தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Milk Powder Do You Want To Maintain Haemoglobin, Iron And Calcium In The Body Throughout Life This One Powder Is Enough

Milk Powder : வாழ்நாள் முழுவதும் ஹீமோகுளோபின், இரும்பு, கால்சிய சத்து உடலில் பராமரிக்க வேண்டுமா? இந்த ஒரு பொடி போதும்!

Priyadarshini R HT Tamil
Jan 10, 2024 03:30 PM IST

Milk Powder : வாழ்நாள் முழுவதும் ஹீமோகுளோபின், இரும்பு, கால்சிய சத்து உடலில் பராமரிக்க வேண்டுமா? இந்த ஒரு பொடி போதும்!

Milk Powder : வாழ்நாள் முழுவதும் ஹீமோகுளோபின், இரும்பு, கால்சிய சத்து உடலில் பராமரிக்க வேண்டுமா? இந்த ஒரு பொடி போதும்!
Milk Powder : வாழ்நாள் முழுவதும் ஹீமோகுளோபின், இரும்பு, கால்சிய சத்து உடலில் பராமரிக்க வேண்டுமா? இந்த ஒரு பொடி போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

(தாமரை விதையில் அதிகப்படியான கால்சியம், மெக்னீசியம், காப்பர் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. முடி உதிர்வை தடுக்கும். முதுமையை தள்ளிப்போடும். செரிமானத்திறனை அதிகரிக்கும். கால்களில் உள்ள எரிச்சலைக்குறைக்கும். மூட்டுவலி கை-கால் வலியை குறைக்கும். மனஅழுத்தத்தை குறைக்கும். ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும். நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் மலச்சிக்கல் நீங்கும்)

இந்த விதைகளை மிதமான தீயில் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துவிடவேண்டும்.

பாதாம் – ஒரு கப்

ஏலக்காய் – ஒரு கப்

(பாதாம் எலும்பை வலுவாக்கும். மூளை, முடி, சருமம் அனைத்துக்கும் நல்லது. இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் இ பார்வைத்திறனை அதிகரிக்க உதவும்)

இவையிரண்டையும் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

உப்புக்கடலை – ஒரு கைப்பிடி

(உப்புக்கடலை உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. தலைமுடி வளர உதவும். அதிகப்படியான இரும்புச்சத்துக்கள் உள்ளது)

இதையும் தோலோடு இரண்டு நிமிடங்கள் மட்டும் வறுத்துவிட்டு, தோலை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே வறுத்த ஒன்றுதான் என்பதால், இதை அதிகம் வறுக்க தேவையில்லை.

கசகசா – 2 ஸ்பூன்

(இதில் கால்சியம், மெக்னீசியம், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளது. அதனால், இது ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவுகிறது. உடலுக்கு உறுதியைக்கொடுக்கிறது. சருமத்தை பளபளப்பாக்கும்)

இதையும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுக்கு – ஒரு இன்ச்

(செரிமானத்திறனை அதிகரிக்கும். நறுமணம் தரும்)

சுக்கில் மேலே உள்ள தோலை நீக்கி தட்டி வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் முதலில் சுக்கு மட்டும் சேர்த்து பொடியாக்கிக்கொள்ள வேண்டும். சுக்கை பொடியாக்கும்போது அதில் நாராக உள்ள பகுதிகளை எடுத்துவிட்டு, பொடியை மட்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸ் ஜாரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் உலர் பேரிட்சை சேர்த்துக்கொள்ள வேண்டும். 10 பேரிட்சை பழங்களை விதைகளை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அனைத்தையும் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் ஓமம் சேர்த்துக்கொள்ளலாம். சிறிது மட்டும் வறுத்து ஓமத்தை அனைத்து பொருட்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளலாம்.

(சுவாச பிரச்னைகள் அனைத்தையும் சரிசெய்யும்)

(உலர் பேரிச்சை பழம் கை-கால் வலி, உடல் வலி, உடல் சோர்வு நீங்க உதவும். நார்ச்சத்து நிறைந்ததுள்ளதால் மலச்சிக்கலைப்போக்கும்)

செய்முறை

இதை தினமும் இரவில் உறங்கச்செல்வதற்கு ஒருமணி நேரம் முன்னர் சூடான பாலில் கலந்து பருகவேண்டும். தேவைப்பட்டால் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பருகலாம்.

இதனுடன் கட்டி கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை, தேன், வெல்லம் என எது வேண்டுமானாலும் சேர்த்து பருகலாம்.

இந்த பானம் ஹீமோகுளோபினை அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி பிரச்னைகளை சரிசெய்யும். உடலில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்தை அதிகரிக்கும். உடல் சோர்வு இருக்காது. முடி உதிர்வு பிரச்னை இருக்காது. அனைவரும் சாப்பிடலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்