Migraine Overview : ஒற்றைத்தலைவலி ஏற்படும் முன்னரே தோன்றும் அறிகுறிகள் இவைதான்! எச்சரிக்கை அவசியம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Migraine Overview : ஒற்றைத்தலைவலி ஏற்படும் முன்னரே தோன்றும் அறிகுறிகள் இவைதான்! எச்சரிக்கை அவசியம்!

Migraine Overview : ஒற்றைத்தலைவலி ஏற்படும் முன்னரே தோன்றும் அறிகுறிகள் இவைதான்! எச்சரிக்கை அவசியம்!

Priyadarshini R HT Tamil
Published Jun 24, 2024 07:00 AM IST

Migraine Overview : ஒற்றைத்தலைவலி ஏற்படும் முன்னரே தோன்றும் அறிகுறிகள் இவைதான். எனவே நீங்கள் ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுகிறீர்களா என தெரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

Migraine Overview : ஒற்றைத்தலைவலி ஏற்படும் முன்னரே தோன்றும் அறிகுறிகள் இவைதான்! எச்சரிக்கை அவசியம்!
Migraine Overview : ஒற்றைத்தலைவலி ஏற்படும் முன்னரே தோன்றும் அறிகுறிகள் இவைதான்! எச்சரிக்கை அவசியம்!

சிலருக்கு ஒளி, ஒலியை கேட்பதும், பார்ப்பதிலும் பிரச்னைகள் ஏற்படும். ஒற்றைத்தலைவலி பல மணி நேரங்கள் முதல் ஒரு சில நாட்கள் வரை ஏற்படும். வலி கடுமையானதாக இருக்கும். இது உங்கள் தினசரி நடவடிக்கைகளை பாதிக்கும்.

ஒற்றைத்தலைவலியால் கண் கோளாறுகள் மற்றும் சோர்வு, முகத்தில் ஒரு பக்கத்தில் அல்லது கை மற்றும் கால்களில் ஒரு புறத்தில் கூச்ச உணர்வு ஏற்படும். இதற்கு மருந்துகள் உதவும். ஆனாலும் சில வீட்டு மருத்துவ முறைகளையும் பின்பற்றவேண்டும்.

அறிகுறிகள்

ஒற்றை தலைவலி வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் உங்கள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அது உங்களுக்கு ஒற்றை தலைவலி வரப்போகிறது என்பதை முன்னரே உணர்த்துவதாக இருக்கும்.

மலச்சிக்கல்

மனமாற்றங்கள், மனஅழுத்தம் முதல் பரவச உணர்வு வரை ஏற்படும்

உணவு சாப்பிடும் ஆர்வம்

கழுத்து திருப்ப முடியாமல் விறைத்துக்கொள்வது

அடிக்கடி சிறுநீர் கழிப்புது

அடிக்காடி கொட்டாவி விடுவது

நீர்க்கட்டி ஆகியவை ஏற்படும்

கண் பாதிப்பு

ஒற்றை தலைவலி உள்ளவர்களுக்கு கண்களில் பாதிப்பு எளிதாக ஏற்படும். ஒற்றைத் தலைவலியின்போது, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். 

கண் பார்வையில் பாதிப்பை அவை ஏற்படுத்தினாலும், மற்ற சில பிரச்னைகளையும் அவை ஏற்படுத்தும். ஒவ்வொரு அறிகுறியும் சில நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை இருக்கும்.

ஒற்றைத்தலைவலியால் ஏற்படும் பிரச்னைகள்

கண்களில் பிரச்னைகள், பார்வையில் தெளிவின்மை, வடிவங்கள் தெரியாதது போன்றவை ஏற்படக்கூடும்.

பார்வையிழப்பு.

கை மற்றும் கால்களில் குத்தல்

சோர்வு, முகத்தில் மயக்கம், உடலின் ஒரு பகுதியில் சோர்வு

பேசுவதில் சிக்கல்

ஒற்றைத்தலைவலி ஏற்படும் கால அளவு

சில ஒற்றைத்தலைவலிகள் 4 முதல் 72 மணி நேரம் வரை இருக்கும். அதற்கு நீங்கள் சரியாக சிகிச்சையளிக்கவில்லையென்றால், மிகவும் கடினம். இது நபருக்கு நபர் வேறுபடும். ஒரு மாதத்தில் எப்போதாவது பலமுறை ஏற்படும்.

ஒற்றைத்தலைவலியின்போது,

தலையின் ஒருபுறத்தில் வலி, சில நேரங்களில் இரண்டு புறத்திலும் வலிக்கும்.

துடிக்கும் அளவுக்கு வலி

ஒளியைப் பார்க்க முடியாது. ஒலியை கேட்க முடியாது. நறுமணத்தை நுகர முடியாது. பொருட்களை தொடமுடியாது.

வாந்தி மற்றும் மயக்கம்.

ஒற்றைத்தலைவலி ஏற்பட்ட பின் என்னவாகும்?

ஒற்றை தலைவலி ஏற்பட்ட பின்னர் நீங்கள் முற்றிலும் தன்னிலை இழப்பீர்கள். ஒருவித குழப்பம் நிகழும். ஒரு நாள் முழுவதும் முடங்கிவிடும். 

ஒற்றைத்தலைவலி ஏற்பட்ட பின்னர் நீங்கள் தலையை உடனடியாக அசைத்தால், மீண்டும் தலைவலி ஏற்படலாம். சிலருக்கு பரவச நிலை உண்டாகும்.

எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்?

ஒற்றைத்தலைவலி பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதில்லை. எனவே இந்த அறிகுறிகள் உங்களுக்கு எப்போதும் ஏற்பட்டால், அதுகுறித்து குறித்துவைத்துக்கொள்ளுங்கள. 

அவற்றுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்கிறீர்கள் என்பதையும் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மருத்துவரிடம் இதுகுறித்து ஆலோசியுங்கள்.

உங்களுக்கு ஏற்படும் தலைவலியில் மாற்றம் காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகவும்

இடி இறங்கியது போன்ற கடும் தலைவலி ஏற்பட்டால்

தலைவலியுடன் காய்ச்சல், கழுத்தை அசைக்க முடியாத நிலை, குழப்பம், வலிப்பு நோய், பார்வை மங்கலாகவோ அல்லது இரண்டாகவோ தெரிந்தால், உடலின் எந்த பாகத்திலும் சோர்வு மற்றும் மறத்துப்போனால், இது பக்கவாதம் ஏற்படும் அறிகுறியாகும்.

தலையில் காயம் ஏற்பட்டவுடன் தலைவலி ஏற்பட்டால்

நாள்பட்ட தலைவலி, இருமல் அல்லது திடீரென திரும்பியபின் மோசமானால்

50 வயதுக்குப்பின்னர் தலைவலி ஏற்பட்டால்

இவையெல்லாம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.