Migraine Problem : கண் பார்வை குறைபாடா? ஒற்றை தலைவலியா? ஒரே வாரத்தில் தீர்வு! இந்த ஒரு பொடி மட்டும் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Migraine Problem : கண் பார்வை குறைபாடா? ஒற்றை தலைவலியா? ஒரே வாரத்தில் தீர்வு! இந்த ஒரு பொடி மட்டும் போதும்!

Migraine Problem : கண் பார்வை குறைபாடா? ஒற்றை தலைவலியா? ஒரே வாரத்தில் தீர்வு! இந்த ஒரு பொடி மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Apr 05, 2024 12:20 PM IST

Migraine Problem : உடலில் தோன்றும் அனைத்து பிரச்னைகளுக்கும் தலைவலி மற்றும் உறக்கமின்மைதான் காரணம். இதை சரிசெய்தாலே போதும் உடலில் உள்ள அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.

Migraine Problem : கண் பார்வை குறைபாடா? ஒற்றை தலைவலியா? ஒரே வாரத்தில் தீர்வு! இந்த ஒரு பொடி மட்டும் போதும்!
Migraine Problem : கண் பார்வை குறைபாடா? ஒற்றை தலைவலியா? ஒரே வாரத்தில் தீர்வு! இந்த ஒரு பொடி மட்டும் போதும்!

முடி உதிர்வு, உடல் சோர்வு, மலச்சிக்கல் போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் மனஅழுத்தம் மற்றும் டென்சன்தான் காரணமாகிறது. இதனால் தூக்கமின்மை ஏற்படும். இதை சரிசெய்தால் உங்கள் உடல் சுறுசுறுப்பாகும்.

தேவையான பொருட்கள்

கொப்பரை தேங்காய் – 1

(நரம்பு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கொடுக்கும். ஒற்றை தலைவலியை சட்டென்று சரிசெய்யும். நல்ல ஒரு ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும். உடல் வலி, உடல் சோர்வு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும். குறிப்பாக கண் தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தரும்)

கசகசா – 20 கிராம்

கசகசாவில் அதிகளவில் கால்சியம் சத்து உள்ளது. இது மனஅழுத்தம் மற்றும் டென்சனை குறைக்கும். ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும். தலைவலி தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு தரும். கண்பார்வை திறனைக் கொடுக்கும்)

பாதாம் – 20 கிராம்

(வைட்டமின் இ சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நரம்பு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வைத்தரும்)

பால் – முக்கால் லிட்டர்

(பசும்பால் கிடைத்தால் நல்லது. இல்லாவிட்டால் பாக்கெட் பால் எடுத்துக்கொள்ளலாம்)

வெண் மிளகு – ஒரு ஸ்பூன்

வெள்ளை மிளகு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது கண் பார்வைத்திறனை அதிகரிக்கும். நரம்பு தொடர்பான பிரச்னைகளைத்தீர்க்கும். மனஅழுத்தம், டென்சன் ஆகிய அனைத்தையும் குறைக்கும். ஒற்றைத்தலைவலியை சரிசெய்யும்)

கட்டி கற்கண்டு – கால் கப்

(சர்க்கரை நோய் உள்ளவர்கள் கற்கண்டு சேர்க்கக்கூடாது. மற்றவர்கள் சேர்க்கலாம். ஆனால் டைமண்ட் கற்கண்டு கிடையாது)

செய்முறை

கொப்பரை தேங்காயை நன்றாக அலசி, துடைத்து, நடுவில் சிறியதாக வெட்டி ஒரு துவாரம்போல் அமைத்துவிடேவேண்டும். அந்த துவாரம் வழியாக கசகசா மற்றும் பாதாம் பருப்பு இரண்டையும் உள்ளே போட்டு வெட்டி எடுத்த பாகத்தை வைத்து மூடிவிடவேண்டும்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் முக்கால் லிட்டர் பாலை சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். அதில் இந்த பாதாம், கசகசா நிரப்பிய தேங்காயை சேர்த்து, அவை வெளியே வந்து விடமால் வேகவைக்க வேண்டும். பால் நன்றாக குறையவேண்டும்.

பின்னர் வெந்த கொப்பரை தேங்காயை வெளியே எடுத்து, ஆறவைத்து, வெளிப்புறத்தை நன்றாக சுத்தம் செய்துவிடவேண்டும். பின்னர் அதை இரண்டாக வெட்டினால், உள்ளே போடப்பட்ட அனைத்தும் வெந்திருக்கும்.

அந்த தேங்காயையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில், தேங்காய் மற்றும் வேகவைத்த கசகசா, பாதாம் மற்றும் வெண் மிளகு அனைத்தையும் சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் கற்கண்டையும் பொடித்து, இந்தகலவையுடன் சேர்த்து கலந்து, இதை வெளியிலேயே வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் மட்டும் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். 10 நாள் வரை வெளியில் வைத்துக்கொள்ளலாம். அதிக நாள் வைத்துக்கொள்ள வேண்டுமெனில் ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.

இரவு உறங்கச்செல்லும் முன் இந்தப்பொடியை ஒரு ஸ்பூன் மிதமான சூட்டில் உள்ள பாலில் கலந்து பருகலாம் அல்லது ஒரு ஸ்பூன் வாயில் போட்டு அப்படியே சாப்பிடலாம். பாலில் சேர்த்து பருகினால் தூக்கம் நன்றாக வரும்.

இதை ஒரு வாரம் செய்தாலே உங்களுக்கு வித்யாசம் தெரியும். ஒற்றைத்தலைவலி, டென்சன், மனஅழுத்தம் போன்ற அனைத்தும் குணமாகும். ஆழ்ந்த உறக்கம் வரும்.

உடலில் தோன்றும் அனைத்து பிரச்னைகளுக்கும் தலைவலி மற்றும் உறக்கமின்மைதான் காரணம். இதை சரிசெய்தாலே போதும் உடலில் உள்ள அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.