழையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இட்லி, தோசை, சப்பாத்திக்கு மட்டுமல்ல கட்லட், பன்னீர் 65, மஸ்ரூம் 65, கோபி 65க்கும் தொட்டுக்கொள்ள சுவை அள்ளும்.

புதினா செரிமானத் தரும் என்பதால்,நிறைய சாப்பிட்ட நாளில் இதுபோல் சட்னி செய்து சாப்பிட்டால்போதும், அதிகம் சாப்பிட்ட உணவு செரித்துவிடும்.

நன்றி – விருந்தோம்பல்.

புதினாவின் நன்மைகள்

மணம் நிறைந்த புதினா சட்னியை அடிக்கடி செய்து சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. புதினாவை நீங்கள் எளிதாக வீட்டு தோட்டத்திலே வளர்த்துவிடலாம். 

தேவைக்கு ஏற்பட கடைகளிலும் வாங்கிக்கொள்ளலாம். ஆண்டு முழுவதும் தடையற கிடைக்கும். அதனால் நினைத்த நேரத்தில் இந்த சட்னியை செய்துவிடலாம்.

புதினாவில் நிறைய நன்மைகள் உள்ளது. இதை நீங்கள் தினசரி உணவிலே சேர்த்துக்கொள்ளலாம். இது ஒரு மூலிகை தாவரம். இதில் கொழுப்பு சுத்தமாக இல்லை. அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதில் வைட்டமின்கள், உடலுக்கு தேவையான எண்ணெய் சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது.

புதினா ரத்த கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இதில் பொட்டசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற எண்ணற்ற மினரல்கள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் கே எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இது அல்சைமர் நோயை குணப்படுத்த உதவுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்