தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Milk Paneer Masala : பால் சேர்த்த பன்னீர் மசாலா! வித்யாசமான சுவையில் சாப்பிட இப்டி செஞ்சு பாருங்க!

Milk Paneer Masala : பால் சேர்த்த பன்னீர் மசாலா! வித்யாசமான சுவையில் சாப்பிட இப்டி செஞ்சு பாருங்க!

Priyadarshini R HT Tamil
Apr 29, 2024 06:28 AM IST

Milk Paneer Masala : பால் சேர்த்த பன்னீர் மசாலா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Milk Paneer Masala : பால் சேர்த்த பன்னீர் மசாலா! வித்யாசமான சுவையில் சாப்பிட இப்டி செஞ்சு பாருங்க!
Milk Paneer Masala : பால் சேர்த்த பன்னீர் மசாலா! வித்யாசமான சுவையில் சாப்பிட இப்டி செஞ்சு பாருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

பன்னீர் - 200 கிராம்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

தக்காளி - 4

இஞ்சி - பூண்டு விழுது – 2 ஸ்பூன்

முந்திரி பருப்பு - 10

பிரியாணி இலை – 1

பட்டை - 2

கிராம்பு - 2

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

கஷ்மீரி மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்

கரம் மசாலா தூள் – 2 ஸ்பூன்

சர்க்கரை – ஒரு ஸ்பூன்

உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்

பால் – அரை கப்

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவேண்டும்.

முந்திரியையும் தனியாக சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும், பிரியாணி இலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவேண்டும்.

பின் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து மிதமான சூட்டில் வதக்ககவேண்டும்.

அவை லேசாக வதங்கியதும் கீறிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்.

அவை நன்றாக சுருண்டு வதங்கியதும், தக்காளி விழுதை சேர்த்து வதக்கவேண்டும்.

தக்காளி விழுது கெட்டியாக மாறும்போது மஞ்சள் தூள் மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவேண்டும்.

பின் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பிரட்டி அரைத்த முந்திரி விழுதை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவேண்டும்.

முந்திரி விழுது தக்காளி கலவையோடு நன்றாக சேர்ந்து வந்ததும் உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.

இப்போது சூட்டை குறைத்து காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கலந்து 2 நிமிடங்கள் லேசாக கொதி வந்ததும் இறக்கவேண்டும்.

ஈஸியான சுலபமான பன்னீர் மசாலா தயார்.

இதை சப்பாத்தி, பூரி, நாண், பராத்தா, பரோட்டா, குல்ச்சா, ஃபுல்கா என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

அனைத்து வகை பிரியாணி, ப்ரைட் ரைஸ், சீரக சாதம் என அனைத்துக்கும் தொட்டுக்கொள்ள ஏற்றது.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த ஈஸி பன்னீர் மசாலா உடலுக்கும் நல்லது. செய்வதும் எளிது. பெரியவர்களுக்கும் பிடிக்கும். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்