தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Mental Health Do You Want To Be Mentally Courageous Here Are The Ways To Do That

Mental Health : நீங்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டுமா? அதற்கான வழிகள் இதோ!

Priyadarshini R HT Tamil
Jan 08, 2024 02:18 PM IST

Mental Health : நீங்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டுமா? அதற்கான வழிகள் இதோ!

Mental Health : நீங்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டுமா? அதற்கான வழிகள் இதோ!
Mental Health : நீங்கள் மன தைரியத்துடன் இருக்க வேண்டுமா? அதற்கான வழிகள் இதோ!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர்கள் வாழ்க்கையில் கடந்து சென்றுவிடுவார்கள்

மனதைரியத்துடன் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே செல்வார்கள். அவர்கள் துணிவுடன் வாழ்க்கையை எதிர்கொள்வார்கள். அவர்களுக்கு வரும் சவால்களை எதிர்கொண்டு அவர்களிடம் உள்ள சிறப்பை வெளிக்கொண்டுவரும். அவர்கள் கடந்த காலத்தில் இருந்தாலும், அதை எளிதாக கடந்து சென்றுவிடுவார்கள். மாறாக அவர்கள், வாழ்க்கை என்ன வைத்திருக்கிறதோ என்பதை நோக்கி செல்வார்கள்.

அவர்களை மாற்றத்தை விரும்புவார்கள்

மன தைரியத்துடன் வாழ்வின் அத்தனை மாற்றங்களையும் அவர்கள் கடந்துசெல்வார்கள். அவர்கள் மற்றவர்களைப்போலன்றி மனதளவில் கொஞ்சம் கடுமையாக இருப்பார்கள். அவர்கள் மாற்றத்தை வரவேற்பவர்களாக இருப்பார்கள். மாற்றம் வருவதை தடை செய்ய மாட்டார்கள். அதை வளர்ச்சிக்கான படியாக பார்ப்பார்கள்.

எது வந்தபோதும் மகிழ்ந்திருப்பார்கள்

இவர்கள் நேர்மறையான சிந்தனைகளையும், உற்சாக மனநிலையையும் கொண்டிருப்பார்கள். இதுதான் மனஉறுதி நிறைந்தவர்களின் நிலையாக இருக்கும். அவர்கள் தவறுகளை நேரடியாக ஏற்பார்கள். எதிர்மறையில் உழல்வதை தவிர்ப்பார்கள். அவர்கள் வாழ்வில் அவர்கள் சந்திக்க நேரிடும் எதிர்மறை எண்ணங்களையும், தடைகளையும் கண்டு அஞ்சமாட்டார்கள். ஆனால் அவை அவர்களை ஆக்கிரமிக்க விடமாட்டார்கள். மனநிறைவு மனஉறுதியின் முக்கிய அறிகுறியாகும்.

ஆபத்துக்களை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள்

மனஉறுதியுடன் இருப்பவர்கள், தனிப்பட்ட வளர்ச்சிக்காக பாடுபடுவார்கள். இவர்கள் ஆபத்துக்களை எதிர்கொள்வார்கள். முடிவுகளை எடுப்பார்கள். சவால்களுக்கு வெட்கப்படமாட்டார்கள். ஆபத்துக்களுக்கு அஞ்சமாட்டார்கள். வாழ்வில் வரும் ஏமாற்றங்களின் வழியே தொடர்ந்து முன்னேறிக்கொண்டே செல்வார்கள்.

இவர்கள் நிபுணர்களிடம் இருந்து கற்பார்கள்

தைரியமான முடிவுகளை எடுப்பதற்கு அவர்களுக்கு ஆழ்ந்த புரிதல் வேண்டும். சரியான துறையில் அவர்கள் அறிவு பெற்றிருக்க வேண்டும். மனஉறுதி பெற்றவர்கள் அவர்களின் துறையில் வல்லுனர்களிடம் இருந்து கற்றுக்கொள்வார்கள் மற்றும் அறிவு பெறுவார்கள். நிபுணர்களிடம் இருந்து கற்பது பலவீனமல்ல என்று கருதுவார்கள். இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும்.

அவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்கள் மீது முதலீடு செய்வார்கள்

மனஉறுதி கொண்டவர்கள், நீண்ட கால நலனுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். அவர்கள் எதிர்காலத்துக்கு திட்டமிடுவார்கள். அவர்களை முன்னேற்றிக்கொள்ள நேரத்தை செலவிட்டு, திறன்களை வளர்த்துக்கொள்வார்கள். புதிய திறன்களை வளர்ப்பது, சவால்களை சந்திப்பது, எதிர்காலத்துக்கு தயாராவது, தனிப்பட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவது என முன்னேறிக்கொண்டே செல்வார்கள்.

துவங்கியது முதல் இப்போது வரை

நீங்கள் பெற்றோர் அல்லது தனிநபர் என யாராக இருந்தாலும் உங்களுக்கு இது உதவும். இந்த குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் போதும். இது நிச்சயம் உங்களை முன்னேற்றும். இதன் மூலம் நீங்கள் ஒரு நல்வாழ்வை வாழலாம். உங்களின் மனஉறுதியுடனான வாழ்வு இங்கு துவங்குகிறது. பின்பற்றி மனஉறுதிபெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்