தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Mental Health Ways To Change Your Mood In A Minute To Be Happy

Mental Health : சோர்ந்திருக்கும்போது நிமிடத்தில் உங்கள் மனநிலையை மாற்றி, மகிழ்ச்சியாக இருக்க வழிகள்!

Priyadarshini R HT Tamil
Jan 07, 2024 12:00 PM IST

Mental Health : சோர்ந்திருக்கும்போது நிமிடத்தில் உங்கள் மனநிலையை மாற்றி, மகிழ்ச்சியாக இருக்க வழிகள்!

Mental Health : சோர்ந்திருக்கும்போது நிமிடத்தில் உங்கள் மனநிலையை மாற்றி, மகிழ்ச்சியாக இருக்க வழிகள்!
Mental Health : சோர்ந்திருக்கும்போது நிமிடத்தில் உங்கள் மனநிலையை மாற்றி, மகிழ்ச்சியாக இருக்க வழிகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

உங்களுக்கு பிடித்த இசை குறிப்பாக துள்ளல் இசையை கேளுங்கள்

உங்களுக்கு பிடித்த மற்றும் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் இசையை கேளுங்கள். இசைக்கு இருக்கும் அதிபயங்கர சக்தி உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களின் மனநிலையையும், மனதில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.

ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள்

உங்கள் சுவாசத்தின் மீது கவனம் செலுத்துங்கள். ஆழ்ந்த மூச்சை இழுத்து பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். இது உங்கள் மனஅழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு வழி. மனதில் அமைதியை ஏற்படுத்தும்.

நடனம் அல்லது உடற்பயிற்சி

நீங்கள் நடனமாடும்போது, உங்கள் உடல் எண்டோர்ஃபின்களை வெளியேற்றுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக்கும் இயற்கை வழி. நடனம் ஆட கூச்சப்படுபவர்களாக இருந்தால், சிறிய நடைப்பயிற்சி அல்லது ஏதேனும் உடற்பயிற்சிக்கூட போதும். இதுவும் உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்

உங்கள் வாழ்க்கையில் நடந்த நேர்மறையான நிகழ்வுகளை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு டைரி அல்லது பேப்ரில் எழுதி அதற்கு நன்றி தெரிவியுங்கள். நன்றியுணர்வும், மகிழ்ச்சியும் தொடர்புடையது.

உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் தொடர்பில் இருங்கள்

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். அவர்களுடன் பேசுங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.

மகிழ்ச்சியுடன் இருங்கள்

மகிழ்ச்சியான வீடியோக்கள் பாருங்கள். ஜோக்குகளை படியுங்கள். உங்கள் மகிழ்விப்பவர்களுடன் நேரம் செலவிடுங்கள். சிரிப்பில் அதிகளவிலான உடல் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அது உடனடியாக உங்கள் மனநிலையை மாற்றும்.

உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்

பொழுதுபோக்கு மற்றும் உங்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடுங்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவரும். எழுதுவது, ஓவியம், வாசிப்பு, இசைக்கருவி வாசிப்பது மற்றும் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யும்போது அது உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

சூரிய வெளிச்சத்தில் குளியுங்கள்

வெளியில் குறிப்பாக சூரியஒளியில் மூழ்கியிருங்கள். இது உடல் செரோட்டினினை சுரக்க உதவும். இந்த நியூரோடிரான்ஸ்மிட்டர்தான் உங்கள் மனநிலையை நிர்ணயிக்கிறது.

பிறரிடம் அன்பு காட்டும்

யாருக்கேனும் உதவி அல்லது அன்பாக ஏதேனும் செய்யுங்கள். அது அவர்களுக்கு நன்மையளிப்பதோடு உங்களின் மனநிலையையும் மாற்றும். உங்களுக்கு முழுமையான உணர்வைக்கொடுக்கும்.

தியானம் செய்யுங்கள்

இந்த நேரத்தில் சிறிது நேரம் கவனம் செலுத்துங்கள். தியானம் உங்களுக்கு மனஅமைதியை வழங்கும். தியானம் உங்கள் மனநிலையை மேம்படும்ம உதவும்.

ஒவ்வொருவரும் வேறானவர்கள்

ஒவ்வொருவரும் தனியானவர்கள். எனவே யாருக்கு எது பிடிக்குமோ அல்லது தேவையோ அதை செய்வது சிறந்தது. இங்கே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இரண்டு அல்லது மூன்று செயல்பாடுகளை சேர்த்து செய்தும் உங்கள் மனநிலையை மாற்ற முயற்சிக்கலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்