மனதில் நிறையும் மனம்! நாவில் நிறையும் சுவை! இறால் பிரியாணி செய்வது எப்படி?
மனதில் நிறையும் மனம்! நாவில் நிறையும் சுவை! இறால் பிரியாணி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
இறால் – ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி – 2 கப்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
பிரியாணி இலை – 1
அன்னாசி பூ – 1
வெங்காயம் – 4 நீளமாக நறுக்கியது
தக்காளி – 3 நறுக்கியது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – கைப்பிடி
புதினா இலை – கைப்பிடி
தேங்காய் பால் – 2 கப் நீர் சேர்த்தது
மசாலா விழுது அரைக்க தேவையான பொருட்கள்
பூண்டு – 12 பற்கள்
இஞ்சி – 2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 10
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
காய்ந்த மிளகாய் – 5
புதினா இலை – கைப்பிடியளவு
கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு
செய்முறை -
பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
இறாலை சுத்தம் செய்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு கழுவவேண்டும்.
சுத்தம் செய்த இறாலை உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து ஊறவைக்கவேண்டும்.
மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து, நல்ல விழுதாக அரைக்க வேண்டும்.
தேங்காயை அரைத்து, பிரியாணிக்கு தேவையான தேங்காய் பால் தயார் செய்துகொள்ள வேண்டும்.
பிரஷர் குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயம் பொன் நிறமானதும், அரைத்த மசாலா விழுது சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.
தக்காளி நன்றாக மசிந்த பின், இதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.
அடுத்து இதில் ஊறவைத்த இறால் சேர்த்து கிளறவேண்டும்.
குறைந்த தீயில், தேங்காய் பால் ஊற்றி கிளறவேண்டும்.
அடுத்து இதில் ஊறவைத்த அரிசி சேர்த்து கிண்டவேண்டும்.
குக்கரை ஆவி வந்ததும், வெயிட் போட்டு 8 நிமிடங்கள் வேகவைக்கவேண்டும்.
குக்கரின் பிரஷர் இறங்கியதும், திறக்கவேண்டும்.
சுவையான இறால் பிரியாணி தயார்.
நன்றி - ஹேமா சுப்ரமணியன்.
சூடாக பரிமாற வேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள சிக்கன் அல்லது மட்டன் கிரேவி அசைவத்தில் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் பச்சைப்பட்டாணி குருமா அல்லது உருளை, காளிஃபிளவர் குருமா சைவத்தில் சுவையாக இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பொதுவாக அசைவ உணவுகளில் கடல் உணவுகள் அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது. இறாலை தொக்கு, வறுவல் என செய்வதைவிட இதுபோல் பிரியாணியாக செய்தால், பிரியாணி பிடிக்காதவர்கள் கூட விரும்பு சாப்பிடுவார்கள். அடிக்கடி செய்து சாப்பிட்டு மகிழ்வீர்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்